என் மலர்
நீங்கள் தேடியது "Engine Driver"
- மின்சார ரெயில் புளியமங்கலம், மோசூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றி செல்லும்.
- ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் ரெயில் நிற்காமல் சென்றதால் அதிர்ச்சிடைந்தனர்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 6.40 மணிக்கு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த மின்சார ரெயில் புளியமங்கலம், மோசூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றி செல்லும்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல அரக்கோணத்தில் இருந்து ரெயில் புறப்பட்டது. ஆனால் புளியமங்கலம், மோசூர் ரெயில் நிலையங்களில் மின்சார ரெயில் நிற்காமல் சென்றது. ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் ரெயில் நிற்காமல் சென்றதால் அதிர்ச்சிடைந்தனர்.
இதுகுறித்து பயணிகள் ரெயில்வே அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் ரெயில் திருவள்ளூர் சென்றவுடன் ரெயில்வே அதிகாரிகள் டிரைவரை மாற்றி வேறு ஒரு டிரைவரை மூலம் ரெயில் இயக்கப்பட்டது. இது சம்பந்தமாக ரெயில்வே துறை அதிகாரிகள் டிரைவரிடம் தூக்க கலக்கத்தில் ரெயிலை இயக்கினாரா? அல்லது கவனக்குறைவால் நடந்ததா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- யுகேந்திரன் எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது நடைமேடையில் நிறுத்தினர்.
- பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கி புறநகர் மின்சார ரெயில் மூலமாக சென்னைக்கு வந்தனர்.
திருவள்ளூர்:
திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு சப்தகிரி விரைவு ரெயில் வந்து கொண்டு இருந்தது. என்ஜின் டிரைவராக யுகேந்திரன் இருந்தார்.
ரெயில் திருவள்ளூர் அருகே வந்து கொண்டு இருந்தபோது என்ஜின் டிரைவர் யுகேந்திரனுக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து ரெயிலை இயக்க முடியாத நிலை உருவானது.
இதற்குள் இரவு 9 மணியளவில் ரெயில் திருவள்ளூர் ரெயில் நிலையம் வந்தது. இதையடுத்து டிரைவர் யுகேந்திரன் எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது நடைமேடையில் நிறுத்தினர்.
பின்னர் அவர் தனது உடல்நிலை குறித்து சென்னையில் உள்ள ரெயில்வே அதிகாரிகளுக்கும், திருவள்ளூரில் உள்ள அதிகாரிகளுக்கும் தெரிவித்தார்.
பின்னர் உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
ரெயில் நீண்டநேரம் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நின்றதால் அதில் இருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ஏராளமான பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கி புறநகர் மின்சார ரெயில் மூலமாக சென்னைக்கு வந்தனர்.
பின்னர் இரவு 10.15 மணியளவில் சென்னையில் இருந்து வந்த மற்றொரு என்ஜின் டிரைவர் நிறுத்தப்பட்ட சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை சென்னை நோக்கி ஓட்டி வந்தார்.
மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் காந்திதாம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலையில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் பால்கர் மாவட்டம் வசாய்-நாலச்சோப்ரா ரெயில் நிலையங்களுக்கிடையே வந்த போது திடீரென நடுவழியில் நின்றது.
பின்னர் என்ஜின் டிரைவர் கீழே இறங்கி சிறுநீர் கழித்து விட்டு வந்தபின் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இதனை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து உள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ரெயில் நிலையத்தில் பாயிண்ட்ஸ் மேன்களாக ராம்குமார், நந்தகோபால், தினேஷ் ஆகியோர் பணியாற்றுகிறார்கள். நேற்று காலை என்ஜின் டிரைவர் பிரணவ் காலி பெட்டிகளுடன் கூடிய ரெயிலை ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்துக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது பாயிண்ட்ஸ் மேன்கள் காட்டிய சிக்னல் சரிவர தெரியவில்லை என என்ஜின் டிரைவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது என்ஜின் டிரைவர் பிரணவுக்கும் பாயிண்ட்ஸ்மேன்கள் ராம்குமார், நந்தகோபால், தினேஷ் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்த பிரணவ், நந்தகோபால், தினேஷ், ராம்குமார் ஆகிய 4 பேரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது குறித்து மயிலாடுதுறை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews