என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "English Literature Forum"
- திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பாக ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது.
- பொருளியல் துறைத்தலைவர் மாலைசூடும் பெருமாள் சிறப்புரை ஆற்றினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பாக ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவின் அமைப்பாளர் பேராசிரியர் கவிதா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் மகேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். பொருளியல் துறைத்தலைவர் மாலைசூடும் பெருமாள் சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி, பேராசிரியர்கள் ராமஜெயலட்சுமி, ரீட்டா யசோதா, சத்தியலெட்சுமி, சோலா பெர்ணன்டோ, லெனின், முனிஸ்வரி, பர்வதவர்தினி, மோதிலால் தினேஷ், தாவீதுராஜா, பாரதி, முகம்மது முகைதீன் காதரியா மற்றும் மாணவ செயலாளர்கள் சிவகணேஷ், அஜித்செல்வன், சந்தோஷ் ஜோசப், மதன்குமார் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். ஆங்கிலத்துறையை சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அமைப்பு செயலர் பேராசிரியர் உதயவேல் நன்றி கூறினார்.
- தலைமை ஆசிரியா் கணேசன் தலைமை வகித்தாா். ஆசிரியா் ரேணுகாதேவி வரவேற்றாா்.
- ஆங்கிலக்கல்வியின் இன்றியமையாமை குறித்து மாணவா்களின் விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது
உடுமலை,ஆக.27-
உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் கணேசன் தலைமை வகித்தாா். ஆசிரியா் ரேணுகாதேவி வரவேற்றாா். இதில் பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரி விரிவுரையாளா் சேகா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆங்கில கல்வி கற்க வேண்டியதன் அவசியம் பற்றியும், எளிமையாக ஆங்கிலம் கற்பது எப்படி என்பது பற்றியும் சிறப்புரை ஆற்றினாா்.
சுற்றுச்சூழல் விழிப்புணா்வு குறித்தும், தூய்மை பாரதம் பற்றியும் மாணவா்கள் பேசினா். தொடா்ந்து ஆங்கிலக்கல்வியின் இன்றியமையாமை குறித்து மாணவா்களின் விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது. மேலும் ஆங்கிலம் தொடா்பான வினாக்கள் கேட்கப்பட்டு சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் சரவணன் நன்றி கூறினாா்.