என் மலர்
நீங்கள் தேடியது "Ennore Gas Leak"
- பதற்றம் அடைந்த பொதுமக்கள் தங்களை வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
- தொழிற்சாலையின் திரவ அமோனியம் எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது.
சென்னை:
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.
இதனால் பதற்றம் அடைந்த பொதுமக்கள் தங்களை வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் பதற்றம் அடையாமல் வீடுகளுக்கு செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
இதனிடையே, எண்ணூர் கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனியார் தொழிற்சாலையின் திரவ அமோனியம் எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது.
ஆலை வாசலில் காற்றில் 400 microgram/m3 ஆக இருக்க வேண்டிய அமோனியா, 2090 microgram/m3 ஆகவும் கடலில் 5mg/L ஆக இருக்க வேண்டிய அமோனியா 49mg/L இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே குழாயை இயக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், அமோனியம் வாயு வெளியேறிய தனியார் தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலையின் நுழைவுவாயிலில் நிறுத்தப்பட்டிருந்த போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.
#WATCH | Tiruvallur, Tamil Nadu: People hold protest after Ammonia gas leak was detected in a sub-sea pipe in Ennore.
— ANI (@ANI) December 27, 2023
According to DIG, Joint Commissioner Avadi, Vijayakumar, there are no more gas (ammonia) leaks at Ennore. People are back home. Medical and police teams are… pic.twitter.com/APYymkgY6X
முதியோர்கள், பெண்கள் முககவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- வாயு கசிவு குறித்து தொழிற்சாலை நிறுவனம் எந்த முன் அறிவிப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. சாலையில் சென்றவர்கள் தான் வீட்டு கதவுகளை தட்டி வெளியே வருமாறு கூறினர். அதன்பின்னரே வாயு கசிவு விவரம் குறித்து தங்களுக்கு தெரியவந்ததாக கூறினர். மேலும் கடலில் வாயு கசிந்ததால் வாழ்வாதாரம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.
#WATCH | Tamil Nadu | Ammonia gas leak detected in a sub-sea pipe in Ennore. This was noticed and stopped. The production head says the leak caused a strong smell and five people felt uneasy and were shifted to a health facility. They are fine now: Officials pic.twitter.com/bhCE0vjWSF
— ANI (@ANI) December 27, 2023
- தற்போது அமோனியா கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
சென்னை:
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தனியார் உர தொழிற்சாலை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நேற்றிரவு 11.30 மணியளவில் அமோனியா இறக்கும் சப்ளை பைப் லைனில் கசிவு ஏற்பட்டது. தற்போது அமோனியா கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
அமோனியா அமைப்பு வசதியை தனிமைப்படுத்தி குறுகிய காலத்தில் நிலைமையை இயல்பு நிலைக்கு கொணடு வந்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
- தொழிற்சாலையில் நடைபெறும் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.
சென்னை :
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தனியார் உர தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தொழிற்சாலையில் நடைபெறும் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், ஆய்வுக்குழுவால் தொழிற்சாலையில் ஆய்வு செய்த பிறகு தாக்கல் செய்யப்படும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
- மக்கள் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அரசு முன்வர வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை எண்ணூரை அடுத்த பெரியக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் கோரமண்டல் இன்டர்நேஷனல் என்ற உர நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் அப்பகுதியில் உள்ள சின்னகுப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் ஆகிய கிராமங்களில் கடுமையான நெடி பரவி வருகிறது.
அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு மயக்கம், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. 30-க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தனியார் தொழிற்சாலையின் அலட்சியம் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகளால் ஏற்பட்டு உள்ள இந்த பாதிப்பு அதிர்ச்சியளிக்கிறது.
எண்ணூர் துறைமுகத்தில் கப்பல்களில் இருந்து ஆலைக்கு அமோனியா வாயு கொண்டு வருவதற்கான குழாய் சேதமடைந்தது தான் வாயுக்கசிவுக்கு காரணம் ஆகும். எண்ணெய் கசிந்ததால் பொதுமக்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் முழுமையாக களையப்படாத நிலையில் அடுத்து வாயுக்கசிவு ஏற்பட்டிருக்கிறது. எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் போதிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.
கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனத்திலிருந்து வாயுக்கசிவு ஏற்படுவது இது முதல் முறையல்ல என்றும் கடந்த காலங்களில் இதே போல் பல முறை வாயு கசிவு ஏற்பட்டிருப்பதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எண்ணூர் உள்ளிட்ட வட சென்னை பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்துத் தொழிற்சாலைகளிலும், குறிப்பாக வேதி ஆலைகளில் தமிழக அரசு மற்றும் மாசுக் குட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதில் தேர்ச்சி பெறாத ஆலைகளின் செயல்பாடுகளை, அவை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். எண்ணூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் அமோனியா வாயுக்கசிவால் ஏற்பட்ட பாதிப்புகளை அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தனியார் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- எண்ணூர் எண்ணெய் கழிவு தொடர்பான வழக்கையும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தை தொடர்ந்து தனியார் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அம்மோனியா கசிவு தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. ஜனவரி 2-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
எண்ணூர் எண்ணெய் கழிவு தொடர்பான வழக்கையும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
- குழந்தைகள் உள்பட யாருக்கும் தீவிர பாதிப்பு இல்லை.
- பெரியகுப்பம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மருத்துவ முகாமும் நடைபெற்று கொண்டிருக்கிறது.
சென்னை:
சென்னை எண்ணூர் கோரமண்டல் உர ஆலையில் இருந்து வெளியேறிய அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
* எண்ணூரில் இரவு ஏற்பட்ட வாயு கசிவால் கண்ணெரிச்சல் உள்ளிட்ட உபாதைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 பேர் நலமுடன் உள்ளனர், விரைவில் வீடு திரும்புவர்.
* குழந்தைகள் உள்பட யாருக்கும் தீவிர பாதிப்பு இல்லை. யாரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவில்லை.
* பெரியகுப்பம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மருத்துவ முகாமும் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்ட போது ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- வாயு கசிவு போன்ற சம்பவங்களால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
சென்னை :
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்ட போது ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வடசென்னை பகுதியில் கடந்த சில நாட்களாக நிகழும் எண்ணெய் கசிவு, வாயு கசிவு போன்ற சம்பவங்களால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
- எண்ணூரில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான வாயு கசிவு சம்பவத்திற்கு மிகுந்த கவலை தெரிவித்தார்.
- பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினார்.
சென்னை :
கவர்னர் மாளிகை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கவர்னர் ஆர்.என்.ரவி, வடசென்னை எண்ணூரில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான வாயு கசிவு சம்பவம் குறித்து மிகுந்த கவலை தெரிவித்ததோடு, அதில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினார் என கூறப்பட்டுள்ளது.
ஆளுநர் ரவி அவர்கள், வடசென்னை எண்ணூரில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான #வாயுகசிவு சம்பவம் குறித்து மிகுந்த கவலை தெரிவித்ததோடு, அதில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினார்.@PMOIndia @HMOIndia @pibchennai @DDNewsChennai @airnews_Chennai
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 27, 2023
- இந்த விபத்தில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை :
சென்னை தண்டையார்பேட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்று எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவரின் பெயர் பெருமாள் வயது (52) கரிமேடு பகுதியை சேர்ந்தவர்.
பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்ட போது ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடனடியாக அப்பகுதிக்கு மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சென்று, பரிசோதனை நடத்தினர்.
- தனியார் கம்பெனி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.
திருச்சி:
சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வாயு கசிவு ஏற்பட்டது குறித்து சுற்று சூழல் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:-
அமோனியா கசிவு ஏற்பட்ட நிலையில் 15 நிமிடத்தில் ஆலை நிர்வாகம் அதனை சரி செய்துள்ளது. இந்த வாயு கசிவால் 18 பேர் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனடியாக அப்பகுதிக்கு மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சென்று, பரிசோதனை நடத்தினர்.
அப்போது அப்பகுதியில் பூஜ்யம் சதவீதம் அமோனியா இல்லை என்று கண்டறியபட்டது. எனவே விபத்து ஏற்பட்ட போதிலும் அது உடனடியாக சரிசெய்யபட்டது.
அந்த தனியார் தொழி சாலை ரெட் கேட்டகிரியில் உள்ளது. இதே போல ரெட் கேட்டகிரியில் இருக்கும் அனைத்து தொழிற்சாலைகளும், மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும். அதே சமயம் இது போன்ற விபத்துகள் ஏற்படும் போது, அதனை தடுக்க நவீன தொழில்நுட்ப அம்சங்கள் உடனடியாக பயன்படுத்தும் நிலையில் உள்ளதா என்பது குறித்து ஒரு குழு அமைத்து வல்லூனர்கள் உதவியுடன் ஆய்வு நடத்தப்பட உள்ளது.
இரவில் இருந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் அங்கு உள்ளனர். மேலும் அந்த தனியார் கம்பெனி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. சல்ப்யூரிக் ஆசிட் பிளாண்ட் மட்டும் உடனடியாக மூட முடியாது என்பதால் படிப்படியாக மூடும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. எதிர் காலத்தில் இது போன்று விபத்துகள் நடைபெறாமல் இருக்க என்ன நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்பதை விரைவில் அறிவிப்போம். அங்கு மட்டும் அல்லாமல், நிரந்தர தீர்வை எட்டும் வகையில் இந்த ஆய்வு தமிழக முழுவதும் நடை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
- எண்ணூர் சுற்றியுள்ள பெரும்பாலான கிராம பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
- பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது.
சென்னை :
தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னை எண்ணூர் அருகே அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில், திரவ அமோனியா குழாயில் கசிவு ஏற்பட்டதால், எண்ணூர் சுற்றியுள்ள பெரும்பாலான கிராம பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது. பொதுமக்கள் அனைவருக்குமே தகுந்த மருத்துவ சோதனைகள் நடத்தி, அவர்கள் உடல் நலத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், எண்ணூரிலுள்ள தொழிற்சாலைகள் அனைத்திலும், முறையான பாதுகாப்பு நடைமுறைகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதைக் கண்காணிக்க, தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.
- தொழிற்சாலை இயங்க எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
- தொழிற்சாலைக்கு வெளியே மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வாயு கசிவு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, தொழிற்சாலை இயங்க எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
பின்னர், அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து மக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு வெளியே மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
ஐஆர்எஸ், அனுமதி பெறும் வரை தொழிற்சாலை இயங்க கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
மேலும், எந்த இடத்தில் வாயு கசிவு ஏற்பட்டதோ, அதை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய வேண்டும்.