search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Enriched Rice"

    • குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை விருதுநகர் கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • இந்த அரிசி போலிக் அமிலம், கருவளர்ச்சிக்கும், ரத்த உற்பத்திக்கும் பயன்படுகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் வட்டம், கட்டையாபுரம் நுகர்ப்பொருள் வாணிப கழக நியாயவிலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை கலெக்டர் மேக நாதரெட்டி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் குடும்ப அட்டைதாரர்களுக்கு, செறிவூட்டப்பட்ட அரிசியை குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் மதிய உணவு திட்டங்களுக்கு வழங்க அறிவுறுத்திருந்தார். அதனடிப்படையில், இன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கட்டையா புரம் நியாயவிலை கடையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் 992 நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகிறது. அதில் 48,575 ஏ.ஏ.ஒய். குடும்ப அட்டைத்தாரர்கள் மற்றும் 2,44,128 பி.எச்.எச். குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி மாதத்திற்கு 6582.685 மெட்ரிக் டன் தேவைப்படுகிறது. இந்த செறிவூட்டப்பட்ட அரிசியானது 1:100 என்ற விகிதத்தில் கலக்கப்பட்டு (அதாவது ஒரு டன் செறிவூட்டப்பட்ட அரிசி குருணைகள் 100 மெ.டன் அரிசியுடன் கலக்கப்பட்டு) சமமான செறிவூட்டப்பட்ட அரிசியாக தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பொது விநியோகத்திட்ட அங்காடிகள் மூலம் விலையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

    செறிவூட்டப்பட்ட அரிசியானது ரத்தசோகையை தடுக்கிறது. போலிக் அமிலம், கருவளர்ச்சிக்கும், இரத்த உற்பத்திக்கும் பயன்படுகிறது. வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தில் இயல்பான செயல்பாட்டிற்கும் உதவுகிறது.

    எனவே மாவட்டத்தில் இன்று முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் செறி வூட்டப்பட்ட அரிசியானது வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் விஜயகுமார், இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) செந்தில்குமார், துணை மேலாளர் கண்ணன், துணை மேலாளர் (கணக்கு) பழநி, உதவி மேலாளர் (வாணிபம்) அழகர்சாமி, உதவி மேலாளர் (தரக்கட்டுப்பாடு) மணிபாரதி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×