என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Eoin Morgan"
- இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.
- இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளர் பதவியின் இருந்து மேத்யூ மோட் விலகியுள்ளார்.
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளர் பதவியின் இருந்து மேத்யூ மோட் விலகியதை அடுத்து, அப்பதவிக்கு ராகுல் டிராவிட்டை நியமிக்கலாம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்த இயான் மோர்கன், "என் பார்வையில், இந்த நேரத்தில், இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் ஆகியோரிடம் நீங்கள் செல்வீர்கள் என்று நான் நம்புகிறேன். அதிலும் குறிப்பாக மெக்கல்லம் என்று நான் சொல்கிறேன். ஏனென்றால் அவர் உலகின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
- அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இயான் மோர்கன் அறிவித்துள்ளார்.
- இவர் தலைமையிலான இங்கிலாந்து அணி 2019-ம் ஆண்டு உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
லண்டன்:
இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மென் இயான் மோர்கன். இயான் மோர்கன் 16 டெஸ்ட்களில் விளையாடி 700 ரன்களும், 248 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7,701 ரன்களும், 115 டி20 போட்டிகளில் விளையாடி 2,458 ரன்களும், 83 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2,458 ரன்களும் எடுத்துள்ளார்.
இதற்கிடையே, இயான் மோர்கன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனாலும், உள்ளூர் போட்டிகள், பிற லீக் கிரிக்கெட்டுகளில் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இயான் மோர்கன் அறிவித்தார்.
இவர் தலைமையிலான இங்கிலாந்து அணி 2019-ம் ஆண்டு உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் முதலில் அயர்லாந்து அணிக்காக அறிமுகமாகினார்.
- 126 போட்டிக்கு தலைமை தாங்கி 76-ல் வென்று இங்கிலாந்தின் சிறந்த வெள்ளைப்பந்து கேப்டனாக திகழ்ந்தார்.
லண்டன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனும், இங்கிலாந்து அணிக்காக உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டனுமான இயான் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அயர்லாந்து அணிக்காக அறிமுகமாகிய மோர்கன், அதன்பின் இங்கிலாந்து அணிக்காக ஆடினார். 2019 உலகக் கோப்பையில் களமிறங்கிய இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தியது. இதன்மூலம், இங்கிலாந்து அணியின் பல்லாண்டு கால உலகக் கோப்பை கனவை நனவாக்கினார் மோர்கன்.
சர்வதேச கிரிக்கெட்டில் மோர்கன் 126 போட்டிகள் தலைமை தாங்கி 76 போட்டிகளில் வென்று இங்கிலாந்தின் சிறந்த வெள்ளைப்பந்து கேப்டனாகத் திகழ்ந்துள்ளார்.
248 ஒருநாள் போட்டிகளில் 7701 ரன்களையும் 115 டி20 போட்டிகளில் 2,458 ரன்களையும் எடுத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 2 சதம், ஒருநாள் போட்டிகளில் 14 சதம், 47 அரைசதம், டி20-யில் 14 அரைசதம் அடித்துள்ளார்.
இயான் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் காயம் காரணமாக விலகி உள்ளார்.
- நெதர்லாந்து தொடரில் இயான் மார்கன் ரன் ஏதும் எடுக்கவில்லை.
இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நெதர்லாந்து சென்று விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஆம்ஸ்டெல்வீனில் நடைபெறுகிறது.
இந்நிலையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஜாஸ் பட்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் இயான் மார்கன் 8 பந்துகள் மட்டுமே சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் இந்த தொடரை முடித்துள்ளார்.
வருகிற 30-ந்தேதி இங்கிலாந்து தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. தற்போது உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இங்கிலாந்து நாளை ஆஸ்திரேலியாவையும், 27-ந்தேதி ஆப்கானிஸ்தானையும் எதிர்த்து விளையாடுகிறது.
இதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பீல்டிங் பயிற்சி மேற்கொண்ட கேப்டன் மோர்கனின் இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் காயத்தின் வீரியம் குறித்து அறிய எக்ஸ்-ரே எடுக்கப்படுகிறது. ஒருவேளை எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால் மோர்கன் விளையாடுவது சந்தேகமே?
இங்கிலாந்தின் சோமர்செட்டில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பேபிங்டன் ஹவுஸில் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மோர்கனின் திருமணத்தில் ஜேசன் ராய், அலஸ்டைர் குக், ஸ்டீவ் பின், மார்க்வுட், ஜோஸ் பட்லர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கிலாந்து ஒருநாள் அணி இலங்கைக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இங்கிலாந்து 3-1 எனத் தொடரை கைப்பற்றியது. 4 போட்டியில் 195 ரன்கள் குவித்த மோர்கன் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
What an amazing day with @TaraRidgway 🎉 pic.twitter.com/lrqX9PdnMm
— Eoin Morgan (@Eoin16) November 3, 2018
மான்செஸ்டரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுக்கள் அள்ளினார். இந்த போட்டியில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. மான்செஸ்டரில் இருந்து மாறுபட்ட கார்டிஃப் சூழ்நிலையே நாங்கள் வெற்றி பெற காரணம் என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மோர்கன் கூறுகையில் ‘‘இன்றைய (நேற்று) ஆட்டத்தில் சூழ்நிலை முற்றிலும் வேறுபாடாக இருந்தது. குல்தீப் யாதவ் மிகவும் சிறப்பான பந்து வீச்சாளர். பெரும்பாலான நேரங்களில் சிறப்பான பந்து வீச்சையே வெளிப்படுத்துவார். ஆனால், கார்டிஃப் சூழ்நிலையை விட மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டு அவருக்கு அருமையாக அமைந்தது.
கார்டிஃப் விக்கெட்டில் வேகம் மற்றும் பவுன்ஸ் இருந்தது. குறிப்பிடத்தகுந்த வகையில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். ஆனால், எங்களுடைய திட்டம் மிகவும் தெளிவாக இருந்தது. நாங்கள் அவரை சிறப்பாக எதிர்கொண்டோம்’’ என்றார்.
3 டி-20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்திய நேரப்படி நாளை இரவு 10 மணிக்கு மான்செஸ்டரில் துவங்குகிறது.
நாளை துவங்கும் டி20 கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இங்கிலாந்து வீரர்கள் மன்செஸ்டர் ஓல்ட் ட்ரபோர்ட் மைதானத்தில் இன்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து அணி கேப்டன் இயன் மோர்கன், அவர்களிடம் குறிப்பிட்டுள்ளதாவது :-
‘இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடிய அனுபவம் நிச்சயமாக இங்கிலாந்து வீரர்களுக்கு சாதகமான அம்சம் ஆகும். இதை பயன்படுத்தி எங்கள் வீரர்கள், இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்துவார்கள். இருப்பினும் இந்திய அணியுடன் விளையாடுவது எப்போதும் சவாலானது’ என அவர் தெரிவித்தார். #ENGvIND
கைவிரலில் முறிவு ஏற்பட்ட கேப்டன் மோர்கனின் பெயர் இடம்பிடித்துள்ளது. 14 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. மோர்கன், 2. மொயீன் அலி, 3. பேர்ஸ்டோவ், 4. பட்லர், 5. டாம் குர்ரான், 6. அலெக்ஸ் ஹேல்ஸ், 7. லியாம் பிளங்கெட், 8. அடில் ரஷித், 9. ஜோ ரூட், 10. ஜேசன் ராய், 11. பென் ஸ்டோக்ஸ், 12. டேவிட் வில்லே, 13. கிறிஸ் வோக்ஸ், 14. மார்க்வுட்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்