என் மலர்
நீங்கள் தேடியது "Erode"
- பவானி கூடுதுறையில் அதிகாலை 3 மணியில் இருந்து அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.
- கருங்கல்பாளையத்தில் உள்ள ஸ்ரீ அய்யப்பா சேவா நிறுவனம் சார்பில் அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு:
சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலை அணிந்து கோவிலுக்கு செல்வது வழக்கமாகும்.
இந்நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டலபூஜைகளுக்காக நேற்று நடைதிறக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறை, ஈரோடு, கோபி, பெருந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அய்யப்ப பக்தர்கள் இன்று கார்த்திகை 1-ந் தேதியையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பவானி கூடுதுறையில் அதிகாலை 3 மணியில் இருந்து அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. இதேபோல ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள ஸ்ரீ அய்யப்பா சேவா நிறுவனம் சார்பில் அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாலை அணிந்து கொண்டனர்.
இதேபோல் கோபி பகுதியில் உள்ள பச்சைமலை பவளமலை முருகன் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், சாரதா மாரியம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவி ல்களில் இன்று காலை அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் மாலை அணிவித்து கொண்டனர்.
- தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு நாளை நடைபெற உள்ளது.
- ஈரோடு மாவட்டத்தில் 3 மையங்களில் நடைபெற உள்ள தேர்வினை 5,920 பேர் எழுத உள்ளனர்.
ஈரோடு:
தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு நாளை நடைபெற உள்ளது.
இத்தேர்வு ஈரோடு மாவட்டத்தில் திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி, பெருந்துறை அருகே உள்ள நந்தா என்ஜினியரிங் கல்லூரி மற்றும் கொங்கு கல்லூரி என 3 மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வினை 957 பெண்கள், 4,963 ஆண்கள் என 5,920 பேர் எழுத உள்ளனர்.
தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.40 மணிக்கு முடிவடைகிறது. இதில் தமிழ் பாடங்களில் இருந்து 80 வினாக்களும், பொது அறிவு 70 வினாக்களும் என மொத்தம் 150 வினாக்களுக்கு தேர்வு நடக்கும். தேர்வர்கள் காலை 8.30 மணிக்கே அவர்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள தேர்வு மையத்திற்கு வர வேண்டும். அவர்கள் பிரஸ்கிங் முறையில் சோதிக்கப்பட்ட பின்னரே தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவர்.
இந்த தேர்வு அறை கண்காணிப்பிலும், பாதுகாப்பு பணியிலும் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் ஏ.டி.எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள் என மொத்தம் 600 போலீசார் ஈடுபட உள்ளனர். தேர்வுக்கான ஏற்பாடுகளை 3 மையங்களிலும் மாவட்ட காவல் துறை சார்பில் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
- ஈரோடு மத்திய பஸ் நிலையம் ரூ.44 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.
- மார்ச் மாதம் இறுதிக்குள் விரிவாக்க பணிகள் முழுவதும் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகர் மையப்பகுதியில் 12 ஏக்கர் பரப்பளவில் பஸ் நிலையம் 1973-ம் ஆண்டு கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
இந்த பஸ் நிலையத்தில் மினி பஸ்சுக்கு என்று தனி ரேக், ஒவ்வொரு ஊரு வாரியாக தனி ரேக் அமைக்கப்பட்டு இருந்தது. நாச்சியப்பா வீதி, சக்திரோடு, மேட்டூர் ரோடு, அகில் மேடு வீதி என 4 வழிகள் இருந்தன.
மேலும் கட்டண கழிப்பிடம், கடைகள், வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையம், சிந்தாமணி கூட்டுறவு அங்காடி போன்றவை இருந்தன.
இந்நிலையில் ஈரோடு பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.44 கோடி மதிப்பில் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.
இதற்காக 100-க்கும் மேற்பட்ட பழைய கடைகள் இடித்து அகற்றப்பட்டன. விரிவாக்க பணிகளில் நவீன கழிப்பிடங்கள், நவீன ஓய்வறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது.
நாமக்கல் , சேலம் ரேக் இடிக்கப்பட்டு அங்கு புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது பணிகள் 70 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளது.
மார்ச் மாதம் இறுதிக்குள் விரிவாக்க பணிகள் முழுவதும் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மாநகர் பகுதி முழுவதும் பெரும்பாலான இடங்களில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
- இதற்கு முக்கிய காரணம் நாய்களுக்கு கருத்தடை செய்யாமல் இருப்பது தான்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. சமீப காலமாக மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகின்றன. தெரு வோரங்களில் கூட்டமாக கூடியிருந்து தெருவில் வரும் வாகன ஓட்டிகளை துரத்தி வருகின்றன.
பகல் நேரங்களில் சில சமயம் தெருவில் நடமாடும் பெண்கள், குழந்தைகளையும் துரத்துகின்றன. இதனால் குழந்தைகள், பெண்கள் தெருவில் நடமாட அச்சப்படுகின்றனர்.
முன்பு கறிக்கடை முன்பு நாய்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது மாநகர் பகுதி முழுவதும் பெரும்பாலான இடங்களில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் நாய்களுக்கு கருத்தடை செய்யாமல் இருப்பது தான். முன்பு மாநகராட்சி சார்பில் தெருவில் சுற்றி திரியும் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.
தற்போது அது செய்யப்ப டாமல் உள்ளதால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நாய்களின் தொல்லையும் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
மாநகர் பகுதியில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்கள் தெருக்களில் சுற்றி திரிகின்றன. நாய் கடிக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
எனவே முன்பு போல் தெருவில் சுற்றி தெரியும் நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.
- சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 40 சதவீதம் நடைபெற்றது.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஜவுளி சந்தை வாரம் தோறும் செவ்வாய்கிழமை நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் வியாபாரம் தொடங்கப்பட்டது.
ஆனால் தொடர் மழை, வெளிமாநில மொத்த வியாபாரிகள் வருகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடைபெற்றது.
ஆனாலும் சில்லரை வியாபாரம் ஓரளவு நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் வியாபாரம் அமோகமாக நடை பெற்றதாக வியாபாரிகள் கூறினர். கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.
மேலும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.
இதேபோல் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மொத்த வியாபாரிகள் ஜவுளிகளை கொள்முதல் செய்ததாகவும், வழக்கம் போல சில்லரை விற்பனை எதிர்பார்த்த அளவில் நடைபெற்றதாக ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.
சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 40 சதவீதம் நடைபெற்றது. இனி வரக்கூடிய நாட்களில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
- ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
- தொடர்ந்து காவல்துறை மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு வ. உ. சி. பூங்கா மைதானத்தில் நடைபெற்ற 74 -வது குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து காவல்துறை மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து காவல் துறை, மருத்துவம், வேளாண்மை, பள்ளிக்கல்வி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட துறைகளில் சாதனை புரிந்த 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.
இதனையடுத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வழக்கமாக குடியரசு தின விழாவில் 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
ஆனால் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதால் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குடியரசு தின விழாவையொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டு தளங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், காளை மாட்டு சிலை, மணிக்கூண்டு, பஸ் நிலைய,ம் ஸ்வஸ்திகார்னர், ஜி.எச். ரவுண்டானா, ரெயில் நிலையம் போன்றவற்றில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல் கோபி, பவானி, அந்தியூர், பெருந்துறை, மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.
சோதனை சாவடிகளிலும் போலீசார் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஈரோடு ரெயில் நிலையத்திலும் பயணிகள் உடமை தீவிர பரிசோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
- இன்று இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- தொடர்ந்து பொதுமக்கள் தினமும் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபடுவர்.
ஈரோடு:
ஈரோடு நகரின் பிரசித்தி பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் பொங்கல் விழா ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.முன்னதாக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்து முடிந்தது.
இதனையடுத்து தற்போது கோவில் முன்பு பந்தல் அமைக்கும் பணியும், கடைகள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) இரவு 8.30 மணிக்கு பட்டாளம்மன் அபிஷேகம், 10 மணிக்கு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
29-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அன்ன வாகன ஊர்வலம், இரவு 10.30 மணிக்கு கிராம சாந்தி நிகழ்ச்சியும் நடைபெறுவது.
தொடர்ந்து பொதுமக்கள் தினமும் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபடுவர். அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிசேகம், பூஜைகள் நடைபெறும்.
இதையடுத்து வரும் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 8 மணிக்கு மாவிளக்கு, கரகம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து 5-ந் தேதி காலை 9.30 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், சின்னமாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடைபெறும்.
தொடர்ந்து 6-ந் தேதி இரவு 8 மணிக்கு பெரிய மாரியம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். 7-ந் தேதி மாலை 4 மணிக்கு தேர் நிலை சேரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இரவு 8 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் திருவீதி உலா, 9.30 மணிக்கு சின்ன மாரியம்மன் திருவீதி உலா நடைபெறவுள்ளது.
இதையடுத்து 8-ந் தேதி மாலை 3 மணிக்கு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும்.
இதில் பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோவில்களை சேர்ந்த பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களின் கம்பங்கள் எடுத்து வரப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் எடுத்து செல்லப்பட்ட காவிரி ஆற்றில் விடப்படும்.
அன்று உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்படுகிறது. தொடர்ந்து இறுதி நிகழ்ச்சியாக 9-ந் தேதி காலை 10.30 மணிக்கு மறு பூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது.
- 142 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
- 17 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த இரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு ஒரு நாள் கூடுவதும், ஒரு நாள் குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது.
நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 695 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 944 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 17 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா தினசரி பரிசோதனை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் 83 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாவட்டத்தில் 142 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து சிறிது சிறிதாக கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ஈரோடு புனித அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஊர்வலம் நடந்தது.
- கிறிஸ்தவர்கள் முழங்க வழிபாட்டு பாடல்களை பாடியபடி சென்றனர்.
ஈரோடு:
ஏசு கிறிஸ்து இறை பணியை தொடங்குவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்துள்ளார். இதனை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் விரதம் மேற்கொண்டு ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் தினத்தை கொண்டாடு வது வழக்கம்.
ஈஸ்டர் தினத்திற்கு முந்தைய ஞாயிற்றுக்கி ழமையை கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கிறார்கள்.
அதன்படி இன்று காலை ஈரோடு புனித அன்னை ஆலயத்தில் பங்கு தந்தையும், ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமையில் குருத்தோலை ஊர்வலம் நடந்தது.
இந்த ஊர்வலமானது நடு வீதியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் இருந்து தொடங்கி ஸ்டேட் பேங்க் சாலை வழியாக புனித அமல அன்னை ஆலயத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து குருத்தோலை ஞாயிறுயையொட்டி சிறப்பு திருப்பலியும் நடந்தது.
இதேபோல் சி.எஸ்.ஐ. சர்ச்சில் பாதிரியார் தலைமையில் குருத்தோலை ஊர்வலம் சர்ச்சில் தொடங்கி, மீனாட்சி சுந்தரனார் சாலை வழியாக சவிதா சந்திப்பு வரை சென்று மீண்டும் மீனாட்சி சுந்தரனார் சாலை வழியாக சர்ச்சில் நிறைவடைந்தது.
இந்த ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இசை வாத்தியங்கள் முழங்க வழிபாட்டு பாடல்களை பாடியபடி சென்றனர்.
தொடர்ந்து வருகிற 6-ந் தேதி பெரிய வியாழனும், இயேசு சிலுவையில் அறை யப்பட்ட நாளான 7-ந் தேதி புனித வெள்ளியும், ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளான 9-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையும் கொண்டா டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
- 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த இரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோ னாவால் பாதித்தவ ர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 742 ஆக உயர்ந்து ள்ளது.
கொரோ னா பாதிப்பு டன் சிகிச்சை பெற்ற வந்த 3 பேர் பாதி ப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 984 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குண மடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரண மாக உயிரிழந்துள்ளனர்.
தற்போது மாவட்டம் முழுவதும் 24 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முந்தினம் மட்டும் 72 பேருக்கு கொரோனா தினசரி பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ள னர்.
- மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
- சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் மரணம் அடைந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக கொரோனா 2-வது அலையில் ஈரோடு மாவட்ட த்தில் பாதிப்பு அதிகமாக இருந்தது. ஆயிரக்க ணக்கா னோர் பாதிக்கப்பட்டனர். ஆக்சிஜன் கட்டுப்பாடு ஏற்பட்டது.
மாவட்டம் முழுவதும் ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. முதிய வர்கள் கொரோனா பாதிப்பால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தனர்.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டது. குறிப்பாக கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகப்படுத்த ப்பட்டது.
முககவசம் அணிந்து செல்லுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவை கடுமையாக கடைபிடிக்க ப்பட்டது.
இது போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரண மாக மாவட்டத்தில் கொரோ னா தாக்கம் குறைய தொடங்கியது. கடைசியாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 734 ஆக உயர்ந்தது. அதன் பிறகு பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு ஏற்பட்டாலும் உயிர் இழப்பு ஏற்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 8 பேர் முதல் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் இதுவரை கொரோ னாவால் பாதித்த வர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 824 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்த வர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 30 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட முழுவதும் கொரோனா பாதிப்புடன் 59 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோ னா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 735 ஆக உயர்ந்துள்ளது.
89 வயதான அந்த முதியவர் கடந்த 20-ந் தேதி சளி, காய்ச்சல், மூச்சு திணறல் பாதிப்புடன் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக வந்தார்.
அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 21-ந் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அந்த முதியவர் கொரோனா தனிவார்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலை யில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
இறந்த முதியவருக்கு கொரோனா பாதிப்பு டன் சில இணை நோய்களும் இருந்துள்ளன.
- இன்று 3-வது நாளாக தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
- குடோன்களில் ரூ.300 கோடி மதிப்பிலான சரக்குகள் தேங்கி கிடக்கிறது.
ஈரோடு:
ஈரோடு பார்க் ரோடு, மூலப்பட்டறை குப்பை காடு போன்ற பகுதிகளில் சரக்கு லாரி புக்கிங் மற்றும் டெலிவரி குடோன், ரெகுலர் லாரி சர்வீஸ் போன்ற 450-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிறுவனங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பொருட்களை ஏற்றி, இறக்கும் வேலை செய்து வருகிறார்கள்.
புக்கிங் அலுவலக மூலம் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் ஜவுளி, மஞ்சள், விளை பொருட்கள், மாட்டுத்தீவனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசி யேசனுடன் இணைந்து அனைத்து தொழிற்சங்கங்களும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு, பிற சலுகைகள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப் படவில்லை. தற்போது ஒரு டன் லோடு ஏற்ற ரூ.120 தருகின்றனர்.
இத்துடன் சேர்த்து 41 சதவீத கூலி உயர்வு கேட்டு தொழிற்சங்கத்தினர் போராடி வருகின்றனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் சுமுகமான முடிவு ஏற்படவில்லை.
இதனைத்தொடர்ந்து கடந்த 13-ந் தேதி முதல் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆயிரம் பேர் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று 3-வது நாளாக தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் அனைத்து தொழில் சங்கத்தினர் ஈரோடு ஸ்டார் தியேட்டர் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சி.ஐ.டி.யு. சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தங்கவேல் தர்ணா போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
மத்திய சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.எஸ்.தென்னரசு, டி.பி.டி.எஸ். தலைவர் பெரியார் நகர் மனோகரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினர்.
ஈரோடு மாவட்ட சுமைதூக்குவோர் மத்திய சங்க தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் மாதையன், பாட்டாளி தொழிற்சங்கம் எஸ்.ஆர்.ராஜு, பொதுத்தொழிலாளர் மத்திய சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுகம், கவுன்சில் செயலாளர் கோபால் உள்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சுமை தூக்கும் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் 3-வது நாளாக நீடித்து வருவதால் ஈரோடு மாநகரில் உள்ள குடோன்களில் ரூ.300 கோடி மதிப்பிலான சரக்குகள் தேங்கி கிடக்கிறது.