என் மலர்
நீங்கள் தேடியது "Erode News"
- தமிழ்செல்வி அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது உடலில் தனக்கு த்தானே மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து எரிந்து கொண்டிருந்தது.
- சிகிச்சை பலனின்றி தமிழ்ச்செல்வி பரிதாபமாக இறந்தார்.
அந்தியூர்:
அந்தியூர் மாரியப்பா வீதி பகுதியை சேர்ந்த மெய்யரசன் (வயது 24). தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகின்றார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை தனது தாய் தமிழ்ச்செல்வி உடன் வசித்து வருகின்றார்.
இவரது தந்தை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் தமிழ்ச்செல்வி க்கு கடந்த 3 வருடத்திற்கு முன்பு உடல்நலம் சரியில்லாததால் மருத்துவ மனைக்கு சென்று சரி செய்து மருந்து மாத்திரை கள் சாப்பிட்டு வந்ததார்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டதால் கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று மாத்திரைகள் உட்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மெய்யரசன், தாய் தமிழ்செல்வி இருவரும் உறங்க சென்றனர். அதிகாலை 5 மணி அளவில் வீட்டிற்கு வெளியே தமிழ்செல்வி அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது உடலில் தனக்கு த்தானே மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து எரிந்து கொண்டிருந்தது.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தமிழ்செல்வியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தமிழ்ச்செல்வி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மெய்யரசன் கொடுத்த புகாரின் பேரில் அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.
- கொங்காடை காலனி மற்றும் பழங்குடியினர் காலனிக்கு சென்று மலைவாழ் மக்களை சந்தித்து கலந்துரை யாடுகிறார்.
ஈரோடு:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் பொதுமக்களை சந்தித்து குறைகளையும் கேட்டறிந்து வருகிறார்.
அதன்படி அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். மாலை 4 மணிக்கு அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அவருக்கு தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.அதனைத்தொடர்ந்து பர்கூர் ஊராட்சி தாமரை க்கரை வந்தடைகிறார்.
பின்னர் ஓசூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் அமைச்சர் சுப்பிரமணியன் அங்கு ஆய்வு செய்கிறார். அதைத்தொடர்ந்து கொங்காடை காலனி மற்றும் பழங்குடியினர் காலனிக்கு சென்று மலைவாழ் மக்களை சந்தித்து கலந்துரை யாடுகிறார்.
பின்னர் இன்று இரவு தாமரைக்கரை வனத்துறை பயணியர் விடுதியில் வந்து தங்குகிறார். இதைத் தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி அளவில் பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் அமைச்சர் சுப்பிரமணியன் அங்கு ஆய்வு மேற்கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து காலை 10 மணி அளவில் தேவர்மலை துணை சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்கிறார்.அதைத் தொடர்ந்து காலை 11:30 மணியளவில் தாமரை கரை துணை சுகாதார நிலையம் உட்பட பர்கூர் மலை கிராமத்திற்கு என்று தனியாக 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைக்கிறார்.
இதேப்போல் 102 இலவச தாய் சேய் ஊர்தி சேவை, நடமாடும் மருத்துவக் குழு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு இலவச அமரர் உறுதி சேவை மற்றும் மருத்துவ நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் மாலை 3:30 மணியளவில் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொள்கிறார்.
- பவானி அருகே உள்ள மேட்டு நாசுவம்பாளையம் வடக்கு நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தில் கலெக்டர் கிரு ஷ்ணனுண்ணி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
- கிராம நிர்வாக அலுவலகத்தையும், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு ஊராட்சி ஒன்றியம் பவானி அருகே உள்ள மேட்டு நாசுவம்பாளையம் வடக்கு நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தில் கலெக்டர் கிரு ஷ்ணனுண்ணி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் மேட்டு நாசுவம் பாளையம் வடக்கு நில வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பராமரிக்கப் பட்டு வரும் 'ஆ" பதிவேடு, கிராம கணக்கு பதிவேடு, அடங்கல், முதியோர் உதவித் தொகை பதிவேடு, புறம் போக்கு நிலங்கள் தொட ர்பான பதிவேடு, விளை நிலங்கள் தொடர்பான பதிவேடு உள்ளிட் ஆவ ணங்களை பார்வையிட்டார்.
தொடர்ந்து கலெக்டர் மேட்டு நாசுவம் பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் கட்டுவதற்கு முன் மொழிவு வழங்கப்பட்ட இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலகத்தையும், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணியம் மற்றும் அலுவலர்கள் உடனி ருந்தனர்.
- போலீசார் கண்காணிப்பு கேமிராவில் பதிவான 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
- இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சதா சிவம். இவர் அந்த பகுதியில் டீ கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத் தன்று இரவு சதாசிவம் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு சென்றார். மறு நாள் காலை வந்து கடையை திறந்தார். அப்போது கடையில் இருந்த ரூ.25 ஆயிரத்தை காணா ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பணத்தை யாரோ சிலர் திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து அவர் சென்னிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமி ராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் 2 பேர் காரில் வந்து டீக்கடையில் பணத்தை திருடி சென்றது பதிவாகி இருந்தது. இதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் போலீசார் கண்காணிப்பு கேமிராவில் பதிவான 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் பவானி அருகே உள்ள காலிங்க ராயன்பாளையம் மூவேந்தர் நகரை சேர்ந்த மாரிமுத்து (31), ஈரோடு அடுத்த ஆர்.என்.புதூர் சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபு (32) எனவும், கடையில் பணத்தை திருடியதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். ெதாடர்ந்து அவர்கள் பெருந்துறை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டி பாளையம் மாவட்ட சிறையில் அடைக்க ப்பட்டனர்.
- பிரசாத் வீட்டின் அருகே உள்ள ஒரு ஓலை கொட்டகையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகிறார்.
நம்பியூர்:
நம்பியூர் பேரூராட்சி பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 27). இவர் நம்பியூரில் உள்ள ஒரு பூக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி நதியா என்ற மனைவியும், ரோகித் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வெளியே வந்த பிரசாத் அவர் வீட்டின் அருகே உள்ள ஒரு ஓலை கொட்டகையில் வெள்ளை வேட்டியால் தனக்குத்தானே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் காலை அக்கம் பக்கத்தினர் ஓலை குடிசை கொட்டகையை பார்த்தபோது அங்கு பிரசாத் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரது மனைவி நதியா மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இது குறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகிறார்.
- முள்ளம்பட்டி பாலம் அருகே வடபுற வாய்க்காலில் பெருமாளின் உடல் மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பெருமாளுக்கு உடல்நலம் பாதிப்பு பிரச்சனை இருந்ததால் அவர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த பெரிய புலியூர், செல்வநகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (80). இவர் தனது மகன் கிரண்குமார் என்பவருடன் வசித்து வருகிறார். பெருமாள் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று கோழிகளை கவனித்துக் கொள்ள வீட்டிற்கு பக்கத்தில் உள்ள சாலையில் பெருமாளை விட்டு விட்டு கிரண்குமார் சென்று விட்டார். பின்னர் மீண்டும் மாலை தந்தை அழைத்து செல்ல அங்கு வந்தபோது தந்தையை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தந்தையை பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் ஏதும் கிடைக்க வில்லை. இந்நிலையில் காஞ்சிகோவில் அடுத்துள்ள முள்ளம்பட்டி பாலம் அருகே வடபுற வாய்க்காலில் பெருமாளின் உடல் மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து காஞ்சிகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெருமாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பெருமாளுக்கு உடல்நலம் பாதிப்பு பிரச்சனை இருந்ததால் அவர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு ரவிச்சந்திரனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
- ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் ரவிச்சந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் ஓசப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (35). வனத்துறை ஊழியர். இவரது மனைவி வித்தியா.
கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் ரவிச்சந்தி ரனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் மருந்து மாத்திரை எடுத்து வந்தார். மனைவி தன்னை பிரிந்து சென்று விட்டார் என்ற வேதனையில் ரவிச்சந்திரன் மது குடிக்க தொடங்கினார்.
இதன் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சத்தியமங்கலத்தில் உள்ள தங்கை வீட்டிற்கு ரவிச்சந்திரன் சென்று தங்கினார். அப்போது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு ரவிச்சந்திரனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் ரவிச்சந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பவானி ஆற்றின் கரையோரம் அருகே இருந்த வேப்பமரத்தில் சம்பவத்தன்று 30 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்தது.
- இதுகுறித்து கவுந்தபாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்தலையூர் மகிழீஸ்வரன் கோவில் பின்புறம் பவானி ஆற்றின் கரையோரம் அருகே இருந்த வேப்பமரத்தில் சம்பவத்தன்று 30 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்தது.
இதுகுறித்து பெருந்தலையூர் கிராம நிர்வாக அலுவலர் பஞ்சநாதன் கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் தொங்கிய நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தூக்கு மாட்டி இறந்த கிடந்த வாலிபர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த சிக்கண்ணன் (30) என தெரிய வந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை .
இதுகுறித்து கவுந்தபாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மொடக்குறிச்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வ தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- மொடக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி தலைமையில் போலீசார் மொடக்குறிச்சி, சாவடிப்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து சோதனை நடத்தினர்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வ தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மொடக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி தலைமையில் போலீசார் மொடக்குறிச்சி, சாவடிப்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து சோதனை நடத்தினர்.
அப்போது அந்த பகுதியில் 2 பேர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
இதில் அவர்கள் சாவடி ப்பாளையம் புதூர், அம்மன் நகர் பகுதி யை சேர்ந்த வடிவேல் என்கிற துரை (49). ஆலங்காட்டுவலசு நேரு வீதியை சேர்ந்த செந்தில்குமார் (40) எனவும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்து 53 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தகர். மேலும் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- ஈரோடு மாவட்டத்திலும் வாகன விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் பணி தொடங்கியது.
- குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 10 வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் என ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு:
தமிழக முழுவதும் புதிய போக்குவரத்து விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி வாகன விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
ஹெல்மெட் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு முன்பு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது புதிய விதிமுறைப்படி ரூ.1000 விதிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். தமிழகத்தில் விதிமுறைகள் மீறுபவர்களுக்கான கூடுதல் அபராதம் விதிக்கும் பணி தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்திலும் வாகன விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் பணி தொடங்கியது. மாவட்டத்தில் 4 நாட்களாக போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு பகுதி, பஸ் நிலையம், ஜிஹெச் ரவுண்டானா, சூரம்பட்டி நால்ரோடு ,காளை மாட்டு சிலை, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் போன்ற பகுதிகளில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர்.
குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று ஒரு நாளில் மட்டும் வாகன விதிமுறை மீறுபவர்கள், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது, செல்போன் பேசி எப்படி வாகனம் ஓட்டியது என 130 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதில் பெரும்பாலும் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. இதேப்போல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 10 வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் என ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் நேற்று ஒரே நாளில் வாகன விதிமுறைகளை மீறிய 130 பேரிடமிருந்து ரூ.2 லட்சத்துக்கு மேல் அபராதம் வசூல் செய்யப்ப ட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதேப்போல் கோபி செட்டிபாளையம், சத்திய மங்கலம், பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி என மாவட்டம் முழுவதும் அபராதம் விதிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
- மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் செல்வராஜுக்கு தலை, மார்பு, தோள்பட்டைகளில் காயம் ஏற்பட்டது.
- சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் நாதகவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (54). இவர் சண்முகநாதபுரத்தை சேர்ந்த சத்யா என்பவரது தோட்டத்தில் சம்பவத்தன்று மரத்தில் ஏறி கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் செல்வராஜுக்கு தலை, மார்பு, தோள்பட்டைகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்து வமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- அவல்பூந்துறை-வெள்ளோடு ரோட்டில் முதியவர் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார்.
- இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மொடக்குறிச்சி:
ஈேராடு மாவட்டம் சிவகிரி பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அவல்பூந்துறை-வெள்ளோடு ரோட்டில் முதியவர் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார்.
அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் அவல்பூந்துறை தெற்கு தெரு பகுதியை சேர்ந்த திருஞான சம்பத் (52) எனவும் அவர் அனுமதியின்றி மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.