search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode textile market is"

    • சில்லரை விற்பனை 30 சதவீதம் வரை நடைபெற்றது.
    • கடந்த வாரத்தை விட இந்த வாரம் மந்தமாகவே நடந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகரில் ஜவுளி சந்தையானது பன்னீர்செல்வம் பார்க், திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை கூடும். இது தவிர இதர நாட்களில் தினசரி சந்தையும் நடக்கிறது.

    வாரந்தோறும் நடக்கும் ஜவுளி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மகாரா ஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்து ஜவுளிகளை மொத்த விலையில் கொள்முதல் செய்து செல்வர்.

    இந்நிலையில் தமிழ் மாதம் ஆடி 18-ந் தேதியை ஆடிப்பெருக்காக தமிழக மக்கள் கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டு ஆடிப்பெருக்கு வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

    இதனை முன்னிட்டு இந்த வாரம் கூடிய ஜவுளி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து உள்ளூர் வியாபா ரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் சில்லரை விற்பனை 30 சதவீதம் வரை நடைபெற்றது.

    ஆனால் அதே நேரம் கேரளா கர்நாடக ஆந்திரா போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை.

    இதனால் மொத்த வியாபாரம் கடந்த வாரத்தை விட இந்த வாரம் மந்தமாகவே நடந்தது. இன்று மொத்த வியாபாரம் 25 சதவீதம் மட்டுமே நடைபெற்றது.

    காட்டன் சுடிதார், காட்டன் வேட்டி, சட்டைகள், சிறுவருக்கான காட்டன் சட்டைகள், பனியன் ஜட்டிகள் விற்பனை அமோகமாக இருந்தது.

    ×