search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Errors"

    • பாலங்களில் எழுதப்பட்ட ஒவ்வொரு குறளிலும் எழுத்து பிழைகள் இருந்தன.
    • இதனை படித்து பார்த்த தமிழ் ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    பூதலூர்:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக நேற்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் ஆதாரம் மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சமும் நிறைந்த இடமாக கல்லணை விளங்கி வருகிறது. இதனால் இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பொது மக்கள் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் கல்லணை பாலங்களில் உள்ள சுவர்களில் திருவள்ளுவரின் வான்சிறப்பு அதிகாரத்தில் இருந்து திருக்குறள் எழுதப்பட்டு இருந்தது. ஆனால் எழுதப்பட்ட ஒவ்வொரு குறளிலும் எழுத்து பிழைகள் இருந்தன.

    வான் நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம் என்றுணரற்பாற்று என்ற குறள் கல்லணை பாலத்தில் வான் நின்றி உலகம் வடிங்கி வருதலால் தான் அமிழ்தம் என்று றைந்தற்று என்று பிழையாக எழுதப்பட்டு இருந்தது.

    இதேப்போல், நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான் நல்கா தாகிவிடின் என்ற குறள் இரண்டு இடங்களில் இரு வேறு விதமாக எழுதப்பட்டு ள்ளது. இதனை படித்து பார்த்த தமிழ் ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர். உடனடியாக பிழையாக எழுதப்பட்ட திருக்குறள்களை சரியான முறையில் மாற்றி எழுத வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    ×