என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ervadi"
- ஏர்வாடி அருகே உள்ள இளையநயினார் குளம், மெயின் ரோட்டை சேர்ந்தவர் வேல்சக்தி. தொழிலாளி. இவரது மனைவி தவசிகனி (வயது 24).
- வீட்டில் இருந்த தவசிகனி தனது நகையை கழற்றி பீரோவில் வைத்து விட்டு, தனது 3 வயது மகனுடன் மாயமானார்.
களக்காடு:
ஏர்வாடி அருகே உள்ள இளையநயினார் குளம், மெயின் ரோட்டை சேர்ந்தவர் வேல்சக்தி. தொழிலாளி. இவரது மனைவி தவசிகனி (வயது 24). சம்பவத்தன்று வேல்சக்தி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த தவசிகனி தனது நகையை கழற்றி பீரோவில் வைத்து விட்டு, தனது 3 வயது மகனுடன் மாயமானார்.
வீட்டிற்கு திரும்பி வந்த வேல்சக்தி மனைவி மற்றும் மகனை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகனுடன் மாயமான தவசிகனியை தேடி வருகின்றனர்.
- வடிவேல்-மதிஷாவுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
- மதிஷாவை வடிவேல் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து தகவல் எதுவும் கிடைக்க வில்லை.
களக்காடு:
ஏர்வாடி அருகே உள்ள சேசையாபுரம், வடக்குத்தெருவை சேர்ந்தவர் வடிவேல். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மதிஷா (23). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.
இந்நிலையில் மதிஷா கடந்த 11-ந் தேதி வள்ளியூர் செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வடிவேல் பல்வேறு இடங்களில் தேடியும் மதிஷா குறித்து தகவல் எதுவும் கிடைக்க வில்லை. இதையடுத்து அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்ம ராஜ் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி மாயமான மதிஷாவை தேடி வரு கின்றனர்.
- ஏர்வாடி அருகே கீழக்கட்டளை கிராமத்தில் அமைந்துள்ள மேல்நாட்டு பெருமாள் சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா இன்று மாலை தொடங்குகிறது.
- விழாவின் தொடக்கமாக மாலை 5 மணிக்கு தீர்த்தம் எடுத்து வருதல், கொடி அழைப்பு, கணபதி ஹோமம், இரவு 7.30 மணிக்கு கும்பம் ஏற்றுதல் நடக்கிறது.
ஏர்வாடி:
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே கீழக்கட்டளை கிராமத்தில் அமைந்துள்ள மேல்நாட்டு பெருமாள் சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. விழாவின் தொடக்கமாக மாலை 5 மணிக்கு தீர்த்தம் எடுத்து வருதல், கொடி அழைப்பு, கணபதி ஹோமம், இரவு 7.30 மணிக்கு கும்பம் ஏற்றுதல் நடக்கிறது. இரவு 8 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு கணியான் நிகழ்ச்சி, நள்ளிரவு 2 மணிக்கு சாஸ்தா பிறப்பு நடக்கிறது.
தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு கணியான் நிகழ்ச்சி, மதியம் 12 மணிக்கு மதியக்கொடை, மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. பின்னர் மாலை 4 மணிக்கு பெருமாளுக்கு பால் வைத்தல், 6 மணிக்கு கணியான் நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு கரகாட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, பின்னர் பொங்கல் வைத்தல் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை நடைபெறுகிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு சுவாமி வீதி உலா வருதல், 10 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. கொடை விழாவுக்கான ஏற்பாடுகளை கீழக்கட்டளை ஊர்பொதுமக்கள் செய்து உள்ளனர்.
- ஜனார்த்தனன் பெயிண்டிங் வேலைக்காக ஏர்வாடி மீனாட்சிபுரத்திற்கு நண்பர்களுடன் வந்திருந்தார்.
- இரு தரப்பை சேர்ந்த 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
களக்காடு:
தெற்கு வள்ளியூரை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது18). இவர் பெயிண்டிங் வேலைக்காக ஏர்வாடி மீனாட்சிபுரத்திற்கு நண்பர்களுடன் வந்திருந்தார். வேலை முடிந்ததும் ஊருக்கு புறப்பட்ட போது, சேசையாபுரத்தை சேர்ந்த கண்ணன் (26), மணிகண்டன் (26), பிரவின்குமார் (19), மற்றொரு மணிகண்டன் (19) ஆகிய 4 பேரும் சேர்ந்து ஜனார்த்தனை வழிமறித்து தகராறு செய்தனர்.
இதுபற்றி ஜனார்த்தனன் தெற்கு வள்ளியூரில் உள்ள தனது உறவினர் இளங்கோவிடம் (19) தகவல் கூறினார்.
இதையடுத்து இளங்கோ சம்பவ இடத்திற்கு வந்து ஏன் தகராறு செய்கிறீர்கள் என தட்டி கேட்டார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரம் அடைந்த கண்ணன், மணிகண்டன், பிரவின்குமார் , மற்றொரு மணிகண்டன் ஆகிய 4 பேரும் சேர்ந்து இளங்கோ மற்றும் ஜனார்த்தனை அவதூறாக பேசி பாட்டிலால் தாக்கினர். மேலும் அவரது மோட்டார்சைக்கிளையும் சேதப்படுத்தி மிரட்டல் விடுத்தனர்.
இதுபோல இளங்கோ, முகேஷ்குமார் (18), ஜனார்த்தனன் (18), அஸ்வின்பாபு (20), முரளிகாந்த் (19), மாதவன் (22) ஆகிய 6 பேரும் சேர்ந்து பிரவின்குமாரை பாட்டிலால் தாக்கினர். இதுபற்றி இரு தரப்பினரும் ஏர்வாடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் இதுதொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கண்ணன், மணிகண்டன் பிரவின்குமார், மற்றொரு மணிகண்டன், இளங்கோ, முகேஷ்குமார் ஜனார்த்தனன் அஸ்வின்பாபு ,முரளிகாந்த் ஆகிய 9 பேரை கைது செய்தனர். மாதவனை தேடி வருகின்றனர்.
- ஏர்வாடியில் வரகுண பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட பெரியநாயகி அம்பாள் சமேத திருவழுதீஸ்வரர் கோவில் உள்ளது.
- ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா வைபவங்கள் நடைபெற்று வருகிறது.
ஏர்வாடி:
ஏர்வாடியில் வரகுண பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட பெரியநாயகி அம்பாள் சமேத திருவழுதீஸ்வரர் கோவில் உள்ளது.
இங்கு கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தேரோட்ட திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங் களில் சுவாமி அம்பாள் வீதி உலா வைபவங்கள் நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
இதேபோல் களக்காடு கோமதி அம்பாள் சத்தியவாகீஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவினை வெவ்வேறு சமூகத்தினரை சேர்ந்தவர்கள் மண்டகபடி செய்து விழாவை சிறப்பித்து வருகின்றனர்.
- உத்தரபிரேதச மாநிலம், அசோஹா உன்னா மாவட்டம், குசாலிகெராவை சேர்ந்தவர் விஜய் ஷியாம் மகன் நீரஜ் (வயது26).
- இவர் ஏர்வாடி அருகே வாடகை வீட்டில் தங்கியிருந்து குல்பி ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார்.
களக்காடு:
உத்தரபிரேதச மாநிலம், அசோஹா உன்னா மாவட்டம், குசாலிகெராவை சேர்ந்தவர் விஜய் ஷியாம் மகன் நீரஜ் (வயது26).
இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏர்வாடி அருகே உள்ள பெரிய நாயகிபுரத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து குல்பி ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இவர் அங்குள்ள தெரு நல்லியில் குல்பி ஐஸ் வைக்கும் பாத்திரத்தை கழுவினார். அப்போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செந்தில்வேல் (50) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த செந்தில்வேல், நீரஜை ஆபாசமாக பேசி, தலையில் அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த நீரஜை அக்கம், பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செந்தில்வேலை கைது செய்தனர்.
- நேற்று இரவில் அலங்கார ஆர்ச்சை அகற்ற போலீசார் முயற்சி செய்தனர்.
- போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் டி.எஸ்.பி. ராஜு பேச்சுவார்த்தை நடத்தினார்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தி னருக்கு பாத்தியப்பட்ட சந்தனமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கொடைவிழா வருகிற 8-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
இதையொட்டி விழா கமிட்டினர் சார்பில் சிறும ளஞ்சி மெயின் ரோட்டில் அலங்கார விளக்கு ஆர்ச் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் நேற்று இரவில் அலங்கார ஆர்ச்சை அகற்ற முயற்சி செய்தனர்.
இதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ச்சை அகற்ற விடாமல் முற்றுகையிட்டனர். அதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து நாங்குநேரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி பெற்று ஆர்ச் வைக்குமாறு போலீசார் தெரிவித்ததையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
- ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி, ஜெகஜீவன்ராம் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 24).
- தற்போது இவர் தனது அண்ணனுக்கு சொந்தமான காரை ஓட்டி வருகிறார்.
களக்காடு:
ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி, ஜெகஜீவன்ராம் தெருவை சேர்ந்தவர் சந்தனராஜ் மகன் அருண்குமார் (வயது 24). இவர் கடந்த 1 வருடத்திற்கு முன்பு கன்னியாகுமரியில் குட்கா வியாபாரி ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கன்னியாகுமரி போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
கார் திருட்டு
தற்போது இவர் தனது அண்ணனுக்கு சொந்தமான காரை ஓட்டி வருகிறார். நேற்று மாலை 3 மணிக்கு அருண்குமார் காரை தனது வீட்டின் அருகே நிறுத்தியிருந்தார். அப்போது ஒரு காரில் அங்கு வந்த 3 மர்ம நபர்கள் காரை திருடி சென்று விட்டனர். இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே இன்று அதிகாலை கார் திருட்டு வழக்கில் தொடர்புடைய ஜெயக்குமார் என்பவர் திசையன்விளை தனியார் விடுதியில் தங்கியிருப்பதாக ஏர்வாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏர்வாடி போலீசார் திசையன்விளைக்கு சென்று ஜெயக்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் திசையன்விளை மற்றும் ஏர்வாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பிரவின்ராஜ் அடிக்கடி குமாரின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
- பிரவின் ராஜியும், இந்திராவும் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளபதி சமுத்திரம் கீழூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார், இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர்.
கள்ளக்காதல்
இந்நிலையில் குமாரின் உறவினரான பணகுடி அருகே உள்ள ரோஸ்மியா புரத்தை சேர்ந்த பிரவின்ராஜ் (வயது 30) என்பவர் அடிக்கடி குமாரின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதில் அவருக்கும், இந்திராவிற்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடையில் கள்ளக்காதலாக மாறியது.
இதையறிந்த குமார் இருவரையும் எச்சரித்தார். ஆனால் இருவரும் கள்ளக்காதலை கைவிட வில்லை. இதனைதொடர்ந்து குமார், இந்திராவை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதன் பின் பிரவின் ராஜியும், இந்திராவும் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தனர். இதற்கிடையே நேற்று இரவில் பிரவின்ராஜ் இந்திரா வீட்டிற்கு வந்துள்ளார்.
தற்கொலை
இன்று அதிகாலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் எழுந்துள்ளது. ஆத்திரம் அடைந்த இந்திரா, பிரவின்ராஜை வீட்டிற்கு வெளியே தள்ளி கதவை சாத்தினார். இதனால் மனம் உடைந்த பிரவின்ராஜ் கத்தியால் தனது கழுத்தை தானே அறுத்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் வயிற்றிலும் கத்தியால் குத்தி கொண்டுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார். இதுகுறித்து ஏர்வாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜேஸ்வரி அனந்தப்பனிடம் பேசிக் கொண்டிருந்தார்.
- இசக்கிராஜா, அனந்தப்பனை கை விரல்களில் கடித்தார்.
களக்காடு:
ஏர்வாடி மரக்குடி தெருவை சேர்ந்தவர் ஜோசப் பிரான்சிஸ் சாவி யோ. இவரது குடும்பத்தின ருக்கும், அதே பகுதியை சேர்ந்த இசக்கிராஜா (வயது 26) குடும்பத்தினருக்கும் பொது முடுக்கில் தூண் கட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று ஜோசப் பிரான்சிஸ் மனைவி ராஜேஸ்வரி (37) தனது வீட்டின் முன் நின்று தந்தை அனந்தப்பனிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இசக்கிராஜா, ராஜேஸ்வரி குடும்பத்தினரை அவதூறாக பேசினார். இதனை அன ந்தப்பன் தட்டி கேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் இசக்கிராஜா அனந்தப்பனை கை விரல்களில் கடித்தார். மேலும் ராஜேஸ்வரியை கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, இசக்கி ராஜாவை கைது செய்தனர்.
- ராணி கணவரை பிரிந்து ஏர்வாடி அருகே வசித்து வருகிறார்.
- சுடலியம்மாளுக்கும், ஆசீர் பால்ராஜ்க்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
களக்காடு:
வள்ளியூர் ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் நியூட்டன் மகன் ஆசீர் பால்ராஜ் (வயது 55). இவரது மனைவி ராணி. இவர்களுக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.
முன்விரோதம்
இதனால் ராணி கணவரை பிரிந்து, ஏர்வாடி அருகே உள்ள சமாதான புரம், காருண்யா நகரில் வசித்து வருகிறார். ஆசீர் பால்ராஜ், ராணி வீட்டிற்கு அடிக்கடி சென்று தகராறு செய்து வந்துள்ளார்.
இதனை ராணி அதே தெருவில் வசிக்கும் பழனி மனைவி சுடலியம்மாளிடம் (48) கூறினார். இதையடுத்து சுடலியம்மாள், இதுகுறித்து ஆசீர் பால்ராஜை தட்டிக்கேட்டார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் சுடலியம்மா ளுக்கும், ஆசீர் பால் ராஜ்க்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
கத்திக்குத்து
இந்நிலையில் நேற்று ராணியும், சுடலியம்மாளும் அங்குள்ள கிறிஸ்தவ சபைக்கு சென்று கொண்டி ருந்தனர். அப்போது அங்கு வந்த ஆசீர்பால்ராஜ், சுடலியம்மாளை வழிமறித்து கத்தியால் குத்தினார். இதில் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆசீர் பால் ராஜை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்