என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ervadi dargah"
- சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு கொடி இறக்கம் நடைபெற்றது.
- ஏராளமான யாத்ரீகர்கள் கலந்து கொண்டு நேர்ச்சைகளை நிறைவேற்றினர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் பாதுஷா ஷஹுது ஒலியுல்லாஹ் தர்காவில் கடந்த 12-ந்தேதி சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது. விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான யாத்ரீகர்கள் கலந்து கொண்டு நேர்ச்சைகளை நிறைவேற்றினர். கடந்த 13-ந் தேதி திருவிழா முடிவடைந்தது.
அதனை தொடர்ந்து நேற்று மாலை 5.30 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்டம் டவுன் காஜி சலாஹூத்தீன் ஆலிம் தலைமையில் உலமாக்கள் முன்னிலையில் உலக நன்மைக்காகவும், உலக அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு கொடி இறக்கம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்களுக்கும் நேர்ச்சையாக நெய்சோறு வழங்கப்பட்டு விழா நிறைவடைந்தது.
விழா ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையின் தலைவர் பாக்கிர் சுல்தான், செயலாளர் செய்யது சிராஜுதீன், துணைத்தலைவர் சாதிக் பாட்ஷா ஆகியோர் தலைமையில் தர்கா அக்தார் நிர்வாக சபையினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில் ஏராளமான போலீசார் செய்திருந்தனர்.
- ஆயிரக்கணக்கான மக்கள் மலர்களை தூவி வரவேற்றனர்.
- 19-ந்தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் அன்னதானம் வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள அல் குத்பு சுல்த்தான் செய்யது பாதுஷா நாயகம் ஷஹீது ஒலியுல்லாஹ் (ரலி) அவர்களின் தர்காவில் கடந்த மாதம் மே 21-ந்தேதி மவுலுது (புகழ்மாலை) ஓதப்பட்டு சந்தனக்கூடு விழா தொடங்கியது. நேற்று மாலை யானை, 21 குதிரை ஊர்வலத்துடன் சென்று தர்காவில் போர்வை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதிகாலை ஏர்வாடி முஜிபிர் நல்ல இபுறாகிம் தர்காவில் இருந்து சந்தனக்குடம் எடுத்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு தர்கா வந்தடைந்தது. தர்காவை 3 முறை வலம் வந்த பின் சிறப்பு பிரார்த்தனையை மாவட்ட காஜி சலாஹுத்தீன் ஓதினார். அமைச்சர் செஞ்சி மஸ்தான், நவாஸ் கனி எம்.பி., மாவட்ட பா.ஜனதா தலைவர் தரணி முருகேசன் உட்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஏர்வாடி சந்தனக்கூடு உருவாக்குவதில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்பதால் ஆண்டுதோறும் மத நல்லிணக்க விழாவாக கொண்டாடி வருகின்றனர். காலை 6 மணிக்கு மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தர்கா வளாகத்தை வந்தடைந்தது.
தற்போது தர்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மலர்களை தூவி வரவேற்றனர். முன்ன தாக தர்கா ஹக்தார்கள் பாதுஷா நாயகம் அடக்க ஸ்தலத்தில் சந்தனம் பூசி, போர்வையை போர்த்தினர். அதன் பின் பக்தர்களுக்கு சந்தனம் வழங்கினர்.
மதுரை, கோவை, திருச்சி உட்பட பல்வேறு நகரங்களில் இருந்தும், ராமநாதபுரத்தில் இருந்தும் ஏர்வாடி தர்காவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வருகிற 19-ந்தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் அன்னதானம் வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது.
- 12-ந்தேதி சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 13-ந்தேதி தர்காவுக்கு சந்தனக்கூடு வந்தடையும்.
- 19-ந்தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறும்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சுல்தான் செய்யது இபுராகிம் பாதுஷா ஷஹுது ஒலியுல்லா தர்காவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஒருமைப்பாட்டு விழாவாக, ஏர்வாடி தர்கா பொது மகாசபை உறுப்பினர்கள், ஹக்தார் கமிட்டியினர் நடத்தி வருகின்றனர்.
இந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான யாத்ரீகர்கள் வந்து கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந்தேதி மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டு தொடங்கப்பட்டது.
உலமாக்கள், தர்கா ஹக்தார்கள் ஒன்றிணைந்து தர்கா மண்டபத்தில் மாவட்ட தலைமை அரசு காஜி சலாஹூத்தீன் ஆலிம் தலைமையில் உலக அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும் சிறப்பு துஆ ஓதினர். தொடர்ந்து கடந்த 30-ந் தேதி மாலையில் தர்கா வளாகத்தில் அடிமரம் ஏற்றப்பட்டது.
நேற்று ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெவ்வை மகாலில் இருந்து மாலை 4 மணிக்கு கொட்டும் முழக்கங்களுடன் குதிரை நாட்டியத்துடன் யானை மீது கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக தர்கா வந்தடைந்தது. இரவு 7 மணிக்குமேல் நாரே தக்பீர் என்ற முழக்கத்துடன் கொடி ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 12-ந்தேதி மாலை மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 13-ந்தேதி அதிகாலை தர்காவுக்கு சந்தனக்கூடு வந்தடையும்.
பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். 19-ந்தேதி கொடியிறக்கத்துடன், யாத்ரீகர்களுக்கு நேர்ச்சை வழங்கப்பட்டு விழா நிறைவு பெறும்.
இந்த விழாவில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வதால் தர்கா பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் எஸ்.முகம்மது பாக்கிர் சுல்தான் தலைமையில், செயலாளர் எஸ்.செய்யது சிராஜ்தீன், துணை தலைவர் ஜெ.சாதிக் பாட்சா மற்றும் ஹக்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள், தர்கா ஹக்தார்கள் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்