என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ervadi"

    • ஏர்வாடி அருகே கீழக்கட்டளை கிராமத்தில் அமைந்துள்ள மேல்நாட்டு பெருமாள் சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா இன்று மாலை தொடங்குகிறது.
    • விழாவின் தொடக்கமாக மாலை 5 மணிக்கு தீர்த்தம் எடுத்து வருதல், கொடி அழைப்பு, கணபதி ஹோமம், இரவு 7.30 மணிக்கு கும்பம் ஏற்றுதல் நடக்கிறது.

    ஏர்வாடி:

    நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே கீழக்கட்டளை கிராமத்தில் அமைந்துள்ள மேல்நாட்டு பெருமாள் சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. விழாவின் தொடக்கமாக மாலை 5 மணிக்கு தீர்த்தம் எடுத்து வருதல், கொடி அழைப்பு, கணபதி ஹோமம், இரவு 7.30 மணிக்கு கும்பம் ஏற்றுதல் நடக்கிறது. இரவு 8 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு கணியான் நிகழ்ச்சி, நள்ளிரவு 2 மணிக்கு சாஸ்தா பிறப்பு நடக்கிறது.

    தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு கணியான் நிகழ்ச்சி, மதியம் 12 மணிக்கு மதியக்கொடை, மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. பின்னர் மாலை 4 மணிக்கு பெருமாளுக்கு பால் வைத்தல், 6 மணிக்கு கணியான் நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு கரகாட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, பின்னர் பொங்கல் வைத்தல் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை நடைபெறுகிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு சுவாமி வீதி உலா வருதல், 10 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. கொடை விழாவுக்கான ஏற்பாடுகளை கீழக்கட்டளை ஊர்பொதுமக்கள் செய்து உள்ளனர்.

    • வடிவேல்-மதிஷாவுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
    • மதிஷாவை வடிவேல் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து தகவல் எதுவும் கிடைக்க வில்லை.

    களக்காடு:

    ஏர்வாடி அருகே உள்ள சேசையாபுரம், வடக்குத்தெருவை சேர்ந்தவர் வடிவேல். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மதிஷா (23). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

    இந்நிலையில் மதிஷா கடந்த 11-ந் தேதி வள்ளியூர் செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வடிவேல் பல்வேறு இடங்களில் தேடியும் மதிஷா குறித்து தகவல் எதுவும் கிடைக்க வில்லை. இதையடுத்து அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்ம ராஜ் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி மாயமான மதிஷாவை தேடி வரு கின்றனர்.

    • ஏர்வாடி அருகே உள்ள இளையநயினார் குளம், மெயின் ரோட்டை சேர்ந்தவர் வேல்சக்தி. தொழிலாளி. இவரது மனைவி தவசிகனி (வயது 24).
    • வீட்டில் இருந்த தவசிகனி தனது நகையை கழற்றி பீரோவில் வைத்து விட்டு, தனது 3 வயது மகனுடன் மாயமானார்.

    களக்காடு:

    ஏர்வாடி அருகே உள்ள இளையநயினார் குளம், மெயின் ரோட்டை சேர்ந்தவர் வேல்சக்தி. தொழிலாளி. இவரது மனைவி தவசிகனி (வயது 24). சம்பவத்தன்று வேல்சக்தி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த தவசிகனி தனது நகையை கழற்றி பீரோவில் வைத்து விட்டு, தனது 3 வயது மகனுடன் மாயமானார்.

    வீட்டிற்கு திரும்பி வந்த வேல்சக்தி மனைவி மற்றும் மகனை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகனுடன் மாயமான தவசிகனியை தேடி வருகின்றனர்.

    ஏர்வாடியில் புகையிலை மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    வள்ளியூர்:

    ஏர்வாடியில் புகையிலை மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

    ஏர்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை சார்பில் நடைபெற்ற இப்பேரணியை வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி கிளப் தலைவர் மேக்ரோ பொன் தங்கதுரை கொடி அசைத்து தொடங்கிவைத்தார். 

    செயலாளர் சுகிர்கந்தன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

    பேரணி பிரதான சாலை வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை தலைவர்  சுப்பிரமணியன் செய்திருந்தார்.
    • தளவாய்புரம் பஞ்சாயத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • பஞ்சாயத்தை சோலை வனமாக்கும் அரசின் திட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மதன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

    ஏர்வாடி:

    தளவாய்புரம் பஞ்சாயத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    பஞ்சாயத்துக்கு ட்பட்ட பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    பஞ்சாயத்தை சோலை வனமாக்கும் அரசின் திட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மதன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, டி.வி.எஸ். அறக்கட்டளை முருகன், களக்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் மங்கையர்கரசி, ஒன்றிய பொறியாளர் பிரவின், பணி மேற்பார்வையாளர் சீனிவாச ராகவன், நல்லையா பீட்டர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாச பெருமாள், ஊராட்சி செயலர் திருமலை நம்பி, பணிதள பொறுப்பாளர் நாச்சியார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நேற்று இரவு 2 பேரும் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டு உள்ளனர்.
    • தளபதிசமுத்திரம் மேலூர் அருகே நான்குவழிச்சாலையில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த சுத்தமல்லி பெரியார்நகரை சேர்ந்தவர் வினோத்குமார்(வயது 31). இவரும், இவரது நண்பரும் நாகர்கோவில் அருகே உள்ள கோணத்தில் வேலை பார்த்து வந்தனர்.

    கட்டுப்பாட்டை இழந்தது

    நேற்று இரவு 2 பேரும் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டு உள்ளனர். நள்ளிரவில் நாங்குநேரியை அடுத்த தளபதிசமுத்திரம் மேலூர் அருகே நான்குவழிச்சாலையில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

    இதில் வினோத்குமாரும், அவரது நண்பரும் சாலையில் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் நின்றவர்கள் 2 பேரையும் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பலி

    ஆனால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே வினோத்குமார் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அவருடைய நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தின்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்றும் அவர்கள் மீது மோதிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஏர்வாடி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அம்பேத்கர் நகரில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • பஞ்சாயத்து தலைவர் மதன்ராஜ் முயற்சியால் தற்போது அனைத்து பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன.

    ஏர்வாடி:

    ஏர்வாடி அருகே உள்ள தளவாய்புரம் பஞ்சாயத்துக்குட்பட்ட அம்பேத்கர் நகரில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 33 வருடங்களாக இந்த ஊர் பொதுமக்கள் வெளியூர் செல்ல அருகில் உள்ள தளவாய்புரம் பஸ் நிறுத்தத்திற்கு வந்து தங்களது போக்குவரத்து பயணத்தை மேற்கொண்டு வந்துள்ளனர்.

    இதனால் மாணவர்கள், கூலி தொழிலாளர்கள் என பலதரப்பட்ட மக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். பலமுறை அம்பேத்கர் நகரில் பஸ் நின்று செல்ல மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற நிலையில் தளவாய்பு ரம் பஞ்சாயத்து தலைவர் மதன்ராஜ் தீவிர முயற்சியால் தற்போது அம்பேத்கர் பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன.

    கடந்த 33 வருடங்களாக நிறைவேறாத மக்களின் கோரிக்கையை பஞ்சாயத்து தலைவர் மதன்ராஜ் நிறைவேற்றி வைத்துள்ளதாக இப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.

    • ஏர்வாடி பகுதியில் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம் நடைபெற்றது.
    • வேளாண் சிறப்பு திட்டங்களை அப்பகுதி விவசாயிகள் அறிந்து கொண்டு பயனடைந்தனர்.

    ஏர்வாடி:

    வேளாண்மை துறை சார்பில் களக்காடு, திருக்குறுங்குடி, ஏர்வாடி பகுதிகளில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வேளாண் பயிற்சி முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் களக்காடு சிங்கிகுளம் பஞ்சாயத்து சமுதாய நலக்கூடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம் நடைபெற்றது.

    இத்திட்டத்தை பற்றிய விரிவான கருத்தாக்கத்தை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நயினார் முகம்மது வழங்கினார். சிங்கிகுளம் கால்நடை உதவி மருத்துவர் ஜான் ரவிகுமார் ஆடுகளுக்கு குடல்புழு நீக்கம் செய்யும் செயல் விளக்கத்தை எடுத்துரைத்தார்.

    வேளாண்மை பொறியியல்துறையின் திட்டங்களை உதவி பொறியாளர் அருணா விளக்கி கூறினார். தோட்டக்கலையின் திட்டங்களை தோட்டக்கலை உதவி அலுவலர் முத்துவிநாயகம் விளக்கி கூறினார்.

    வேளாண் வணிக துறை சார்ந்த திட்டங்களை உதவி வேளாண் அலுவலர் முத்து வீர் சிங் விளக்கி கூறினார். பல்வேறு வேளாண் சிறப்பு திட்டங்களை அப்பகுதி விவசாயிகள் அறிந்து கொண்டு பயனடைந்தனர்.

    உதவி கால்நடை மருத்துவர் ராமகிருஷ்ணன் கால்நடை மருத்துவ முகாமை நடத்தினார். இதில் களக்காடு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நயினார் முகம்மது தலைமை தாங்கினார். சிங்கிகுளம் பஞ்சாயத்து தலைவர் முத்தையா சுரேஷ் முன்னிலை வகித்தார்.

    வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஜாய் பத்ம தினேஷ் வரவேற்று பேசினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் அஞ்சனாதேவி செய்திருந்தார். கோவிலம்மாள்புரம் வேளாண்மை அலுவலர் வானுமாமலை, தோட்டக்கலை அலுவலர் இசக்கியப்பன், உதவி வேளாண்மை அலுவலர்கள் அப்துல் ரவூப், செங்களாகுறிச்சி கிராம துணை வேளாண்மை அலுவலர் காசி, உதவி வேளாண்மை அலுவலர் காமாட்சி, உதவி கால்நடை மருத்துவர் சிந்தியா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×