search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ex-Servicemen's"

    • மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கவும் ஆலோசனை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
    • மாவட்ட கலெக்டரிடம் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நல சங்க பொது பேரவை கூட்டம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் சக்தி நாயப் சுபேதார் நடராஜ், பிளைட் லெப்டினன்ட் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள், சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை இணைந்து நடத்தி வரும் இலவச யூனிபார்ம் சர்வீஸ் மற்றும் போட்டித் தேர்வுபயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கவும் ஆலோசனை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் மாவட்ட கலெக்டரிடம் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் முன்னாள் ராணுவ வீரர்களின் ஆவணங்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் ராணுவ நல சங்க பொருளாளர் சிவகுமார் நன்றி கூறினார்.

    • ராணுவ வீரர் நல சங்க கூட்டம் உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினென்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை அரங்கத்தில் நடந்தது.
    • அனைத்துபோட்டித் தேர்விற்கான பயிற்சிகள்வழங்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    உடுமலை:

    ராணுவ வீரர் நல சங்க கூட்டம் உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினென்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை அரங்கத்தில் நடந்தது. கோவை மாநகர மண்டல தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில்முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கிடைக்கும் ஈ சி எச். சேவையில் உள்ள குறைகள் நீக்கப்பட்டு முறையான சேவைகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யவும் தனித்தனியே இயங்கிக் கொண்டிருக்கும் முன்னாள் ராணுவ வீரர் சங்கங்கள் அனைத்தும் ஒருங்கிணைப்பு செய்வது, யூனிபார்ம் சர்வீஸ்களுக்கான உடல் தகுதி தேர்விற்கும், எழுத்து தேர்விற்கும்பயிற்சிகள் கொடுத்தல், முன்னாள் ராணுவ வீரர்களின் ஆவணங்களில் உள்ள பதிவுகளை பென்ஷன் பெறுவதற்கு தகுதி உடையதாக திருத்திக் கொள்வதற்கு ஏற்பாடு செய்தல், கடற்படை, விமானப்படை உட்பட போலீஸ் மற்றும் ராணுவத்திற்கு நடத்தப்படும் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பதவிக்கான அனைத்து வகையான அனைத்துபோட்டித் தேர்விற்கான பயிற்சிகள்வழங்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கோவை மாநகர மண்டல தலைவர் ராமநாதன் மற்றும் உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம் ,செயலாளர் சக்தி ,பொருளாளர்சிவக்குமார், துணைத்தலைவர் கோவிந்தராஜலு, பிளைட் லெப்டினென்ட் தங்கவேல் நாயப் சுபேதார்நடராஜ் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

    • கயத்தாறில் முன்னாள் ராணுவ வீரர்கள் புதிய அலுவலக கட்டிடத்தை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
    • பின்னர் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 10,12, வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    கயத்தாறு:

    கயத்தாறில் முன்னாள் ராணுவ வீரர்கள் புதிய அலுவலக கட்டிடத்தை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.கயத்தாறு பேரூராட்சி மன்றத் தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை குத்துவிளக்கு ஏற்றினார். ராணுவ வீரர் சங்க தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தாசில்தார் சுப்புலட்சுமி, கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன், சங்க செயலாளர் நிறைபாண்டிசாமி, பொருளாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் போது கலெக்டர் செந்தில் ராஜ் மரக்கன்றுகள் நட்டார். பின்னர் ராணுவ வீரர்களின் குழந்தைகள் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 10,12, வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.கலெக்டர் செந்தில்ராஜ் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    ×