என் மலர்
நீங்கள் தேடியது "Excavator"
- விஜயகரிசல் குளம் அகழாய்வில் பச்சை குத்தும் கருவி கண்டெடுக்கப்பட்டது.
- மேற்கண்ட தகவலை தொல்லியல் துறை இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.
சிவகாசி
சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்ட நிலையில் சங்கு வளையல்கள், மண் சட்டி, நீர்க்கிண்ணம், யானைத் தந்ததால் செய்யப்பட்ட பகடைக்காய், சுடு மண்ணால் செய்யப்பட்ட பொம்மை, எடை கற்கள், நெசவுத் தொழிலுக்கு பயன்படு த்தப்பட்ட தக்களி, ஏற்றுமதிக்கு பயன்ப டுத்தப்பட்ட முத்திரை கருவி, கல் மணிகள், பாசிமணிகள் என 2800-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத் துள்ளன. நேற்று தோண்டப்பட்ட குழியில் பச்சை குத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட அச்சு கிடைத்துள்ளது. அதில் இலைகளுடன் கூடிய அழகாக வடிவமைக் கப்பட்டது. இதன்மூலம் பழங்கா லத்தில் நம் முன்னோர்க ளிடம் பச்சை குத்தும் வழக்கம் இருந்துள்ளது உறுதிப்ப டுத்தப்பட்டுள்ளது. மேலும் அகழாய்வு தோண்டப்பட்டதில் 6 குழிகள் முழுமையாக பணிகள் முடிவ டைந்துள்ளன.
இந்த குழியில் கிடைத்த பொருட்களின் நீளம், அகலம் ஆகியவற்றை வரைபடம் மூலம் ஆவணப்படுத்த முயற்சி மற்றும் அளவீடு செய்யும் முயற்சியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆவணப்படுத்தும் பணி தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறும். மேற்கண்ட தகவலை தொல்லியல் துறை இயக்குனர் பொன்பாஸ்கர் தெரிவித்தார்.