என் மலர்
நீங்கள் தேடியது "Expectations"
- அன்னூரில் இருந்து, 8 கி.மீ., தூரத்தில் பொங்கலூர் உள்ளது.
- பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் இந்த ஊராட்சியில் தான் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் இந்த ஊராட்சியில் தான் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் இந்த ஊராட்சியில் தான் அமைந்துள்ளது.
திருப்பூர் :
கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்து கடந்த 2009 பிப்ரவரி மாதம் திருப்பூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது.
அப்போது அவிநாசி தாலுகாவில் இருந்த அன்னூர் ஒன்றியம் கோவை மாவட்டத்திலும், அவிநாசி ஒன்றியம் திருப்பூர் மாவட்டத்திலும் சேர்க்கப்பட்டன. புதிய மாவட்டம் பிரித்தபோது அன்னூரை ஒட்டி உள்ள பொங்கலூர் ஊராட்சி மக்கள் தங்கள் ஊராட்சியை கோவை மாவட்டத்தில் சேர்க்கும்படி கோரிக்கை வைத்தனர். இருந்தும் இந்த ஊராட்சி திருப்பூர் மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டது.
இதனால் 12 ஆண்டுகளாக கடும் சிரமத்துக்குள்ளாகி வருவதாக அந்த ஊராட்சி மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து பொங்கலூர் ஊராட்சி மக்கள் கூறியதாவது:- கோவையில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், அன்னூரில் இருந்து, 8 கி.மீ., தூரத்தில் பொங்கலூர் உள்ளது. பொங்கலூர் ஊராட்சியில், தாசராபாளையம், அய்யப்பநாயக்கன்பாளையம், மொண்டிபாளையம், திம்மநாயக்கன்புதுார், பாப்பநாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் உள்பட 9 ஊர்கள் உள்ளன. பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் இந்த ஊராட்சியில் தான் அமைந்துள்ளது.
கோவை-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் பொங்கலூர் உள்ளது. பொங்கலூரை அடுத்துள்ள ஆம்போதி ஊராட்சியும், பொங்கலூருக்கு முன்னதாக உள்ள பசூர் ஊராட்சியும் கோவை மாவட்டத்தில் உள்ளன. ஆனால் நடுவில் உள்ள பொங்கலூர் ஊராட்சி மட்டும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது.
இப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு செல்லவும், தாலுகா அலுவலகம் செல்லவும், மூன்று பஸ்கள் மாறி அவிநாசி செல்ல வேண்டிய நிலை உள்ளது. திருப்பூர் கலெக்டர் அலுவலகம் செல்ல வேண்டும் என்றாலும் 3 பஸ்கள் மாறி தான் செல்ல வேண்டும். அதேநேரம் கோவை மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டால் மிக அருகிலேயே ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகியவை அன்னூரில் உள்ளன. உதவி மின்வாரிய பொறியாளர் அலுவலகம், உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் கோவை மாவட்டத்தில் உள்ள பசூர் மற்றும் அன்னூரில் உள்ளன.
எங்கள் ஊராட்சியை கோவை மாவட்டத்துடன் சேர்க்க கோரி பொங்கலூர் ஊராட்சி மன்ற கூட்டத்தில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை, திருப்பூர் கலெக்டர் மற்றும் தமிழக அரசுக்கு பலமுறை மனுக்கள் அனுப்பி, 12 ஆண்டுகளாக போராடி வருகிறோம். எங்களது சிரமத்தை போக்க அரசு பொங்கலுார் ஊராட்சியை கோவை மாவட்டத்துடன் சேர்க்க வேண்டும் என்றனர்.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல உழவர் சந்தைகள் வேகமாக திறக்கப்பட்டன.
- நெல்லை மாவட்டத்தில் 4 இடங்களில் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
நெல்லை:
விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட வேளாண் விளைப் பொருட்களை இடைத்தரகர்கள், வியாபாரிகள் குறுக்கீடு இல்லாமல் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் உழவர் சந்தை திட்டம் தொடங்கப்பட்டது.
முதல் உழவர்சந்தை
1999-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி, முதல் உழவர் சந்தையை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல உழவர் சந்தைகள் வேகமாக திறக்கப்பட்டன.
தாங்கள் விளைவித்த பொருட்கள் நேரடியாக விற்பனை செய்யப்படுவதன் மூலம் அதிக லாபம் கிடைத்ததால் விவசாயிகளிடையே உழவர் சந்தை திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது.
நெல்லை மாவட்டம்
நெல்லை மாவட்டத்தில் பாளை மகாராஜாநகர், மேலப்பாளையம், டவுன் கண்டிகைபேரி மற்றும் அம்பை ஆகிய 4 இடங்களில் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் தமிழகம் முழுவதும் மேலும் 10 உழவர்சந்தைகள் அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி நெல்லையில் மேலும் ஒரு உழவர்சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
5-வது உழவர்சந்தை
அதன்படி நெல்லை மாவட்டத்தில் 5-வது உழவர்சந்தை பாளை என்.ஜி.ஓ. ஏ. காலனியில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி அப்துல்வகாப் எம்.எல்.ஏ. இதற்கான அடிக்கல்லை நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
16 கடைகள்
இந்த உழவர்சந்தையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை நேரடியாக விற்பனை செய்யும் பொருட்டு 16 கடைகள் அமைக்கபட்டுள்ளது. மேலும் விவசாயிகள் தங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஒரு குளிர்பதன கிடங்கு அமைந்துள்ளது. நெல்லை மாநகர பகுதியில் 3 உழவர்சந்தைகள் உள்ளது.
இதில் மகராஜநகர் சந்தையில் மட்டுமே குளிர்பதன கிடங்கு உள்ளது.
தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள உழவர்சந்தையிலும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.மேலும் சி.சி.டி.வி. காமிராக்களும் அமைக்கப்படுகிறது.
நேரடியாக விற்பனை
இதன்மூலம் ரெட்டியார் பட்டி, இட்டேரி, பருத்திப்பாடு, தருவை, முத்தூர், கருங்குளம், முன்னீர்பள்ளம், டக்கரம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது பொருட்களை நேரடியாக விற்பனை செய்து பயன்பெறலாம்.
மேலும் இந்த புதிய உழவர் சந்தையால் என்.ஜி.ஓ. 'ஏ', 'பி' காலனி, ரெட்டியார்பட்டி, திருமால்நகர், பொதிகைநகர், பெருமாள்புரம் பகுதி பொதுமக்கள் குறைந்த விலையில் காய்கறி, பழங்களை வாங்கலாம்.
தயார் நிலையில்
பாளை என்.ஜி.ஓ. ஏ. காலனி புதிய உழவர்சந்தை பணிகள் 5 மாதங்களில் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி 5 மாதங்களில் அனைத்து பணிகளும் முடிவடைந்து திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.
கடந்த 8-ந்தேதி நெல்லையில் நடைபெற்ற விழாவில் மாவட்டத்தில் முடிவடைந்த பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அப்போது என்.ஜி.ஓ. ஏ. காலனி புதிய உழவர்சந்தையும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது திறக்கப்படவில்லை. இது தொடர்பாக உழவர்சந்தைகளின் நிர்வாக அலுவலர் மாரியப்பன் கூறியதாவது:-
விரைவில் திறப்பு
புதிய உழவர்சந்தை பணிகள் அனைத்தும் கடந்த வாரம் முடிந்துவிட்டது. முதல்-அமைச்சர் நெல்லை வந்த போது சிறிய அளவிலான பணிகள் முடிக்கப்படாமல் இருந்தது.
மேலும் பணிகள் முடிந்த பிறகு, அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே திறக்க வேண்டும் என விதி உள்ளது. தற்போது அதிகாரிகளும் ஆய்வு செய்து உள்ளனர். எனவே புதிய உழவர்சந்தை விரைவில் திறப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் கட்டப்பட்டுள்ள புதிய உழவர்சந்தையை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என்பதே விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.