search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Expensive items were burnt and damaged"

    • 16 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது
    • தீயணைப்பு துறையினர் அணைத்தனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே உள்ள காரம் ஊராட்சி, மதுரா மாலையிட்டான் குப்பம் கிராமத்தில் முத்துவேல் கருணாநிதித நகர் உள்ளது. இதில் 38 குடும்பத்தினர் வசுத்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மலையில் பற்றிய தீ வேகமாக பரவியது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நகரில் இருந்த 16 குடிசை வீடுகள் தீவிபத்தில் எரிந்து சாம்பலானது. வீடுகளில் இருந்த டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் எரிந்து சேதமானது.

    தகவலறிந்த வந்தவாசி தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். தகவல் கேள்விப்பட்டு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் இ.எஸ்.டி.கார்த்திகேயன், காரம் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதியான், வந்தவாசி நகர செயலாளர் ஆ.தயாளன், வந்தவாசி மத்திய ஒன்றிய செயலாளர் பெருமாள், ஆகியோர்கள் தீ பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

    விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் மதன்குமார், கிஷோர் குமார், அயலக அணி துணை அமைப்பாளர் ஆரிப், தென்னாகூர் தினகரசு, மாவட்ட பிரதிநித தியாகராஜன், காரம்முத்து, கிளைச் செயலாளர் சித்திக், பிரதிநிதி ஆஜா, ஆகிய தி.மு.க.வினர். உடன் இருந்தனர்.

    ×