என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Extra Box"

    • பழங்கால தொடர்புகளை மீட்டெடுக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று (16-ம் தேதி) முதல் டிசம்பர் 19-ம் தேதி வரை நடக்க உள்ளது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    தமிழகம் உடனான பழங்கால தொடர்புகளை மீட்டெடுக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று (16-ம் தேதி) முதல் டிசம்பர் 19-ம் தேதி வரை நடக்க உள்ளது.

    அப்போது இலக்கியம், பழங்கால நூல்கள், தத்துவம், ஆன்மீகம், இசை நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், நவீன கண்டுபிடிப்புகள், வர்த்தகம் உள்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக கருத்தரங்கு, விவாதம் போன்றவை நடக்க உள்ளது. அடுத்தபடியாக தமிழகத்தின் கலை, கலாச்சாரம், உணவு வகைகள், கைத்தறி- கைவினை பொருட்கள் அடங்கிய பொருட்காட்சி நடக்கிறது.

    இது தவிர பரதநாட்டியம், கர்நாடக இசை, தமிழ் நாட்டுப்புற இசை, நாதஸ்வர கச்சேரி, தேவாரம் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளும் நடக்கும். இதனைத் தொடர்ந்து தமிழிசை வடிவில் திருவாசகம், கம்பராமாயண உரை, வில்லுப்பாட்டு, பொம்ம லாட்டம், சிலம்பாட்டம், காவடி ஆட்டம், கரகம், பட்டிமன்றம், நாட்டுப்புற தமிழ் நடனங்கள், பொய்க்கால் குதிரை, தப்பாட்டம் போன்றவை அரங்கேற உள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து மாண வர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், கலாச்சார வல்லுநர்கள், தொழில் முனைவோர், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் செல்ல உள்ளனர். அவர்களின் வசதிக்காக இன்று (16-ந்தேதி), 23, 30 டிசம்பர் 7, 14 ஆகிய நாட்களில் ராமேசுவரம்-பனாரஸ் விரைவு ெரயிலில் (22535) 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படட உள்ளது.அதேபோல நவம்பர் 27, டிசம்பர் 4, 11, 18 ஆகிய நாட்களில் பனாரஸ்-ராமேசுவரம் விரைவு ெரயிலில் 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×