search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Eyeballs not completely"

    • அருப்புக்கோட்டை பகுதிகளில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்புகளால் முழுமையாக நிரம்பாத கண்மாய்களால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • அணைகள், ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    அருப்புக்கோட்டை,

    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள், ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகி ன்றன. இதனால் மாநிலம் முழுவதும் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    வானம் பார்த்த பூமியான விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை ஓரளவுக்கே கை கொடுத்துள்ளது. போதிய அளவு மழை பெய்யாவிட்டாலும் அவ்வப்போது பெய்யும் திடீர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் 50 சதவீத அளவில் தண்ணீர் நிரம்பியுள்ளன.

    ஆனால் அருப்புக்கோட்டையில் விவசாயத்திற்கு அங்குள்ள பெரிய கண்மாய், செவல் கண்மாய், தூமைக்குளம் கண்மாய் மூலம் தண்ணீர் பெறப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக இந்த கண்மாய்களில் எந்தவித சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிகிறது.

    இதனால் கண்மாயில் நீர் தேக்கப்படும் அளவு வெகுவாக குறைந்து ள்ளது. இதை தவிர தற்போது கண்மாய் முழுவதும் 75 சதவீதம் ஆகாய தாமரைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் மழை பெய்தாலும் போதிய தண்ணீர் கண்மாய்களில் தேங்காமல் வீணாக வெளியேறுகிறது.

    இதுகுறித்து அந்தப்ப குதி விவசாயிகள், பொதுமக்கள் பலமுறை அருப்புக்கோட்டை நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழை பெய்ய வைத்து இறைவன் வரம் கொடுத்தாலும் அதிகாரிகள் தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அந்தப்பகதியினர் அதிருப்தியுடன் தெரிவித்த னர்.

    ×