search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake soft drinks"

    • தமிழகம்‌ முழுவதும்‌ போலி மற்றும்‌ காலாவதியான குடிநீர்‌, குளிர்பானம்‌ விற்பனையை தடுக்க, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்‌ பல்வேறு பகுதிகளிலும்‌ ஆய்வு செய்து வருகின்றனர்‌.
    • அதன்படி சேலம்‌ பழைய பஸ் நிலையம், புதிய பேருந்து நிலைய கடைகளில்‌, காலாவதி குளிர்‌பானங்கள்‌ விற்பனை செய்‌யப் படுகிறதா? என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்‌ கண்காணித்து வருகின்றனர்‌.

    சேலம்:

    கோடை காலம் தொடங்கியதை அடுத்து, தமிழகம் முழுவதும் போலி மற்றும் காலாவதியான குடிநீர், குளிர்பானம் விற்பனையை தடுக்க, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கண்காணிப்பு

    அதன்படி சேலம் பழைய பஸ் நிலையம், புதிய பேருந்து நிலைய கடைகளில், காலாவதி குளிர்பானங்கள் விற்பனை செய்யப் படுகிறதா? என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    குறிப்பாக மக்கள் நடமாட்டம் மிகுந்திருப்பதால் காலா வதியான குளிர்பா னங்களை கொடுத்தாலும், கவனிக்காமல் குடித்து விட்டு சென்று விடுவார்கள் என்ற எண்ணம் பெரும்பாலான கடைக்காரர்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே, சுகாதார அலுவலர்கள் முதலில் பேருந்து நிலைய கடைகளை குறி வைத்து களம் இறங்கியுள்ளனர். குடிநீர் பாட்டில் வாங்கும்போது ஐஎஸ்ஐ முத்திரை, அதன்மேல் பகுதியில் ஐஎஸ் எண், முத்திரைக்கு கீழ் பகுதியில் சிஎம்எல் எண்கள் இருக்க வேண்டும். பாட்டிலில் அடைக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி விவரங்களை பார்த்து நுகர்வோர் வாங்க வேண்டும்.

    கோடை சீசனில், கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்கள்தான் மிகவும் அச்சுறுத்தக்கூடியது. கார்பைடு கல்லில் இருக்கக்கூடிய அசிட்டிலீன் வாயு மூலம் மா, வாழை போன்றவை ½ மணி நேரம் முதல் 24 மணி நேரத்துக்குள் பழுக்க வைக்கப்படுகிறது. அவசரமாக கல்லா கட்டும் நோக்கத்தில், வியாபாரிகள் பலர் செயற்கையாக பழங்களை பழுக்க வைக்கின்றனர்.

    செயற்கையாக பழுக்க வைக்கப்படும் பழங்களை தொடர்ந்து உண்பதன் மூலம், நரம்பு மண்டலம், கல்லீரல், குடல், இரைப்பை பாதிக்கும். குழந்தைகள், முதியவர்கள் உட்கொண்டால் அவர்களுக்கு கடும் வயிற்றுப்போக்கு, ஓவ்வாமை ஏற்படலாம்.

    எனவே செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பொதுமக்கள் தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    ×