என் மலர்
நீங்கள் தேடியது "falling from"
- ரோட்டில் திடீரென ஒரு நாய் குறுக்கே வந்ததால் முகேஷ் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
- இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு இடங்க ளில் பலத்த அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.
பவானி:
பவானி அருகே உள்ள ஒலகடம் குட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் முகேஷ் (32). இவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளை யத்தில் உள்ள ஒரு கம்பெனி யில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் இவர் வேலை முடிந்து இரவு குமாரபாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கி ளில் ஒலகடம் பகுதிக்கு சென்று கொண்டு இருந்தார்.
அவர் மயிலம்பாடியில் இருந்து ஒலகடம் செல்லும் ரோடு சடையக் கவுண்டனூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டில் திடீரென ஒரு நாய் குறுக்கே வந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து நிலை தடுமாறினார்.
இதனால் அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு இடங்க ளில் பலத்த அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.
இதைகண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ராமசாமி நிலைதடுமாறி கட்டிடத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
- இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி கே.வி.கே. தெருவை சேர்ந்தவர் ராமசாமி (62). கட்டிட தொழிலாளி. இவர் அந்த பகுதியில் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.
அப்போது அவர் நிலைதடுமாறி கட்டிடத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் அவரது மனைவி நாகமணி சம்பவ இடத்து வந்தார்.
இதை தொடர்ந்து அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராமசாமியை மீட்டு ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.