என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Fare"
- அனுமதி பெறுவதற்கு முன்பே தனியார் நிறுவனம் டிக்கெட் விற்பனையை தொடங்குவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தீபாவளி பண்டிகை தேவையை பூர்த்தி செய்ய குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும்.
சென்னை:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்கள் இருப்பதால் வழக்கமாக இயக்கப்படும் ரெயில்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன.
சிறப்பு கட்டண ரெயில்களை தான் தெற்கு ரெயில்வே அறிவித்து வருகிறது. இது வழக்கமாக இயக்கப்படும் ரெயில் கட்டணத்தை விட அதிகமாகும்.
ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் வசூலிப்பதால் ஏழை, நடுத்தர மக்கள் ரெயில்களை நாடுகின்றனர். ஆனால் ரெயில்வே நிர்வாகமும் தனியாரிடம் சிறப்பு ரெயில்களை இயக்குவதற்கு அனுமதி அளிக்கிறது.
சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி வழியாக திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் எர்ணாகுளத்திற்கு 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 3 ஜோடி சிறப்பு ரெயில்கள் பிரீமியம் கட்டணத்தில் இயக்கப்படும் என தனியார் நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது.
அனுமதி பெறுவதற்கு முன்பே தனியார் நிறுவனம் டிக்கெட் விற்பனையை தொடங்குவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒப்புதல் பெறுவதற்கு முன்பே தனியார் நிறுவனத்தின் கோரிக்கை செயலாக்கத்தில் உள்ளது என்று தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறி இருந்தாலும் இன்று (திங்கட்கிழமை) அனுமதி கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
சென்னையில் இருந்து 9, 10, 11-ந்தேதிகளில் திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் ஆகிய இடங்களுக்கு செல்வதற்கான டிக்கெட்டுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. மறுபுறம் 10, 11, 12 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, நாகர்கோவில், விருதுநகர், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தனியார் நிறுவனம் அறிவித்துள்ள கட்டணம் குறித்து ரெயில் பயணிகள் அதிருப்தி அடைந்து தெரிவித்த கருத்தின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் போர்ட்டல் நேற்று டிக்கெட் முன்பதிவு விருப்பத்தை முடக்கியது.
இது குறித்து அந்த நிறுவன ஊழியர் ஒருவர் கூறுகையில், "சென்னை மற்றும் திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில் இயக்குவதாகவும் இந்த பயணங்களுக்கான முன்பதிவு விருப்பங்கள் இன்று மாலைக்குள் கிடைக்கும்" என்றும் தெரிவித்தார்.
மண்டல ரெயில் பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆர்.பாண்டியராஜா கூறுகையில், "தீபாவளி பண்டிகை தேவையை பூர்த்தி செய்ய குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும். இருப்பினும் பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்க தனியார் ஆபரேட்டருக்கு வசதி அளிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.
சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு 3 அடுக்கு ஏசி படுக்கைக்கு ரூ.2000, 2-ம் வகுப்பு படுக்கைக்கு ரூ.3000 என தனியார் நிறுவனம் கட்டணம் வசூலிக்கிறது" என்றார்.
சிவகாசியை சேர்ந்த காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க செயலர் ஜெயசங்கர் கூறும்போது, தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக சென்னைக்கு செல்கின்றனர். ஆம்னி கட்டணத்தை குறைக்கும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. சென்னையில் இருந்து செங்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், தென்காசிக்கு 2 சிறப்பு ரெயில்கள் தேவை என்றார்.
- ஈரோட்டில் தனியார் பஸ்களில் கட்டணம் உயர்ந்துள்ளது
- பயணிகள் அதிர்ச்சி
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் அரசு போக்குவரத்து பஸ்க ளுக்கு நிகராக தனியார் பஸ்களும் பல்வேறு வழி த்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஈரோடு மாநகர் பகுதிக்கு ள்ளேயும், சேலம், கோவை, திருப்பூர், கோபி, சத்தியம ங்கலம், பழனி, அரச்சலூர் போன்ற பகுதிகளில் தனி யார் பேருந்துகள் இயக்கப்ப ட்டு வருகின்றன.அரசு பஸ்சில் நிர்ணயி க்கப்பட்ட கட்டணம்தான் தனியார் பஸ்களில் இது வரை வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீ ரென தனியார் பஸ்களில் கட்டணம் உயர்த்தப்ப ட்டுள்ளது.
ஈரோட்டில் இரு ந்து பெருந்துறைக்கு செல் லும் தனியார் பஸ்சில் இது வரை 13 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென தற் போது 15 ரூபாயாக உயர்த்த ப்பட்டுள்ளது. இது குறித்து விவரம் கேட்டால் முறை யான பதில் வரவில்லை. இதேபோல் பெருந்துறை யில் இருந்தும் ஈரோடுக்கு வரும் தனியார் பஸ்சில் ரூ.2 கட்ட ணம் உயர்த்தப்ப ட்டுள்ளது. இது குறித்து தனியார் பஸ் கண்டக்டரிடம் பயணி கள் கேட்டபோது எங்களு க்கு ஒன்றும் தெரியாது. கூட்டச் சொன்னதால் கூட்டி விட்டோம் என்று மட்டும் கூறுகின்றனர். இது மட்டுமின்றி வெளியூர் செல்லும் தனியார் பஸ்க ளிலும் கட்டணம் கூடியு ள்ள தாக தகவல் வெளி யாகி உள்ளது. இதனால் பயணி கள் கடும் அதிர்ச்சி அடை ந்துள்ள னர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய கட்டண ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது.
- பனியன் தையலுக்கு ஒரு டஜனுக்கான கட்டணம் ரூ.76.05 ரூபாயாக இருந்தது நாளை முதல் 81.37 ரூபாயாக உயர்கிறது.
திருப்பூர் :
உள்நாட்டு விற்பனை பனியன் மற்றும் ஆடைகள் உற்பத்தி செய்து கொடுக்கும் பவர் டேபிள் நிறுவனங்கள் திருப்பூரில் இயங்கி வருகின்றன. பிராண்டட் மற்றும் உள்நாட்டு விற்பனை ஆடைகள் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஜாப்ஒர்க் முறையில் உற்பத்தி செய்து கொடுக்கின்றனர்.ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய கட்டண ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி கடந்த ஆண்டு ஜூன் 4-ந்தேதி புதிய ஒப்பந்தம் உருவாகியது.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க(சைமா) தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது.பனியன் பேக் பட்டி டிராயர், பேக்பட்டி டபுள் பாக்கெட் ரகங்களுக்கு தனித்தனியே கட்டண உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி முதல் ஆண்டுக்கு 17 சதவீதம் கட்டண உயர்வு வழங்கப்பட்டது.அடுத்து வரும் ஆண்டுகளுக்கு தலா 7 சதவீதம் வீதம் உயர்த்தி வழங்க வேண்டும். முதல் ஆண்டு நிறைவு பெற்ற நிலையில் நாளை 6-ந்தேதி முதல் நடைமுறை கட்டணத்தில் இருந்து 7 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டுமென பவர்டேபிள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பனியன் தையலுக்கு ஒரு டஜனுக்கான கட்டணம் ரூ.76.05 ரூபாயாக இருந்தது நாளை முதல் 81.37 ரூபாயாக உயர்கிறது. பேக் பட்டி டிராயர் கட்டணம் ரூ.146.64 ஆக இருந்தது 157.02 ரூபாயாக உயர்கிறது. பேக் பட்டி டபுள் பாக்கெட் கட்டணம் 154.64 ரூபாயாக இருந்தது 165.46 ரூபாயாக உயர்வதாக பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்க செயலாளர் முருகேசன் கூறுகையில், கடந்த ஆண்டு ஜூன் 4ந்தேதி 4 ஆண்டுகளுக்கான கட்டண உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. முதல் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் 7 சதவீத கட்டண உயர்வு நாளை 6-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சைமா உறுப்பினர் நிறுவனங்கள், புதிய கட்டணத்தை கணக்கிட்டு வழங்க வேண்டும். தொழிலாளர் சம்பளம், மின் கட்டணம் போன்ற செலவு அதிகரித்துள்ளதால் பவர் டேபிள் நிறுவனங்களுக்கான 7 சதவீத கட்டண உயர்வை 6-ந் தேதி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றார்.
- தட்கல் முறையில் டிக்கெட் எடுக்க கவுண்டர்களில் நள்ளிரவிலேயே காத்து கிடக்கிறார்கள்.
- நிமிடத்துக்கு நிமிடம் மீட்டர் வட்டி போல் கட்டணம் எகிறி கொண்டிருக்கும்.
சென்னை:
தொலைதூர இடங்களுக்கு செல்பவர்கள் ரெயில் பயணத்தையே விரும்புகிறார்கள். அதற்கு காரணம் பாதுகாப்பு, கட்டணம் குறைவு, சொகுசான பயணம் என்பதுதான்.
3 மாதங்களுக்கு முன்பே ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. ஆனால் எல்லோராலும் 3 மாதங்களுக்கு முன்பே பயண திட்டம் போட முடியாது.
இதனால் குறுகிய காலத்தில் திட்டமிட்டு செல்பவர்கள், அவசர பயணம் மேற் கொள்பவர்களுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை.
அவர்கள் கடைசி முயற்சியாக தட்கல் முறையில் முன்பதிவை தேடி செல்கிறார்கள். இந்த தட்கல் முன்பதிவு ஒருநாள் முன்பு நடைபெறுகிறது. அதுவும் காலை 10 மணிக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிக்கும், 11 மணிக்கு தூங்கும் வசதி கொண்ட பெட்டிக்கும் தொடங்குகிறது. முன்பதிவு தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடும்.
தட்கல் முறையில் டிக்கெட் எடுக்க கவுண்டர்களில் நள்ளிரவிலேயே காத்து கிடக்கிறார்கள்.
இணைய தளங்களை கையாள்பவர்கள் வீடுகளில் இருந்தே டிக்கெட் எடுக்கிறார்கள். இந்த வசதி இல்லாதவர்கள் இணைய தள சேவை மையங்களை அணுகுகிறார்கள்.
கடந்த சில நாட்களாக தட்கல் முன்பதிவுக்கு இணையதளத்தில் உள்ளே நுழைந்து ரெயிலை தேர்வு செய்து, பயணிகள் விவரங்களையும் பதிவு செய்துவிட்ட 'கேப்சா' என்ற குறியீட்டு எண்ணை பதிவு செய்ததும் உள்ளே செல்லாமல் முடங்கி விடுகிறது.
அடுத்த சில நிமிடங்களில் பிரீமியம் தட்கலுக்கு முயன்றால் ஒழுங்காக செயல்படுகிறது. பிரீமியம் தட்கல் என்பது இரண்டு மடங்கு அதிகம். மேலும் நிமிடத்துக்கு நிமிடம் மீட்டர் வட்டி போல் கட்டணம் எகிறி கொண்டிருக்கும்.
உதாரணமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு தட்கல் கட்டணம் ரூ.600 மட்டுமே. ஆனால் பிரிமீயம் தட்கல் கட்டணம் ரூ.1000-க்கு மேல். ஒரு டிக்கெட்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500 முதல் 1000 வரை ரெயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது.
இதற்காகவே தட்கல் முன்பதிவில் தில்லாலங்கடி வேலைகளை ரெயில்வே நிர்வாகம் செய்வதாக பயணிகளிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் ரெயிலவே அதிகாரிகளிடம் கேட்டால் ஒரே நேரத்தில் ஏராளமானோர் இந்த தளத்தை உபயோகப்படுத்துவதால் முடங்குகிறது. என்று சொல்லி எளிதில் தப்பி விடுகிறார்கள். அப்படியானால் பிரீமியம் தட்கலுக்கு மட்டும் எப்படி முடங்காமல் செயல்படுகிறது என்றால் பதில் சொல்ல யோசிக்கிறார்கள். தட்கல் முன்பதிவு தொடங்கும் போது தடங்கல் இல்லாமல் சேவையை வழங்குவதுதான் ரெயில்வேயின் கடமை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்