search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farm ponds"

    • போர்வெல்களுக்கு வரத்து பாதித்து சாகுபடிக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை.
    • மும்முனை மின்சார வினியோகம் பெரும்பாலான பகுதிகளில் இல்லை.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் பல்வேறு சாகுபடிக்கு போர்வெல்களில் இருந்து பெறப்படும் தண்ணீரே ஆதாரமாக உள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறையும் போது கூடுதலாக போர்வெல் அமைத்தல், ஆழப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வடகிழக்கு பருவமழை சீசன் முடிந்து, கோடை காலம் துவங்கும் போது போர்வெல்களுக்கு வரத்து பாதித்து சாகுபடிக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை.

    மேலும் 24 மணி நேர மும்முனை மின்சார வினியோகம் பெரும்பாலான பகுதிகளில் இல்லை. எனவே போர்வெல்களில் இருந்து பெறப்படும் தண்ணீரை தேக்கி வைத்து பயிர்களுக்கு பாய்ச்ச பண்ணைக்குட்டை அமைக்கும் முறை பயனுள்ளதாக உள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- நீரோட்டத்தின் அடிப்படையில் போர்வெல் அமைத்தாலும் கோடை காலங்களில் நீர்வரத்து குறைந்து விடுகிறது. எனவே சில மணி நேரம் மட்டும் கிடைக்கும் தண்ணீரை தேக்கி வைத்து பின்னர் பயிர்களுக்கு பாய்ச்சுகிறோம். குறிப்பாக பண்ணைக்குட்டைகள் அமைத்து தண்ணீரை தேக்கி பயன்படுத்துகிறோம். முன்பு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், வேளாண்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை வாயிலாக பண்ணைக்குட்டை அமைக்க ஊக்கமளிக்கப்பட்டது. மானியத்திட்டங்களும் செயல்பாட்டில் இருந்தன.

    கடந்த சில ஆண்டுகளாக வறட்சி இல்லாததால் இத்திட்டங்களில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த கோடை காலத்திலும் பயிர் சாகுபடி பரப்பு குறையாமல் இருக்க பண்ணைக்குட்டை மானியத்திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும். இது குறித்த விழிப்புணர்வையும் விவசாயிகளிடையே ஏற்படுத்த வேண்டும். பண்ணைக்குட்டை அமைப்பதால் மழைக்காலங்களிலும் மழை நீரை சேகரித்து விவசாயத்துக்கு பயன்படுத்த முடியும் என்றனர்.

    • பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்க்க மானியம் வழங்கப்படுகிறது என்று சேலம் மாவட்ட கலெக்டர் தகவல் வெளியிட்டுள்ளார்.
    • முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்பு நிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மீன்வளர்ப்பினை ஊக்குவித்திட மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 250 முதல் 1000 சதுர.மீ அளவிலுள்ள பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பினை மேற்கொள்ள ஏதுவாக மீன் குஞ்சு, மீன் தீவனம், உரங்கள் ஆகிய மீன் வளர்ப்பிற்கான உள்ளீட்டு பண்ணைப் பொருட்கள் மற்றும் பறவை தடுப்பு வசதிகள் ஆகிய மீன் வளர்ப்பிற்கான ஒரு அலகிற்கு ஆகும் செலவினம் ரூ.36 ஆயிரத்தில் 50 சதவீதம் மானியமாக ஒரு பண்ணைக் குட்டைக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.

    இந்த மானியமானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்பு நிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    எனவே, இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் மேட்டூர் அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை 10-ந்தேதிக்குள் மேட்டூர் அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×