என் மலர்
நீங்கள் தேடியது "Farmer dies due to electric shock"
- விவசாயிக்கு சிகிச்சை
- போலீசார் விசாரணை
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அடுத்த வேளானந்தல் புதூர் கிராமத்தில் மின் கம்பம் விழுந்ததில் ஏர் உழுது கொண்டிருந்த காளை மின்சாரம் பாய்ந்ததில் பரிதாபமாக பலியானது.
திருவண்ணாமலை அடுத்த வேளானந்தல் புதூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்தி.
இவர் நேற்று காலை தனக்கு சொந்தமான நிலத்தில் ஏர் உழுது கொண்டிருந்தார்.
அப்போது அவரது நிலத்தில் இருந்த மின் கம்பம் விவசாயி மற்றும் உழவுக்கு பயன்படு த்தப்பட்ட காளைகள் மீது விழுந்துள்ளது.
மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்கியதில் ஒரு காளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது.
விவசாயி சக்தி மற்றும் ஒரு காளை மின்சாரம் தாக்கியதில் படுகாயம் ஏற்பட்டது. சக்தியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சக்தியின் மனைவி மலர்கொடி அளித்த புகாரின் அடிப்படையில் வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உழவு பணியில் இருந்த காளை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.