search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer killed"

    • வெவ்வேறு விபத்துக்களில் விவசாயி-பெட்டிகடைக்காரர் பலியானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள பேரையூர் ராம சாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி (வயது 23). இவர் மேலக்கோட்டை அவுசிங்போர்டு குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    அங்குள்ள தோட்டத்துக்கு இருசக்கர வாகனத்தில் ராஜபாளையம் மெயின் ரோட்டில் சென்றார். செங்கப்படை விலக்கு அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பாண்டி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    அவரை அங்கிருந்த வர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி காவேரி திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கூடலிங்கம். அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று கடையின் எதிரே உள்ள ஓட்டலுக்க சாப்பிட சென்றார். பின்னர் கடைக்கு வருவதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது ஒரு வாலிபர் வேகமாக ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் கூடலிங்கத்தின் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ைவத்தனர். பின்னர் உறவினர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் கூடலிங்கத்தின் மகன் மணிகண்டன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏரிப்பாளையத்தை சேர்ந்தவர் ராமதாஸ் விவசாயி.
    • புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள சேமக்கோட்டை ஏரிப்பா ளையத்தை சேர்ந்தவர் ராம தாஸ் (வயது 56). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார். அப்போது அங்குசெட்டிபாளையம் அருகேயுள்ள தனியார் பாலிடெக்னிக் அருகே சென்ற போது, எதிரில் வந்த ஆட்டோ விவசாயி மீது மோதியது.

    இதில் பலத்த காயம டைந்த விவசாயி ராமதாசை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கி ருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு விவசாயி ராமதாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்து போனார். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறு
    • வாலிபர் கைது

    ஆரணி:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (46), விவசாயி.

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம், நரியம்பாடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார்.

    சேத்துப்பட்டு-செஞ்சி சாலையில் உள்ள ஆவணியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 33). இவர்கள் இருவரும் நண்பர்கள்.

    இந்த நிலையில் நேற்று மாலை இருவரும் செஞ்சி சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது பணம் கொடுக்கல்-வாங்கலில் குமார், கமலக்கண்ணன் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த கமலக்கண்ணன் அங்குள்ள ஒரு கட்டிடம் கட்டும் இடத்தின் அரு கில் கிடந்த மண்வெட்டியை எடுத்து வந்து, குமாரின் தலையில் சரமாரியாக தாக்கினார். பின்னர் அவரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

    பலத்த காயம் அடைந்த குமார் ரத்த வெள்ளத்தில் கீழே சுருண்டு விழுந் தார். அவரை அங்கிருந்தவர் கள் மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சி கிச்சைக்காக திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி குமார் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்யப்பட் டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்குப்பதிவு செய்து கமலக் கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். கொடுக்கல்- வாங்கல் தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருப்பத்தூர் கோர்ட்டு தீர்ப்பு
    • 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்

    திருப்பத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் அருகே உள்ள பட்டன் கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 37), விவசாயி.

    கொலை

    இவருக்கும், இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான துரை என்பவருக்கும் நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

    கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி துரைக்கு சொந்தமான நிலத்தில் சின்னதுரை மாடுகளை மேய்த்துள்ளார். இதனை துரை தட்டிக்கேட்டார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த துரை மற்றும் அவருடைய ஆதரவாளர்களான வெள்ளையன், இந்திராணி, ஜானகி ஆகிய 4 பேரும் சேர்ந்து சின்னதுரையை சரமாரியாக தாக்கினர்.

    அப்போது துரை உருட்டு கட்டையால் சின்னது ரையின் தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சின்னதுரை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து துரை, வெள்ளையன், இந்திராணி, ஜானகி ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்தது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பி.டி.சரவணன் ஆஜரானார். அதில் துரைக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பு வழங்கினார்.

    வெள்ளையன், இந்திராணி, ஜானகி ஆகிய 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

    • வேலை காரணமாக நேற்று விக்கிரவாண்டிக்கு மோட் டார் சைக்கிளில் வந்தார்.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த பாதிராப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 70). விவசாயி. இவர் சொந்த வேலை காரணமாக நேற்று விக்கிரவாண்டிக்கு மோட் டார் சைக்கிளில் வந்தார். அப்போது பேரணி கூட்ரோடு சாலையை கடக்க முயன்ற போது, சென்னை யில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தனசேகரன், பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேேய பலி யானார். தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, தனசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தன் சொந்த ஊருக்கு செல்வ தற்காக ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
    • பின்னால் வந்த வேன் ஆட்டோ மீது மோதியது.

    விழுப்புரம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் லப்பை பேட்டையைச் சேர்ந்தவர் கணபதி (55) விவசாயி. இவர் விழுப்புரம் மாவ ட்டம் மேல்மலையனூர் அருகே பெரிய நொளம்பை கிராமத்தில் உள்ள தன் மருமகன் வீட்டிற்கு வந்து விட்டு மீண்டும் தன் சொந்த ஊருக்கு செல்வ தற்காக ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

    சஞ்சீவிராயன்பேட்டை அருகில் சென்ற போது ஆட்டோ டிரைவர் திடீரென பிரேக் போட்டு ள்ளார். இதனால் பின்னால் வந்த வேன் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த கணபதி, சேத்துப் பட்டைச் சேர்ந்த மார்ட்டீன், நத்தமேட்டைச் சேர்ந்த சண்முகம் ஆகி யோர் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் இவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேத்துப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கணபதி பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புகாரி ன்பேரில் அவலூ ர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பன்னீர்செல்வம். விவசாயி, மோட்டார் சைக்கிளில்மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோதுஇவரும் சின்னையன் என்பவரும் தவறி கீழே விழுந்தனர்.
    • பின்னால் வந்த கார் ஒன்று இவர்கள் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரி ழந்தார்,.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். விவசாயி. இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் சிறுப்புலியூரை சேர்ந்தசின்னையன் என்பவருடன் சேமக் கோட்டைக்கு வந்து கொண்டிருந்தார். திருவாமூர் பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது குண்டு ம்குழியுமான சாலையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தனர்.

    அப்போது பின்னால் வந்த கார் ஒன்று இவர்கள் மீது மோதியது. இதில் பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயேஉடல் நசுங்கி பரிதாபமாக உயிரி ழந்தார். சின்னையன் படுகாயத்துடன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதித்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுபோக்குவரத்தை சரி செய்துவிபத்தில் பலியான பன்னீர் செல்வத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகே வேன் மோதி விவசாயி பலியானார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது49) இவர் வீட்டில் இருந்து புறப்பட்டு உளுந்தூர்பேட்டைக்கு சொந்த வேலையாக சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது திருவெண்ணைநல்லூர் ரோடு பாண்டூர் காலனி மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது திருக்கோவிலூரில் இருந்து கடம்பூர் நோக்கி சென்ற வேன் அய்யனார் மீது மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே இறந்தார்.

    தகவலறிந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெ க்டர் தமிழ்வாணன் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன அய்யனாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • வெங்கடேசனுக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது.
    • ஏழுமலை மகன் வெங்கடேசன் தூக்கி வீசி எறியப்பட்டார். இதில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    விழுப்புரம்:  

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை என்பவரது மகன் வெங்கடேசன் (வயது 46). விவசாயியான இவர் நேற்று மாலை தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். பையூர் பாலத்தை தாண்டி மின்சார டிரான்ஸ்பர் அருகில் சென்ற போது அதே சாலையில் வெங்கடேசனுக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. இதனை அதே ஊரைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் வெங்கடேசன் ஓட்டி வந்தார்.

    அப்போது முன்னாள் சென்ற ஏழுமலை மகன் வெங்கடேசன் மோட்டார் சைக்கிளை முந்த பின்னால் சென்ற முத்துக்கிருஷ்ணன் மகன் வெங்கடேசன் முயன்றார். இதில் முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் ஏழுமலை மகன் வெங்கடேசன் தூக்கி வீசி எறியப்பட்டார். இதில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அருகில் விவசாயப் பணி செய்து கொண்டிருந்தவர்கள் பலத்த காயமடைந்த வெங்கடேசனை முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஏழுமலை மகன் வெங்கடேசன் உயிரிழந்தார். இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஏரியில் கை, கால் கழுவு வதற்காக சென்றார்.
    • தவறி விழுந்து, நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேலப் பட்டு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது62) விவ சாயி. இவர் தனது விவசாய நிலம் அருகில் உள்ள ஏரியில் கை, கால் கழுவு வதற்காக சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஏரியில் அவர் தவறி விழுந்து, நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஏரிக்குள் இறங்கி கணேசனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஆறுச்சாமி அனுப்பர்பாளையத்தில் உள்ள மருதவேல் என்பவரது தோட்டத்துக்கு சென்றார்
    • நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிப்பட்டியை சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 50). விவசாயி. சம்பவத்தன்று இவர் அனுப்பர்பாளையத்தில் உள்ள மருதவேல் என்பவரது தோட்டத்துக்கு சென்றார். அப்போது ஆறுச்சாமியை மலை தேனீக்கள் கொட்டியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் அவதிப்பட்டார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ஆறுச்சாமியை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஆறுச்சாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • திருவெண்ணைநல்லூர் அருகே மரத்திலிருந்து கீழே விழுந்த விவசாயி பலியானார்.
    • மரத்தில் இருந்த குரங்கு ஒன்று கீழே இறங்க இவரைப் பார்த்து வேகமாக வந்தது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே சித்தானங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி (வயது 55) விவசாயி . இவர் சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் உள்ள புளிய மர கிளைகளை வெட்ட மரத்தில் ஏறினார். இந்நிலையில் மரத்தில் இருந்த குரங்கு ஒன்று கீழே இறங்க இவரைப் பார்த்து வேகமாக வந்தது. அப்போது தண்டபாணி குரங்கு தன்னை கடிக்க வருகிறது என்று மரத்திலிருந்து கீழே குதித்தார்.

    இதில் எதிர்பாராத விதமாக படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து வீட்டில் இருந்தவர்கள் தண்டபாணி யைமீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி தண்டபாணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×