search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers Seminar"

    • தென்னை விவசாயிகளுக்கு கருத்தரங்கு நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    திருவில்லிபுத்தூரில் தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு தென்னையில் அறிவியல் சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டல் குறித்து கருத்தரங்கம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    வேளாண்மை இணை இயக்குனர் பத்மாவதி தலைமை வகித்தார். உதவி இயக்குனர் தனலட்சுமி வரவேற்றார். தென்னை வளர்ச்சி வாரிய இயக்குனர் அறவாழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தென்னையில் மதிப்பு கூட்டல் தொழில்நுட்பங்கள், காப்பீடு, தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் காப்பீடு, நலத்திட்டங்கள், குறித்து பேசினார்.

    பருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் வீரபத்திரன் தென்னை சாகுபடியில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்களை குறித்து பேசினார். பேராசிரியர் தங்கபாண்டியன் தென்னை ரகங்கள் மற்றும் அதன் சிறப்புகள் குறித்தும், வேளாண் விற்பனை துறை அலுவலர் மகாலட்சுமி, தென்னையில் இருந்து கிடைக்கும் பொருட்களை மதிப்பு கூட்டல் செய்வது குறித்தும், ஒழுங்குமுறை விற்பனை குழு கண்காணிப்பாளர் உமா மகேஸ்வரி, இ-நாம் குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • விளாத்திகுளத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கம் தனியார் மகாலில் நடைபெற்றது.
    • ஒரு மனிதனின் வெற்றி என்பது வேளாண் சார்ந்த மரங்கள் எவ்வளவு வளர்க்கிறோமோ அது தான் வெற்றியாக நான் கருதுகிறேன் என்று மார்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசினார்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கம் தனியார் மகாலில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    எப்போதும் முதன்மை யான விவசாயி யாகவே வாழ வேண்டும் என மனதில் எண்ணி உள்ளேன். 20 ஏக்கரில் மிளகாய், 30 ஏக்கரில் கால்நடைகளுக்கான தீவணம் சோளப்பயிர்கள், வீட்டுக்கு தேவையான உளுந்து, பாசி, எள், சூரியகாந்தி, வரகு, கேழ்வரகு போன்ற அனைத்து எண்ணை வித்துக்கள், தானியங்களை நாங்களே உற்பத்தி செய்கிறோம்.

    நவதானியங்களும், எண்ணை வித்துக்களும் மட்டும் பயிர் செய்த எங்கள் பகுதியில், மானாவாரியில் வெங்காய பயிரை, வியாபார ரீதியாக வெற்றி பெற வை த்தது விளாத்திகுளம் தான். ஒரு ஏக்கரில் ஊடு பயிராக தான் வெங்காயம் பயிரிடு கிறோம். இங்கு வெங்காய பயிருக்கு யாரும் மருந்து தெளிப்பது கிடையாது.

    இப்பகுதியில் சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக முண்டு மிளகாய் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்ப டுகிறது. இதற்கு யாரும் மருந்து தெளிப்பதில்லை. மருந்து கம்பெனிகள் அதிகரித்துள்ள நிலையில், மருந்து தெளிக்க வில்லை யென்றால் செடிகள் வளராது என்ற நிலையை தாண்டி, மருந்து தெளிக்க வில்லை யென்றாலும் மிளகாய் செடிகள் வளரும் என விவசாயிகள் நம்பியு ள்ளனர். இது இந்தியாவிலேயே ஒரு மைல் கல்லாக தான் நாம் பார்க்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் விளாத்திகுளம் முண்டு வத்தலுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்க ப்படும் என சட்ட மன்றத்தில் அறிவித்துள்ளார். இதற்காக அனைத்து விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    கடந்த 2 ஆண்டுகளில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு மட்டும் 1 லட்சம் தென்னை மரக்கன்றுகளை அரசு வழங்கி உள்ளது. ஒரு தென்னை மரம் 4-வது ஆண்டில் பலன் கொடுக்க தொடங்கிவிடும்.

    மாவட்டத்தில் சுமார் 20 லட்சம் மக்கள் தொகை இருக்கலாம். இதில், ஒரு லட்சம் தென்னங்கன்றுகளை சரியாக பராமரித்தால், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் வெளியே இருந்து தேங்காய் வாங்க வேண்டி அவசியம் இல்லாத ஒரு தன்னிறைவு பெற்ற மாவட்டமாக உருவாகும்.

    ஆனால், நடவு செய்த கன்று களை வளர்த்து ள்ளோமா என்பதை பார்க்க வேண்டும். ஒரு மனிதனின் வெற்றி என்பது வேளாண் சார்ந்த மரங்கள் எவ்வளவு வளர்க்கிறோமோ அது தான் வெற்றியாக நான் கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநர் பழனி வேலாயுதம், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் தேரடி மணி, கோவி ல்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வேளா ண்மை, வேளாண் பொறி யியல், தோட்டக்கலைத்துறை தொடர்பாக திட்டங்கள் குறித்து விளக்கி கூறினர்.

    • காபி விவசாயத்தின் நடவு, பயிரிடுதல் காபி செடிகள் நடவு முறைகள், காபி நர்சேரி அமைப்பது பற்றி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • செம்மனரை, தாளமொக்கை ஆகிய கிராமத்தைச் சார்ந்த 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

    அரவேணு:

    கோத்தகிரி அருகே குஞ்சப்பனை அடுத்த செம்மனரை கிராமத்தில் இந்திய காபி வாரியம் குன்னூர் மற்றும் யூ.என்.சி.எஸ் சார்பில் காபி விவசாய கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காபி வாரிய டாக்டர் கருத்தமணி, நித்தியா, மற்றும் ரஞ்சித் மணிகண்டன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு காபி விவசாயத்தின் நடவு, பயிரிடுதல் காபி செடிகள் நடவு முறைகள், காபி காபி நர்சேரி அமைப்பது பற்றி குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் செம்மனரை, தாளமொக்கை ஆகிய கிராமத்தைச் சார்ந்த 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

    ×