என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
கோத்தகிரியில் விவசாயிகள் கருத்தரங்கு கூட்டம்
Byமாலை மலர்24 Jun 2022 2:56 PM IST
- காபி விவசாயத்தின் நடவு, பயிரிடுதல் காபி செடிகள் நடவு முறைகள், காபி நர்சேரி அமைப்பது பற்றி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- செம்மனரை, தாளமொக்கை ஆகிய கிராமத்தைச் சார்ந்த 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
அரவேணு:
கோத்தகிரி அருகே குஞ்சப்பனை அடுத்த செம்மனரை கிராமத்தில் இந்திய காபி வாரியம் குன்னூர் மற்றும் யூ.என்.சி.எஸ் சார்பில் காபி விவசாய கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காபி வாரிய டாக்டர் கருத்தமணி, நித்தியா, மற்றும் ரஞ்சித் மணிகண்டன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு காபி விவசாயத்தின் நடவு, பயிரிடுதல் காபி செடிகள் நடவு முறைகள், காபி காபி நர்சேரி அமைப்பது பற்றி குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் செம்மனரை, தாளமொக்கை ஆகிய கிராமத்தைச் சார்ந்த 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
Next Story
×
X