search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmers suffering"

    கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆறு , கெடிலம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றது.

    கடலூர்:

    தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் கடலூர், பண்ருட்டி ,நெய்வேலி, விருத்தாச்சலம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, சேத்தியாதோப்பு, காட்டு மன்னார்கோவில் ,திட்டக்குடி மற்றும் மாவட்டம் முழுவதும் மிக கனமழை பெய்தது.இந்த மழையானது நேற்று மதியம் வரை இருந்த நிலையில் மீண்டும் இரவு தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் முக்கிய சாலைகளில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற பகுதிகளில் தயார் நிலையில் இருந்ததோடு மழை நீர் வடிவதற்காகவும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆகியவற்றை தீவிரமாக செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கடலூர்தென் பெண்ணையாறு மற்றும் கெடிலம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு சாத்தனூர் அணையில் இருந்து 2000 கன அடி உபரி நீர் திறந்த காரணத்தினால் கண்டரக்கோட்டை, மேல்பட் டாம்பாக்கம் வழியாக கடலூர் தென்பெண்ணையாற்றில் நீர் பெருக்கு அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக கொமந்தாமேடு, மருதாடு தரைப்பாலத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் இன்று காலை வரை விநாடிக்கு 2500 கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதில் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 2 அணைக்கட்டு மற்றும் 4 தடுப்பணைகள் நிரம்பி கடலூர் கொமந்தாமேடு வழியாக 2500 கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது சாத்தனூர் அணையில் இருந்து 950 கன அடி தண்ணீர் வெளியேற்றும் நிலையில் இந்த தண்ணீர் கடலூர் மாவட்டத்திற்கு வராது

     அதற்கு மாறாக கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக கன மழை பெய்து வந்த காரணத்தினால் தற்போது தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது. தற்போது மழை அளவு குறைந்த காரணத்தினால் தென்பெண்ணை ஆற்றில் படிப்படியாக தண்ணீர் ஓடுவது கணிசமாக குறையும். இது மட்டும் இன்றி கெடிலம் ஆற்றில் தற்போது வினாடிக்கு 500 கன அடி நீர் சென்று வருகிறது.கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆறு , கெடிலம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றது. 2 நாட்கள் பெய்த கன மழை காரணமாக தென்பெண்ணையாற்றில் 2500 கன அடி தண்ணீர் வினாடிக்கு சென்று வரும் நிலையில் கடலில் வீணாக கலந்து வருவதால் இதனை தடுத்து விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் உயர்வதற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

    • காலை நேரங்களில் டாக்ட ர்கள் சரியான நேரத்திற்கு வருவது இல்லை. மேலும் முறையாக பதில் அளிக்காத தால் விவசாயிகள் தவிப்பு க்குள்ளாகி வருகின்றனர்.
    • எனவே விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் கால்நடை ஆஸ்பத்திரி களுக்கு டாக்டர்கள் முறையாக வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடமதுரை:

    வடமதுரை, அய்யலூர், பாடியூர், பாகாநத்தம், தென்னம்பட்டி, காண ப்பாடி, புத்தூர், எரியோடு, குஜிலியம்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடை ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இப்பகுதியில் பெரும்பாலும் விவசாயி களே அதிகம் உள்ளதால் கால்நடை வளர்ப்பு அதிகள வில் நடைபெற்று வருகிறது.

    இந்த கால்நடைகளுக்கு பரிசோதனை மற்றும் மருத்துவம் பார்க்க கால்நடை ஆஸ்பத்திரிக்கு செல்கின்றனர். ஆனால் காலை நேரங்களில் டாக்ட ர்கள் சரியான நேரத்திற்கு வருவது இல்லை. மேலும் முறையாக பதில் அளிக்காத தால் விவசாயிகள் தவிப்பு க்குள்ளாகி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இதனை தட்டிக்கேட்ட விவசாயியை கால்நடை டாக்டர் மற்றும் அவரது உதவியாளர் தரக்குறைவாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது. எனவே விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் கால்நடை ஆஸ்பத்திரி களுக்கு டாக்டர்கள் முறையாக வரவேண்டும். கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அபிராமம் பகுதியில் பருத்தி விலை குறைவால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
    • நெல் பயிரிட்ட விவசாயிகள் அரசின் நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு நிவாரணத்தை நம்பி காத்திருக்கின்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால் வைகை பாசன பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் நெல் விவசாயம் கருகி நஷ்டம் ஏற்பட்டுவிட்டது.

    நெல் பயிரிட்ட விவசாயிகள் அரசின் நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு நிவாரணத்தை நம்பி காத்திருக்கின்றனர்.

    இந்தநிலையில் நெற்பயிர்களை அறுத்துவிட்டு அதில் பருத்தியை விவசாயிகள் பயிரிட்டனர். நவம்பர்மாத இறுதியில் தொடங்கிய பருத்தி சாகுபடி பணிகள் தற்போது ஒரளவுக்கு விளைய தொடங்கி உள்ளது.

    முதல் போக சாகுபடி செய்து அறுவடை செய்ய தெடங்கியுள்ள விவசாயிகள் அதனை விற்பனை செய்ய கமிஷன் கடைக்கு கொண்டு சென்றபோது அங்கு விவசாயிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    கடந்த ஆண்டு பருத்தி நன்றாக விளைந்ததோடு மட்டுமில்லாமல் அதிக விலைக்கு விற்பனையானது. இந்த ஆண்டு பருத்தி ஓரளவுக்கு விளைந்த போதும் உரிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    இதுகுறித்து அபிராமம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு பருத்தி நல்ல மகசூல் இருந்தபோதும், நல்ல விலையும் கிடைத்தது. ஒரு கிலோ பருத்தி ரூ.60 முதல் ரூ.110 வரை கிடைத்தது. இந்த ஆண்டு பருத்தியை ஆரம்பத்தில் அறுவடை செய்து கமிஷன் கடைக்கு கொண்டு சென்றபோது ரூ.65-க்கு தான் வாங்குகின்றனர்.

    விலை உயரும் என்ற நம்பிக்கையுடன்தான் தொடர்ந்து பருத்தியை பிரித்தெடுக்கும் பணி செய்து வருகிறோம். அரசு பருத்தி விலையை நிர்ணயம் செய்து விவசாயிகளின் மனக்கவலையை போக்க வேண்டும். பருத்தியில் நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது.

    மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், திருவாடனை, ஆர்.எஸ்.மங்கலம், முதுகுளத்தூர், பரமக்குடி, கடலாடி, கமுதி, அபிராமம் உள்ளிட்ட பகுதிகளில் நெல், மிளகாய்க்கு அடுத்தபடியாக பருத்தி விவசாயம் செய்துவருகிறேம்.

    இந்த ஆண்டு பருத்தியில நோய் தாக்குதலும் அதிக மாக உள்ளது. சில நாட்களுக்கு முன் பெய்த கோடை மழை பருத்தி பயிருக்கு ஏற்ற மழையாகும். பருத்திக்கு விலை ஓரளவாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அபிராமம் பகுதியில் உலர்களம் இல்லாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
    • போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் உள்ள தரைக்குடி, வல்லகுளம் தேவநேரி அச்சங்குளம் உள்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விவசாயிகள் சிறுதானிய பயிர்களை விவசாயம் செய்கின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மிளகாய் பயிரிட்டனர்.

    இந்த ஆண்டு போதிய பருவமழை இல்லததால் விவசாயிகள் தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டனர். போர்வெல் அமைத்து தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்தனர். இதன் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிளகாய் விளைச்சல் குறைந்துள்ளது. மேலும் போதிய மழை யின்றி செடியிலேயே மிளகாய் சோடையாகி போனது. இதனால் விவசாயிகள் கூலி ஆட்களை வைத்து மிளகாய் பறித்து உலரவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கிராமங்களில் உலர்களங்கள் வசதி இல்லாததால் விவசாயிகள் நிலம், சாலையோரம் கால்வாய் புறம்போக்கு வாய்க்கால்புறம்போக்கு போன்ற இடங்களில் மிளகாய் மற்றும் சிறுதானியங்களை உலர வைக்கின்றனர். உலர்களம் இல்லாமல் மண் தரையில் உளர வைப்பதால் மிளகாயின் தரம் குறைவதால் மிளகாய் விலை குறையும் நிலை உள்ளது.

    இதனால் அபிராமத்திற்கு உள்பட்ட கிராமங்களில் உலர் களங்கள் அமைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அபிராமம் பகுதியில் மழையின்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன.
    • இதனால் விவசாயிகள் மனவேதனையில் உள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதி வானம் பார்த்த பூமியாகும். இங்கு பருவமழையை மட்டுமே எதிர்பார்த்து விவசாயிகள். நெல், மிளகாய் உளுந்து, பருத்தி போன்ற பயிர்களை சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்கின்றனர்.

    அபிராமத்தை சுற்றி உள்ள அச்சங்குளம், காடனேரி, வல்லகுளம், நகரத்தார்குறிச்சி, பாப்பனம், நரியன், முத்தாதிபுரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 45 நாட்களுக்கு முன் விதைக்கப்பட்ட நெல், பருத்தி உளுந்து, மிளகாய் பயிர்கள் வளர்ந்து பயன்தரக்கூடிய நிலையில் மழை பொய்த்ததால் அந்த பயிர்கள் கருகி வருகின்றன.

    இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து விவசாயி கர்ணன் கூறுகையில், இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் பயிர்கள் கருகும் நிலை உள்ளது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படும்.

    இந்த ஆண்டு பயிர் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து கண்மாய்க்கு வரும் கால்வாயை தூர்வாரி அபிராமம் மற்றும் சுற்றுவட்டார கண்மாய்க்கு தண்ணீர் கொண்டுவந்து விவசாயம் செழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கடைமடை பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட்டால் தான் சம்பா சாகுபடியை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். #MetturDam

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கரியாப்பட்டினம், வடமழை, மணக்காடு, மகாராஜபுரம், செட்டிபுலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கடைமடை பாசன பகுதி கிராமங்களுக்கு வெண்ணாற்றில் தண்ணீர் சரிவர வராததால் சம்பா சாகுபடி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேட்டூர் அணை 4 முறை நிரம்பிய நிலையில் கடைமடைக்கு கூடுதலாக தண்ணீர் வரும் என்று விவசாயிகள் நினைத்து இந்த ஆண்டு சுமார் 20 ஆயிரம் ஹெக்டரில் நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். ஒரு முறை மட்டுமே வந்த தண்ணீரை வயல்களில் வைத்து நெற்பயிர்கள் முளைத்து விட்டன. நெற்பயிர்கள் முளைத்து 25நாள் ஆகிய நிலையில் ஆற்றில் தண்ணீர் வராததால் சம்பா கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது கடைமடை பாசனத்திற்கு வந்த ஆற்று நீர் நின்று விட்டது. ஆற்றில் தண்ணீர் மிக குறைவாக உள்ளதால் மோட்டார் மூலம் இறைத்து கூட விவசாயம் செய்யமுடியாத நிலையில் உள்ளனர். எனவே உடனடியாக தமிழக அரசு கடைமடை பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட்டால் தான் சம்பா சாகுபடியை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 5 ஆண்டுகளாக சம்பா சாகுபடி பொய்த்து விட்ட நிலையில் இந்த ஆண்டாவது சம்பா சாகுபடி இருக்கும் என்று நினைத்த நிலையில் தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டும் சம்பா சாகுபடி பொய்து விடும் நிலை எற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். #MetturDam

    ×