என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fast bowler"

    • சுமார் 6 வருட காலம் ஐபிஎல் தொடரில் ஸ்டார்க் பங்கேற்கவில்லை
    • உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் விளையாட இது ஒரு வாய்ப்பு என்றார் ஸ்டார்க்

    ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் முன்னெப்போதும் இல்லாத அதிக தொகையாக ரூ.24.75 கோடிக்கு ஆஸ்திரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணியினரால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

    2018 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக விளையாட முடியாமல் வெளியேறினார் ஸ்டார்க்.

    இடையில் பல வருடங்கள் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட், பிற போட்டி தொடர்கள் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை கழிப்பது என இருந்த ஸ்டார்க், திடீரென மனதை மாற்றி கொண்டு தற்போதைய ஏலத்தில் பங்கேற்க சம்மதித்தார்.

    சுமார் 6 வருட காலம் கழித்து ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்து ஸ்டார்க்கிடம் கேட்கப்பட்டது.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    நான் சர்வதேச கிரிக்கெட்டிற்குத்தான் முதலிடம் கொடுத்து வந்தேன். அதிலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். அதன் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு என் அதிக பங்களிப்பை உறுதி செய்ய நினைத்தேன். இவ்வருட கடைசியும் அடுத்த வருடமும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டிற்கு சர்வதேச அரங்கில் ஒரு அமைதியான காலகட்டம். என் திறனை மேம்படுத்தி கொள்ள தலைசிறந்த உலக தரம் பெற்ற முன்னணி வீரர்களுடன் விளையாட இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். எனவே இப்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்க சம்மதித்தேன்" என தெரிவித்தார்.

    ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா அணியின் சார்பில் பங்கேற்ற அந்த அணியின் ஆலோசகர், முன்னாள் இந்திய கிரிக்கெட் தொடக்க வீரர் கவுதம் கம்பீர், அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்ட ஸ்டார்க்கின் தேர்வை நியாயப்படுத்தும் விதமாக, "புது பந்தை வீசுவதிலும், கடைசி ஓவர்களில் பந்து வீசுவதிலும், தாக்குதலை முன்னெடுத்து செல்வதிலும் ஸ்டார்க் மிக சிறந்த நட்சத்திர வீரர் என்பதில் சந்தேகம் இல்லை" என தெரிவித்தார்.

    • நான் பேட்டிங் செய்ய வரும் முன்னர் அவரது பந்து வீச்சு வீடியோவை 100 முறை பார்த்து விட்டுதான் பேட்டிங் செய்ய வருவேன்.
    • அவர் ஒரு மிரட்டலான பந்து வீச்சாளராக இருந்தார்.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா துபாயில் உள்ள எப் எம் சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தார்.

    அதில், நீங்கள் சந்தித்ததில் கடினமான பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரோகித் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரை கூறினார்.

    இது குறித்து ரோகித் கூறியதாவது:-

    நான் பேட்டிங் செய்ய வரும் முன்னர் அவர் பந்து வீச்சு வீடியோவை 100 முறை பார்த்து விட்டுதான் பேட்டிங் செய்ய வருவேன். அவர்தான் தென் ஆப்பிரிக்கா வீரர் டேல் ஸ்டெய்ன். அவர் கிரிக்கெட்டின் ஜாம்பவான்.

    மேலும் அவர் தனது வாழ்க்கையில் என்ன சாதித்திருக்கிறார் என்பதை பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது. நான் அவரை பலமுறை எதிர்கொண்டேன். அவரது பந்து வீச்சு வேகமாக இருக்கும். அதில் ஸ்விங்கும் செய்வார். அப்படி பந்து வீசுவது மிகவும் கடினமானது.

    அவர் ஒரு மிரட்டலான பந்து வீச்சாளராக இருந்தார். அவர் அனைத்து போட்டி, சீசனிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாடுவார். அவருக்கு எதிராக விளையாடியதில் மகிழ்ச்சியாக இருந்தது.

    இவ்வாறு ரோகித் கூறினார்.

    • 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணியில் ஒன்றாக இருந்தனர்
    • என்னுடன் நண்பர்களாக இருந்தவர்களிடம் நான் தொடர்வில் உள்ளேன்.

    இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியுடன் 10 வருடங்களாகப் பேசவில்லை என ஹர்பஜன் சிங் அதிர்ச்சி தகவலைப் பகிர்ந்துள்ளார். இந்திய முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்துள்ளார்.

    2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ஹர்பஜனும் எம்எஸ் தோனியும் ஒன்றாக செயல்பட்டவர்கள்.

    இந்நிலையில் 2018-2020 வரை சென்னை சூப்பர் கிங்ஸில் விளையாடிய காலங்களில் தானும் எம்.எஸ் தோனியும் மைதானத்தில் பேசினோமே தவிர களத்திற்கு வெளியே பேசிக்கொள்வதில்லை என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

     

    'அவருடன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என் போன் காலை அட்டென்ட் செய்பவர்களுக்கு மட்டுமே நான் போன் செய்வேன், மற்றவர்களிடம் பேச எனக்கு நேரமில்லை. என்னுடன் நண்பர்களாக இருந்தவர்களுடன் நான் தொடர்பில் உள்ளேன். உறவு என்பது இருவருக்கிடையிலான கொடுக்கல் - வாங்கல் சம்பந்தப்பட்டது.

    நான் உங்களுக்கு மதிப்பளிப்பதாக இருந்தால், பதிலாக நீங்கள் எனக்கும் மதிப்பளிப்பீர்கள் என்று நான் நம்ப வேண்டும், அல்லது எனக்கு பதில் அளிப்பீர்கள் என்றாவது உறுதியாகத் தெரிய வேண்டும்.

     

    நான் உங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை போன் செய்தும் நீங்கள் பதிலளிக்கவில்லை என்றால், நான் உங்களை தேவை இருந்தால் மட்டுமே சந்திப்பேன் மற்றபடி எதுவும் இல்லை என்று ஹர்பஜன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

    • ராஜஸ்தானை சேர்ந்த சுசீலா மீனா என்ற பள்ளிச் சிறுமியின் வேகப்பந்து வீச்சு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.
    • ஏற்கனவே அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்

    ராஜஸ்தானை சேர்ந்த சுசீலா மீனா என்ற பள்ளிச் சிறுமியின் வேகப்பந்து வீச்சு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. இது மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் முன்னாள் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் கவனத்தைப் பெற்றுள்ளது.

     

    சுசீலா மீனாவின் பந்துவீச்சு திறனை பார்த்து வியந்த சச்சின் அவரின் வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானுடன் சுஷீலா மீனாவின் பந்துவீச்சு பாணியை ஒப்பிட்டு எழுதினார்.

    ஹைலைட் என்னவென்றால் இந்த பதவிக்கு ஜாகீர் கானும் பதில் அளித்துள்ளார். தனது பதிவில் ஜாகீர் கான் கூறியதாவது, நீங்கள் அதை [சிறுமியின் பந்துவீச்சு பாணியை] கவனித்தரிந்துள்ளீர்கள், அதை நான் முற்றிலும் ஏற்கிறன், அவளது விளையாட்டு மென்மையாகவும், சுவாரஸ்யமாகவும் உள்ளது, ஏற்கனவே அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

     

    டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார். #ENGvIND #JamesAnderson
    இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து வீரர் ஆவார். ஓவல் டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் (தவான், புஜாரா) கைப்பற்றினார். இறுதி கட்டத்தில் சமியை போல்ட் செய்த அவர் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

    டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில் 4-வது இடத்தில் இருந்த மெக்ராத்தை (ஆஸ்திரேலியா) கீழே தள்ளி ஆண்டர்சன் அந்த இடத்தை பிடித்துள்ளார். மெக்ராத் 124 டெஸ்டில் 563 விக்கெட் எடுத்துள்ளார். ஆண்டர்சன் 143 டெஸ்டில் 564 விக்கெட் கைப்பற்றியுள்ளார். 

    சுழற்பந்து வீச்சாளர்களான முத்தையா முரளீதரன் (இலங்கை) 800 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும், ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா) 708 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும், அனில் கும்ளே (இந்தியா) 619 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். #ENGvIND #JamesAnderson 
    ×