search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fee offer"

    • ரெயில் பயணக் கட்டண சலுகை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த முதியோர்கள் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கடந்த ஆண்டு மார்ச்சில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியபோது ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் தாளாளரும், வழக்கறிஞருமான சமூக ஆர்வலர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் கூறியதாவது:-

    ரெயில் பயணக் கட்டணத்தில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகை ரத்து செய்யப்பட்டதால் முழு கட்டணம் செலுத்தி பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    ரெயில் பயணத்துக்கான கட்டணத்தில் 58 வயதைக் கடந்த பெண்களுக்கு 50 சதவீத சலுகையும், 60 வயதைக் கடந்த ஆண்களுக்கு 40 சதவீத சலுகையும் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு மார்ச்சில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியபோது ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    கொரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டாலும், சிறப்பு ரெயில்களாக கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்பட்டன. அந்த காலகட்டத்தில் மூத்த குடிமக்களுக்கான பயணக் கட்டணச் சலுகை முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்தது.

    சுமார் ஒன்றரை ஆண்டுகளாக சிறப்பு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், வழக்கமான ரெயில் சேவைகளை கடந்த சில நாள்களாக ரெயில்வே நிர்வாகம் வழங்கி வருகிறது. ரெயில்களில் சமைத்த உணவுப் பொருள்களை விற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பயணக் கட்டணத்துக்கான சலுகைகளை மீண்டும் வழங்குவது தொடர்பாக இன்னும் எந்த முடிவும். எடுக்கப்படாமல் இருப்பது மூத்த குடிமக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே மத்திய அரசு ஏற்கனவே இருந்தபடி மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை பயணத்தை மீண்டும் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×