search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Feed"

    • சேலம் அருகே உள்ள அனுப்பூர் பகுதியில் குறைந்த செலவினத்தில் கால்நடைகளுக்கான அடர் தீவனம் தயாரித்தல் குறித்து விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
    • இயற்கை வளங்கள் அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் தேவைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் அருகே உள்ள அனுப்பூர் பகுதியில் குறைந்த செலவினத்தில் கால்நடைகளுக்கான அடர் தீவனம் தயாரித்தல் குறித்து விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.

    அட்மா திட்ட இனங்கள் பற்றியும், உழவன் செயலி யின் முக்கியத்துவம் பற்றி யும், மற்றும் முக்கிய மான பயிர் சார்ந்த தொழில்நுட்பங்கள் பற்றியும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் கந்தசாமி, குறைந்த செலவினத்தில் கால்நடைகளுக்கான அடர் தீவனம் தயாரிக்கும் முறை குறித்து சேலம் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் கோபி ஆகியோர் விளக்க மளித்தனர்.

    வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி வட்டார வேளாண்மை இயக்குநர் சரஸ்வதி பேசினார். தொடர்ந்து, தரிசு நில ங்களை கண்டறிந்து விளை நிலங்களாக மாற்றுதல், வேளாண்மையில் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கு வாய்ப்புகள் பற்றியும், கிராம ஊராட்சிகளில் உள்ள இயற்கை வளங்கள் அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் தேவைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

    இதில் தோட்டக்கலை த்துறை உதவி அலுவலர் அருட்செல்வம், ஊராட்சி தலைவர் விஜயன், உதவி கால்நடை மருத்துவர் பிரியா, உதவி வேளாண்மை அலுவலர் சிவனேசன் உள்ளிட்ட பல்வேறு துறை யைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை உதவித் தொழில்நுட்ப மேலாளர் ராஜ்குமார் செய்திருந்தார்.

    ×