என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fell into the"

    • கிணற்றின் அருகில் அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.
    • அவர் குடிபோதையில் தவறி கிணற்றில் விழுந்தார்.

    ஈரோடு,

    ஈரோடு அடுத்துள்ள பெரியசேமூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (52). கூலித்தொழிலாளியான இவர் நேற்று மாலை அங்குள்ள விவசாய தோட்டத்து கிணற்றின் அருகில் அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அவர் குடிபோதையில் தவறி கிணற்றில் விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இது குறித்து ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி முருகனின் உடலை மீட்டனர்.

    இது குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • இன்று காலை மீண்டும் அந்த வடிகாலில் அருகே சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த மாடு தவறி அந்த கழிவுநீர் வடிகாலில் விழுந்துவிட்டது.
    • இதனை பாதுகாப்பான முறையில் மூடி பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் பாதுகாப்பு வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த புதுப்பாளையம் செல்லும் சாலையில் ஆத்தப்பம் பாளையம் பிரிவு என்ற இடத்தில் சாலையோரம் கழிவுநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகாலில் எப்பொழுதும் அதிக அளவில் கழிவு நீர் தேங்கி குளம் போல இருக்கும்.

    இந்த கழிவு நீர் வடிகாலில் கடந்த மாதம் 12-ந் தேதி எருமை மாடு ஒன்று விழுந்தது. அதனை உரிய நேரத்தில் மாட்டின் உரிமையாளர் இருந்ததால் உயிருடன் மீட்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை மீண்டும் அந்த வடிகாலில் அருகே சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த மாடு தவறி அந்த கழிவுநீர் வடிகாலில் விழுந்துவிட்டது. இதனை மீட்க முடியாமல் மாட்டின் உரிமையாளர் சிரமப்பட்டு வந்தார்.

    அக்கம் பக்கத்தின் உள்ளவர்கள் உதவியோடு கயிற்றின் மூலம் பாதுகாப்பான முறையில் கட்டி மேலே மீட்டனர். இதனால் அந்தியூர் பர்கூர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில்,

    இந்த சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது. இரவு நேரத்தில் இந்த பகுதிக்கு நாங்கள் வருவதற்கு மிகவும் அச்சத்தோடும், ஒருவித பயத்தோடுமே வர வேண்டி உள்ளது. புதியதாக இந்த பகுதிக்கு இரவு நேரத்தில் வருபவர்கள் யாரேனும் இந்த கழிவுநீரில் விழுந்து விடுவார்களோ? என்ற பயம் எங்களுக்குள் இருந்து வருகிறது.

    ஆகவே இதனை பாதுகாப்பான முறையில் மூடி பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் பாதுகாப்பு வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×