என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Female guard"

    • இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை பெண்காவலர்கள் ரோந்து சுற்றி வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    • கடைவீதிகளிலும், வாகனங்களில் பயணம் செய்யும்போது பெண்கள் பயமின்றி நடமாட முடியும்.

    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் இரவு நேரத்திலும் எந்தவித பயமுமின்றி நடமாட மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதன் ஒரு கட்டமாக பெண்கள் இரவில் சுதந்திரமாக கடைவீதிகளுக்கு சென்று வர மாநில போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக ஜம்முவில் உள்ள 6 முக்கிய சந்திப்புகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பெண் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

    இதற்காக அவர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆயுதங்களுடன் அவர்கள் ஆண் காவலர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

    இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை பெண்காவலர்கள் ரோந்து சுற்றி வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் காஷ்மீர் மாநிலத்தில் பெண்கள் இனி சுதந்திரமாக இரவிலும் நடமாடலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த பாதுகாப்பு நடவடிக்கை மூலம் ஜம்முவில் உள்ள பெண்கள் கூறும்போது, கடைவீதிகளிலும், வாகனங்களில் பயணம் செய்யும்போது பெண்கள் பயமின்றி நடமாட முடியும் என்று கூறினர்.

    • அவமானம் அடைந்த அந்த பெண் காவலர் விஷத்தை குடித்துவிட்டார்.
    • சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    புதுடெல்லி:

    டெல்லி அருகில் உள்ள காஜியாபாத் ஹவுசிங் சொசைட்டியில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 19 வயது பெண் காவலர் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் பணியில் இருந்தபோது அவரது மேற்பார்வையாளர் அஜய்(32) என்பவர் உள்ளிட்ட 3 பேர் தாக்கியுள்ளனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து அவரை கூட்டு பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனால் அவமானம் அடைந்த அந்த பெண் காவலர் விஷத்தை குடித்துவிட்டார்.

    உடனே அவரை சக காவலர்கள் மீட்டு டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அஜய்யை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணியில் இருந்த பெண் காவலரை தாக்கிய கோவில் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
    • இருக்கன்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரி யம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு முழு வதும் பல்வேறு பகுதிகளிலி ருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரு கின்றனர். இதனால் கோவி லில் பாதுகாப்பிற்காக இருக் கன்குடி மற்றும் அப்பயநா யக்கன்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் இருந்து காவலர்கள் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று அப்பையநாயக்கன்பட்டி காவல் நிலையத்தில் பணிபு ரியும் காளியம்மாள் என்ற பெண் காவலர் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு வந்துள்ளார். அப் போது இருக்கன்குடி மாரி யம்மன் கோவிலில் பணிபுரி யும் மணிசங்கர் என்பவர் பணியில் இருந்த பெண் காவலர் காளியம்மாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள் ளார்.

    வாக்குவாதம் முற்றியதை யடுத்து அவர் பெண் கா வலரை தாக்கியதாக தெரிகி றது. உடனடியாக இதைப் பார்த்த அருகில் உள்ள காவ லர்கள் காளியம்மாளை காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் பணியில் இருந்த பெண் காவலரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பெண் என்றும் பாராமல் தாக்கிய குற்றத்திற்காக கோவில் பணியாளர் மணிசங்கரை கைது செய்து இருக்கன்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2021-ம் ஆண்டு ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக நந்தம்பாக்கம் போலீசாரால் ஜெயந்தி கைது செய்யப்பட்டார்.
    • இரவு கைதிகளின் எண்ணிக்கையை அதிகாரிகள் கணக்கெடுத்த போதுதான் ஜெயந்தி ஜெயிலில் இருந்து தப்பி சென்று இருப்பது தெரிந்தது.

    செங்குன்றம்:

    பெங்களூரை சேர்ந்தவர் ஜெயந்தி (32). இவர் செம்மஞ்சேரியில் தங்கி பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது ஏராளமான கொள்ளை வழக்குகள் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக நந்தம் பாக்கம் போலீசாரால் ஜெயந்தி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் ஜெயந்தி சிறையில் இருந்த போது பார்வையாளர்கள் நுழைவு பகுதி வழியாக சென்று புழல் ஜெயிலில் இருந்து தப்பி வெளியே சென்றுவிட்டார்.

    அவர் தப்பி சென்றது உடனடியாக போலீசாருக்கு தெரியவில்லை. இரவு கைதிகளின் எண்ணிக்கையை அதிகாரிகள் கணக்கெடுத்த போதுதான் ஜெயந்தி ஜெயிலில் இருந்து தப்பி சென்று இருப்பது தெரிந்தது. கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது பார்வையாளர்கள் நுழைவு வாயில் வழியாக ஜெயந்தி வெளியே செல்வது பதிவாகி உள்ளது. இதை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறைக் காவலர்கள் கனகலட்சுமி, கோகிலா ஆகிய 2 பேரையும் சஸ்பெண்டு செய்து சிறைத்துறை இயக்குனர் அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டு உள்ளார். புழல் ஜெயிலில் இருந்து தப்பிய ஜெயந்தியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதுகாப்பு அதிகம் உள்ள புழல் ஜெயிலில் இருந்து பெண்கைதி தப்பி சென்ற சம்பவம் அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சில தினங்களுக்கு முன் சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.
    • குருப்பநாயக்கனூர் கிளைச்செயலாளர் சிவகுமார் மற்றும் குரல் குட்டை திமுக. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள குருப்பநாயக்கனூர் ஊராட்சியை சேர்ந்தவர் கீதா. ஊர்க்காவல் படையில் பணியாற்றிய இவர் சில தினங்களுக்கு முன் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து உடுமலை திமுக. நிர்வாகியும் பழனியம்மாள் டிரான்ஸ்போர்ட் உரிமையாளருமான ராமசாமி கீதாவின் வீட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். அப்போது குருப்பநாயக்கனூர் கிளைச்செயலாளர் சிவகுமார் மற்றும் குரல் குட்டை திமுக. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×