என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Female suicide by hanging"
- தனஸ்ரீ வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் காந்திபன். இவரது மகள் தனஸ்ரீ (வயது 31). இவருக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு போடிநாயக்கனூரை சேர்ந்த கார்த்திக் பிரபு என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார். கணவன், மனைவிக்கு இடை யே ஏற்பட்ட குடும்ப பிரச்ச னை காரணமாக இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இதனால் தனஸ்ரீ நீண்ட நாட்களாக மன வேதனையில் இருந்து வந்து ள்ளார். இந்நிலையில் சம்பவ த்தன்று தனஸ்ரீ வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் இது குறித்து அவரது தந்தை காந்தி பன் மொடக்கு றிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- ரஞ்சிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் சின்ன வலசு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் சுரேஷ். இவரது மனைவி ரஞ்சிதா (வயது 28). இவர்கள் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இருவ ருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுரேஷ் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவி ரஞ்சிதாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சுரேஷ் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் மன உளைச்சல் அடைந்த ரஞ்சிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டார்.
இதைப் பார்த்த ரஞ்சிதாவின் மகள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மரு த்துவமனையில் சிகிச்சை க்காக சேர்த்தனர்.
இந்நிலையில் அங்கு சிகி ச்சை பெற்று வந்த ரஞ்சிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் இது குறித்து ரஞ்சிதாவின் தாய் விஜயா ஈரோடு வடக்கு போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- மயிலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நாமக்கல்பாளையம் ரோடு எம்.ஜி.ஆர். நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ரெங்க சாமி (வயது 42). இவரது மனைவி மயிலா (38). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
மயிலா கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மிகுந்த மனவேதனை அடைந்த மயிலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு கொண்டார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் மயிலாவை மீட்டு சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மயிலா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் இதுகுறித்து அவரது கணவர் ரெங்கசாமி சென்னிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடு த்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்