என் மலர்
நீங்கள் தேடியது "Files"
- கோரிக்கை மனுக்களை விரைவாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- பதிவறையில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலகக் கோப்புகள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து அலுவலகக் கோப்புகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து பதிவறையில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலகக் கோப்புகள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இதில் அனைத்து கோப்புகளும் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை விரைவாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர், ஒரத்தநாடு வட்டாட்சியர்சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்ரமேஷ், ரகுநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- திட்ட பணிகள் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலகக் கோப்புகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
- பல்வேறு கோரிக்கை மனுக்களை விரைவாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து அலுவலகக் கோப்புகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து பதிவறையில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலகக் கோப்புகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இதில் அனைத்து கோப்புகளும் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை விரைவாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், வட்டாட்சியர் சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், மதியரசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பிரபல இந்தி நடிகர் சன்னி டியோல் கடந்த 23-ந்தேதி பா.ஜனதா கட்சியில் இணைந்தார். பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்.
இதையடுத்து குர்தாஸ்பூர் தொகுதியில் நடிகர் சன்னி டியோல் பா.ஜனதா சார்பில் போட்டியிடக்கூடும் என்று தகவல்கள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் குர்தாஸ்பூர் தொகுதி பா.ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதற்காக நேற்று பிரதமர் மோடியை சந்தித்து சன்னி டியோல் நன்றி தெரிவித்தார். முன்னதாக அவர் கடந்த சனிக்கிழமை ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் ரோடு ஷோ நடத்தி பிரசாரம் செய்தார்.
இன்று நடிகர் சன்னி டியோல் குர்தாஸ்பூர் தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்தார். அவருடன் மறைந்த நடிகர் வினோத்கன்னாவின் மனைவி கவிதாகன்னா, மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் ஆகியோர் உடன் சென்றனர்.

குர்தாஸ்பூர் தொகுதி பா.ஜனதா கட்சியின் கோட்டையாக கருதப்படும் தொகுதியாகும். பிரபல மறைந்த நடிகர் வினோத் கன்னா இந்த தொகுதியில் 1998, 1999, 2004, 2014-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றார்.
வாஜ்பாய் அமைச்சரவையில் மந்திரியாகவும் வினோத் கன்னா இருந்தார். இதனால் இந்த தொகுதி பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக நீடிக்கிறது.
இந்த தொகுதியை பா.ஜனதாவிடம் கைப்பற்றுவதற்காக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் தானே அந்த தொகுதியில் களம் இறங்கி உள்ளார். இதனால் அந்த தொகுதியில் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
காங்கிரசின் தேர்தல் வியூகத்துக்கு பதிலடி கொடுப்பதற்காகவே நடிகர் சன்னி டியோலை பா.ஜனதா குர்தாஸ்பூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தி உள்ளது. பிரபல இந்தி நடிகர் தர்மேந்திராவின் மகனான சன்னி டியோலுக்கு அந்த தொகுதியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வினோத் கன்னாவின் மனைவி கவிதா தீவிர பிரசாரம் செய்து சன்னி டியோலுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். ஹேமமாலினியும் சன்னி டியோலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளார்.