என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Film Festival"

    • பிரான்ஸ் நாட்டில் கடந்த மே 14-ம் தேதி தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.
    • இந்தத் திரைப்பட விழாவின் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட பல இந்தியத் திரைப்படங்கள் தேர்வாகி திரையிடப்பட்டன.

    பிரான்ஸ் நாட்டில் கடந்த மே 14-ம் தேதி தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்தத் திரைப்பட விழாவின் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட பல இந்தியத் திரைப்படங்கள் தேர்வாகி திரையிடப்பட்டன. அதில் முதல் மற்றும் மூன்றாவது இடத்தை இந்திய குறும்படங்கள் பிடித்திருப்பது ரசிகர்களை குதூகலமடையச் செய்திருக்கிறது.

    இயக்குனர் சித்தானந்த் எஸ் நாயக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சன்பிளவர்ஸ்'. 16 நிமிடங்கள் ஓடக்கூடிய புனேவைச் சேர்ந்த பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மாணவர்களின் தயாரிப்பில் உருவான குறும்படம் இது.

    77-வது கேன்ஸ் திரைப்பட விழாவின் சிறந்த குறும்படத்திற்கான லா சினிஃப் பிரிவில் இடம் பெற்ற இந்தியத் திரைப்படப் பள்ளியின் ஒரே திரைப்படமாக இது உள்ளது. திரையிடல் முடிந்த பிறகு 'சன்பிளவர்ஸ்' குறும்படம் லா சினிப் பிரிவில் முதல் பரிசு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முதல் பரிசு பெற்ற 'சன்பிளவர்ஸ்' படக்குழுவுக்கு இயக்குனர் ராஜமவுலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்திய திறமை எல்லைத்தாண்டி பிரதிபலிக்கிறது... கேன்ஸ் 2024 இல் சிறந்த குறும்படத்திற்கான லா சினிப் விருதை சிதானந்தஸ்நாயக்கின் 'சன்பிளவர்ஸ்' வென்றுள்ளது என்பதைக் கேள்விப்பட்டதில் மகிழ்ச்சி! இளைஞர்களுக்கு பாராட்டுகள், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த மே 14-ம் தேதி முதல் நடைப்பெற்று வந்த கேன்ஸ் திரைப்படவிழா நேற்று நிறவடைந்தது.
    • இந்திய குறும்படமான ’ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்’ திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    கடந்த மே 14-ம் தேதி முதல் நடைப்பெற்று வந்த கேன்ஸ் திரைப்படவிழா நேற்று நிறவடைந்தது. இந்திய குறும்படமான 'ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்' திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 40 வருடங்களுக்கு பிறகு கேன்ஸ் விழாவில் இடம் பெறும் இந்திய திரைப்படமாகும். பாயல் கபாடியாவின் இயகத்தில் கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் இப்படம் உருவாகியுள்ளது.

    விழாவின் முதன்மை போட்டி பிரிவில் கேன்ஸ் பாம் டி ஓர் விருதுக்காக போட்டியிடும் முதல் இந்திய திரைப்படம் என சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது உயரிய விருதான 'கிரண்ட் பிரிக்ஸை' இந்திய திரைப்படமான "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" வென்றுள்ளது. இதன் மூலம் 'கிராண்ட் பிரிக்ஸ்' வென்ற முதல் இந்திய இயக்குனராகி வரலாறு படைத்துள்ளார் பாயல் கபாடியா. பாம் டி'ஓர் விருதுக்கு அடுத்தபடியாக 'கிராண்ட் பிரிக்ஸ்' விருதுதான் கேன்ஸ் விழாவின் உயரிய விருதாகும்.இப்படத்திற்கு விழாவில் 8 நிமிடம் படம் பார்த்து முடித்த பின் எழந்து நின்று கை தட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரசிகர்களிடம் அங்கீகாரம் மஞ்சுமெல் பாய்ஸ் படத்துக்கு தற்போது சர்வதேச திரைப்பட விழாவிலும் அங்கீகாரம் கிடந்துள்ளது,
    • கினோபிராவோ விழாவில் திரையிடப்படும் முதல் மலையாள படம் என்ற பெருமையையும் மஞ்சும்மெல் பாய்ஸ் பெற்றுள்ளது.

    மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் மஞ்சுமெல் பாய்ஸ்.. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கொடைக்கானலில் இருக்கும் குணா குகைக்கு சுற்றுலா வரும் 11 நண்பர்களில் ஒருவர் உள்ளே சிக்கிக் கொள்ள அவரை மீட்பதே கதை.

     

    கமல் நடிப்பில் வெளியான குணா படத்தின் நியாபகங்கங்களை இப்படம் தந்ததால் தமிழிலும் மஞ்சுமெல் பாய்ஸ் பெரிதும் கொண்டாடப்பட்டது. சர்வதேச அளவில் ரூ.240 கோடிகளுக்கும் அதிகமான வசூலைக் குவித்த படமாகவும் இது மாறியது. இந்நிலையில் ரசிகர்களிடம் அங்கீகாரம் மஞ்சுமெல் பாய்ஸ் படத்துக்கு தற்போது சர்வதேச திரைப்பட விழாவிலும் அங்கீகாரம் கிடந்துள்ளது.

     

    ரஷியாவில் கடந்த 28 ஆம் தேதி தொடங்கிய கினோபிராவோ திரைப்பட விழாவில் மஞ்சுமெல் பாய்ஸ் திரையிடப்படுகிறது. அக்டோபர் 4 வரை நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் நேற்று [செப்டம்பர் 30] திரையிடப்பட்ட மஞ்சுமெல் பாய்ஸ் இன்றும் [அக்டோபர்1] தொடர்ந்து இரண்டாவது நாளாக திரையிடப்படுகிறது. கினோபிராவோ விழாவில் திரையிடப்படும் முதல் மலையாள படம் என்ற பெருமையையும் மஞ்சும்மெல் பாய்ஸ் பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த குறும்படம் குழந்தை தொழிலாளர்கள் பிரச்சனையை பற்றி பேசுகிறது.
    • சிறந்த அனிமேஷன் குறும்படடங்களாக தி பியூட்டிபுல் மென் உள்ளிட்டவை தேர்வாகி உள்ளன.

    அமெரிக்காவின் சினமா துறையான ஹாலிவுட் இயங்கி வரும் இடமான கலிபோர்னியாவில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதனால் திரைப்படங்களுக்கான வருடாந்திர ஆக்ஸர் விருது விழா இரண்டு முறை ஒத்தி வைப்பட்டது.

    தொடர்ந்து மார்ச் 2 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் 97வது ஆக்ஸர் விழா நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

    சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் இந்த வருடத்தின் விருதுகளுக்கான இறுதித் தேர்வு பட்டியலை ஆஸ்கர் குழு நேற்று வெளியிட்டுள்ளது.

    இந்த வருடம் ஆக்ஸர் இறுதிப் பட்டியலில் இந்தியாவிலுருந்து சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் என்ற பிரிவில் இந்தியாவைச் சார்ந்த 'அனுஜா' என்ற குறும்படம் தேர்வாகி உள்ளது.

    ஆடம் ஜே.கிரேவ்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை குனீத் மோங்கா, நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர். இந்த குறும்படம் குழந்தை தொழிலாளர்கள் பிரச்சனையை பற்றி பேசுகிறது.

    டெல்லியில் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் அனுஜா, தனது சகோதரி பாலக்குடன் பணியாற்றி வருகிறாள். வாழ்க்கையை மாற்றும் ஒரு சூழலை எதிர்கொள்ளும் போது, தனது குடும்பத்தின் ஒட்டுமொத்த எதிர்காலமும் தனது அனுஜா தனது தோள்களில் சுமத்தப்பட்டிருப்பதை அனுஜா உணர்கிறாள்.

    95வது ஆஸ்கர் விருதுகளில், சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை வென்ற The Elephant Whisperers ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர் அனோஜா படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். அனுஜா படம் மட்டுமே இந்தியா சார்பில் இந்த வருடம் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

    ஆஸ்கர் குறும்படங்கள் இறுதி பட்டியல் :

    சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்: லெயின், அனுஜா, ஐ ஆம் நாட் ய ரோபோட், தி லாஸ்ட் ரேஞ்சர், தி மேன் ஹு குட் நாட் ரிமெயின் சைலன்ட்,

    சிறந்த அனிமேஷன் குறும்படம்: தி பியூட்டிபுல் மென், இன் தி ஷேடோ ஆப் சைப்ரஸ், மேஜிக் கேன்டீஸ், வாண்டர் ஆப் தி ஒன்டர், யக்! (Yuck!)

    சிறந்த ஆவணக் குறும்படம்: டெத் பை நம்பர்ஸ், ஐ ஆம் ரெடி வார்டன், இன்சிடென்ட், இன்ஸ்ட்ருமென்ட்ஸ் ஆப் பீட்டிங் ஹார்ட், தி ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்டரா.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தப் படம் கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் மற்றும் கோர்பு(CORFU) பகுதிகளில் படமாக்கப்பட்டது.
    • இன்று (பிப்ரவரி 27) மும்பையில் தொடங்கும் 5வது வென்ச் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நாடியாக வளம் வரும் ஸ்ருதி ஹாசன் கடைசியாக பிரபாஸுக்கு ஜோடியாக சலார் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஹாலிவுட் படம் ஒன்று தயாராகி உள்ளது.

    'தி ஐ' (The Eye) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை டாப்னே ஷ்மோன் இயக்கியுள்ளார். இதில் ஸ்ருதி ஹாசனுடன் மார்க் ரவுலி, அன்னா சவ்வா, லிண்டா மார்லோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    இந்தப் படம் கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் மற்றும் கோர்பு(CORFU) பகுதிகளில் படமாக்கப்பட்டது. தனித் தீவில் நீரில் மூழ்கி உயிரிழந்த தனது காதலனின் அஸ்தியை கரைக்க ஸ்ருதி ஹாசன் முயலும்போது அங்குள்ள உள்ளூர் மக்களால் பின்பற்றப்படும் ஒரு பழங்கால சடங்கினால் சிக்கல் ஏற்படுவதாக கதை நகர்கிறது.

    மெலனி டிக்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்க்கு ஜேம்ஸ் செக்வின் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர்தற்போது வெளியாகி உள்ளது. சைகோலாஜிக்கல் திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது.

    இந்தியாவில் இந்த படத்தின் ரிலீஸ் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் இன்று (பிப்ரவரி 27) மும்பையில் தொடங்கும் 5வது வென்ச் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த வீடியோவை பகிர்ந்து கடைசியில் பாஜக உண்மையை ஒப்புக்கொண்டது என விமர்சித்துள்ளது.
    • அவர் கேமரா கலைத்திறன், டெலிப்ராம்ப்டர்கள், உடைகள் மற்றும் மலர்ச்சியூட்டும் பேச்சுகளில் நிபுணர்.

    ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடந்த IIFA திரைப்பட விருது விழாவில் அம்மாநில பாஜக முதல்வர் பஜன்லால் சர்மா கலந்துகொண்டார்.

    நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் அவரிடம், உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேள்வி கேட்டனர். இதைக் கேட்டதும் முதல்வர் சிரித்துக் கொண்டே பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை அவர் சொன்னார்.

    இதைப் கேட்டு எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். இந்த வீடியோ இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் இந்த வீடியோவை பகிர்ந்து, ஒரு வழியாக பாஜக உண்மையை ஒப்புக்கொண்டது என விமர்சித்துள்ளது.

    இதுதொடர்பாக பேசிய ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோட்டாசாரா, மோடி ஒரு தலைவர் அல்ல, ஒரு நடிகர் என்று நாங்கள் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறோம்.

    தாமதமாக இருந்தாலும், பாஜக அரசாங்கத்தின் முதலமைச்சர்கள் கூட மோடி ஒரு நடிகர், மக்கள் தலைவர் அல்ல என்று கூறத் தொடங்கியுள்ளனர். அவர் கேமரா கலைத்திறன், டெலிப்ராம்ப்டர்கள், உடைகள் மற்றும் மலர்ச்சியூட்டும் பேச்சுகளில் நிபுணர் என்று விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேராவும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நல்லொழுக்கம், வாழ்வியல் நெறிமுறைகளை போதிக்கும் திரைப்படவிழாவை நேற்று மாவட்ட கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்.
    சேலம்:

    சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நல்லொழுக்கம், வாழ்வியல் நெறிமுறைகளை போதிக்கும் குழந்தைகள் திரைப்பட விழா சேலம் ஏ.ஆர்.ஆர்.எஸ். மல்டி பிளக்ஸ் தியேட்டரில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ரோகிணி கலந்துகொண்டு குழந்தைகள் திரைப்பட விழாவை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த குழந்தைகள் திரைப்பட விழாவில், எங்களாலும் முடியும், மல்லி, துபாஷி மற்றும் முதலை ஆகிய நான்கு படங்கள் திரையிடப்படுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த குழந்தைகள் திரைப்பட விழாவில் சேலம் மாவட்டத்தில் உள்ள 27 திரையரங்குகளில் 81 காட்சிகள் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டணமின்றி இலவசமாக திரையிட்டுக் காண்பிக்கப்பட உள்ளது.

    சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி மற்றும் தேர்வுகள் பாதிக்காத வகையில் அட்டவணை தயார் செய்து, அருகில் உள்ள திரையரங்குகளின் இருக்கைக்கு ஏற்றவாறு பள்ளி குழந்தைகள் அனுமதிக்கப்படுவார்கள். சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள 114 பள்ளிகளில் பயிலும் 51 ஆயிரத்து 936 மாணவ, மாணவிகளுக்கு இக்குழந்தைகள் திரைப்படமானது திரையிடப்படுகிறது.

    பள்ளி குழந்தைகளை அழைத்து வரும்போது உடன் ஆசிரியர்கள் வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளை தூய்மையாக பராமரித்திடவும், மாணவ-மாணவிகளுக்கு தேவையான குடிநீர் வசதி, மின்விசிறி வசதி, சுகாதாரமான கழிவறை வசதிகளுக்கு ஏற்பாடு செய்திடவும், குழந்தைகள் திரைப்பட விழா நடைபெறும் சமயம் திரையரங்க பணியாளர்களை பணியில் அமர்த்தி குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கிடவும் திரையரங்கத்தினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    முன்னதாக தியேட்டரில் பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் ரோகிணி மற்றும் அதிகாரிகள் பலரும் அமர்ந்து குழந்தைகள் திரைப்படத்தை பார்த்தனர்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, இந்திய குழந்தைகள் திரைப்பட சங்க உதவி வினியோக அலுவலர் அகிலா, சேலம் (மேற்கு) தாசில்தார் தீபசித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×