என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Final voters list"
தமிழ்நாடு முழுவதும் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முடிவடைந்த நிலையில் இன்று புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி, பத்மநாபபுரம், குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இத்தொகுதிகளில் உள்ள மொத்த வாக்காளர்கள் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர் விபரங்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே இன்று வெளியிட்டார்.
அதன்படி குமரி மாவட்டத்தில் மொத்தம் 14 லட்சத்து 77 ஆயிரத்து 161 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 45 ஆயிரத்து 626.
பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 31 ஆயிரத்து 387. இதர வாக்காளர்கள் 148.
குமரி மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் கன்னியாகுமரி தொகுதியிலேயே அதிக வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 2 லட்சத்து 75 ஆயிரத்து 508 பேர் உள்ளனர்.
பத்மநாபபுரம் தொகுதியில் குறைந்த பட்சமாக 2 லட்சத்து 23 ஆயிரத்து 964 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியிலில் 37 ஆயிரத்து 731 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண்கள் 17 ஆயிரத்து 382 பேர். பெண்கள் 20 ஆயிரத்து 344.
நீக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 7,671 பேர். ஆண் வாக்காளர்கள் 3,903 பேரும், பெண் வாக்காளர்கள் 3,763 பேரும் இதர வாக்காளர்கள் 5 பேரும் நீக்கப்பட்டு உள்ளனர்.
புதிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியதாவது:-
1-1-2019-ம் தேதி 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். அதற்கு அவர்கள் 1950 என்ற இலவச தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறியலாம்.
மேலும் இந்த தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு நபரும் விடுபடக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, சப்- கலெக்டர்கள் பவன்குமார் கிரியப்பனார், சந்தியா அரி மற்றும் தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் சந்துரு, தி.மு.க. சார்பில் வக்கீல் லீனஸ், காங்கிரஸ் சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் அமுதன் உள்பட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் ஆண், பெண் மற்றும் இதரர் குறித்த வாக்காளர்கள் விவரம் வருமாறு:-
தொகுதி ஆண் பெண் இதர மொத்தம்
கன்னியாகுமரி 138236 137206 66 275508
நாகர்கோவில் 124264 125651 13 249928
குளச்சல் 129265 122131 14 251410
பத்மநாபபுரம் 114687 109257 20 223964
விளவங்கோடு 118003 121164 20 239187
கிள்ளியூர் 121171 115978 15 237164
மொத்தம் 745626 731387 148 1477161
வேலூர், ஜன. 31-
வேலுர் கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை உதவி கலெக்டர் மெகராஜ் இன்று வெளியிட்டார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன், தேர்தல் பிரிவு தாசில்தார் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.
இந்திய தேர்தல் ஆணையம் 1.1.19-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு தீவிர சிறப்பு சுருக்க திருத்தம், 2019-யின் கீழ் வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. அன்று முதல் கடந்த 31,10,2018 வரையில் சுருக்க திருத்தங்களுக்கான படிவங்கள் பெறப்பட்டது.
சுருக்க திருத்தப்பணிகள் மேற்கொள்ளபட்டு வேலூர் மாவட்டத்தில் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடபட்டது.
15 லட்சத்து 7187 ஆண்கள் 15 லட்சத்து 61 ஆயிரத்து 446 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 145 பேர் உள்பட 30லட்சத்து 68 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.
இறுதிவாக் காளர் பட்டியல் வேலூர் மாவட்டத்தில் உள்ள 1648 வாக்குச்சாவடி அமைவிடங் களிலும் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.
பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிடலாம் என வேலூர் உதவி கலெக்டர் மெகராஜ் தெரிவித்தார். * * * சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம்:-
தஞ்சை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதுகுறித்து தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் 1-9-2018 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 9,39,707, பெண் வாக்காளர்கள் 972522 , மூன்றாம் பாலினத்தவர் 93 என மொத்த வாக்காளர்கள் 19,12,322 பேர் இடம் பெற்றிருந்தனர்.
கடந்த 1-1-2019-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பிய வாக்காளர்களிடம் இருந்து வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவங்கள் பெறப்பட்டு உரிய விசாரணைக்கு பின்பு தகுதி அடிப்படையில் ஆண் வாக்காளர்கள் 19170, பெண் வாக்காளர்கள் 24372, மூன்றாம் பாலினத்தவர் 27 என மொத்தம் 43,569 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகளின் போது உரிய கள விசாரணை அடிப்படையில் இறந்த மற்றும் இடம்பெயர்ந்த வாக்காளர்களில் ஆண்-9582, பெண்-11260, மூன்றாம் பாலினத்தவர் 2 ஆக மொத்தம் 20844 பேர் வாக்காளர் பட்டியல் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களின் பார்வைக்காக நாளை (1-ந் தேதி) முதல் வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் தவறின்றி இடம் பெற்றுள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் மற்றும் திருத்தம் செய்ய அதற்குரிய விண்ணப்பதை பூர்த்தி செய்து தகுந்த முகவரி சான்றிதழுடன் தொடர்புடைய தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். நேரடியாக உரிய படிவத்தில் பூர்த்தி செய்து வழங்க இயலாத பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் தொடர்பு மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண்.1950-ல் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #FinalVotersList
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி இன்று வாக்காளர் இறுதி பட்டியலை வெளியிட்டார். அதை மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, சப்-கலெக்டர் ஷரவன் குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் (தனி), காங்கயம், அவினாசி (தனி), திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 8 தொகுதிகளிலும் 11 லட்சத்து 60 ஆண் வாக்காளர்களும், 11 லட்சத்து 8 ஆயிரத்து 617 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 244 வாக்காளர்களும் என மொத்தம் 22 லட்சத்து 8 ஆயிரத்து 921 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக 2482 வாக்குசாவடிகள் அமைக்கப்படுகிறது. #FinalVotersList
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை கலெக்டர் (பொறுப்பு) துரை ரவிச்சந்திரன் வெளியிட்டார்.
கடந்த 1.9.2018 வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் படி கோவை மாவட்டத்தில் மொத்தம் 28 லட்சத்து 33 ஆயிரத்து 509 வாக்காளர்கள் இருந்தனர். புதிதாக 70 ஆயிரத்து 175 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். பெயர் நீக்குதல், இறந்தவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இடம் பெற்றவர்கள் என 41 ஆயிரத்து 723 பேர் நீக்கப்பட்டனர்.
இன்று வெளியிட்ட இறுதி பட்டியல் படி கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் மொத்தம் 28 லட்சத்து 61 ஆயிரத்து 961 வாக்காளர்கள் உள்ளனர்.
அவர்களில் ஆண்கள் 14 லட்சத்து 17 ஆயிரத்து 683 பேர் ஆவார்கள்.
பெண்கள் 14 லட்சத்து 43 ஆயிரத்து 967 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 311 பேர். ஆண்களை விட பெண்கள் அதிகம் ஆவார்கள்.
தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு-
மேட்டுப்பாளையம்
ஆண்கள் - 1,34,994
பெண்கள்- 1,41,457
மூன்றாம் பாலினத்தவர்கள் - 30
சூலூர்
ஆண்கள் - 1,43,707
பெண்கள்- 1,47,711
மூன்றாம் பாலினத்தவர்கள் - 17
கவுண்டம்பாளயைம்
ஆண்கள் - 2,10,995
பெண்கள்- 2,11,117
மூன்றாம் பாலினத்தவர்கள் - 70
கோவை வடக்கு
ஆண்கள் - 1,58,538
பெண்கள்- 1,56,235
மூன்றாம் பாலினத்தவர்கள் - 29
தொண்டாமுத்தூர்
ஆண்கள் - 1,50,250
பெண்கள்- 1,51,343
மூன்றாம் பாலினத்தவர்கள் - 60
கோவை தெற்கு
ஆண்கள் - 1,21,028
பெண்கள்- 1,21,025
மூன்றாம் பாலினத்தவர்கள் - 14
சிங்காநல்லூர்
ஆண்கள் - 1,51,533
பெண்கள்- 1,52,706
மூன்றாம் பாலினத்தவர்கள் - 22
கிணத்துக்கடவு
ஆண்கள் - 1,46,586
பெண்கள்- 1,50,025
மூன்றாம் பாலினத்தவர்கள் - 34
பொள்ளாச்சி
ஆண்கள் - 1,04,722
பெண்கள்- 1,11,193
மூன்றாம் பாலினத்தவர்கள் - 14
வால்பாறை
ஆண்கள் - 95,327
பெண்கள்- 1,01,115
மூன்றாம் பாலினத்தவர்கள் - 14
இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் அலுவலக பணி நேரங்களில் வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வையிடலாம் எனவும் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட கலெக்டர் (பொறுப்பு) துரை ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிகழ்ச்சியில் சப் -கலெக்டர் கார்மேகம், ஆர்.டி.ஒ. தனலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரவிக்குமார், மாநகராட்சி துணை கமிஷனர் காந்தி மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. சார்பில் கார்த்திக் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. சார்பில் வக்கீல் ராஜேந்திரன், அருள், சோமு, மூஷா இந்திய கம்யூனிஸ்டு தங்கவேலு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ராமமூர்த்தி, காங்கிரஸ் சார்பில் கார்த்திக் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்திக் எம்.எல்.ஏ. கூறும் போது, கோவை மாநகராட்சி பகுதிகளில் குளக்கரை, நீர் நிலை பகுதிகளில் வசித்து வந்தவர்களுக்கு வெள்ளலூர், கீரணத்தம் பகுதிகளில் வீடு ஒதுக்கப்பட்டு அவர்கள் அங்கு குடியமர்த்தப்பட்டு உள்ளனர்.
ஆனால் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் பழைய இடத்தில் தான் உள்ளது. இதனை புதிய இடத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அ.தி.மு.க. சார்பில் பங்கேற்ற ராஜேந்திரன் கூறும் போது, தேர்தல் அறிவிப்பு வெளியாகும் வரை புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும். அதற்கான படிவம் வழங்க வேண்டும் என்றார். #FinalVotersList
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் இன்று வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 ஆகும்.
இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 92 லட்சத்து, 56 ஆயிரத்து 960 ஆகும். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 98 லட்சத்து 60 ஆயிரத்து 367. மூன்றாம் பாலினத்தவர்கள் 5,472 பேர்.
திருப்பரங்குன்றத்தில் இளம் வாக்காளர்கள் அதிகம். இங்கு 7,697 இளைய வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 4,189, பெண்கள் 3,507).
தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதி சோழிங்கநல்லூர் ஆகும். இங்கு மொத்தம் 6,18,695 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3,11,102, பெண்கள் 3,07,518, மூன்றாம் பாலினத்தவர் 75).
குறைந்த வாக்காளர் கொண்ட சட்டமன்ற தொகுதி துறைமுகம் ஆகும். இங்கு மொத்த வாக்காளர்கள் 1,66,518. (ஆண்கள் 83,039, பெண்கள் 79,427, மூன்றாம் பாலினத்தவர் 49).
முதல் முறையாக ஓட்டு போடும் 18 வயது நிரம்பியவர்கள் 4.5 லட்சம் பேர் உள்ளனர்.
வெளிநாடு வாழ் வாக்காளர்கள் 97 பேரின் பெயர்களும் வாக்காளர் பட்டியல்களில் சேர்க்கப்பட்டுள்ளன. தேர்தலின் போது மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படும்.
வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டில் உள்ளது. 1.1.2019 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால் வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட தொடர்பு மையங்களை 1950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இங்கு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம்.
தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 180042521950 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணுடன் தொடர்பு மையம் இயங்கி வருகின்றது.
பாராளுமன்ற தேர்தல் நடத்த தயார் நிலையில் உள்ளோம். தமிழ்நாட்டில் இதுவரை ஒரே கட்டமாகத்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வந்துள்ளன. அதேபோல் தான் இந்த ஆண்டும் நடைபெற வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே மத்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பாக எங்களை அழைத்து ஆலோசனை நடத்தி உள்ளது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர் பட்டியல்கள் தயார் நிலையில் உள்ளன.
பாராளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை விரைவில் கூட்டி ஆலோசனை நடத்தப்படும்.
தமிழ்நாட்டில் 20 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. ஓசூர் தொகுதி காலி இடம் பற்றி சட்டசபை செயலாளரிடம் இருந்து எங்களுக்கு தகவல் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #SatyabrataSahoo #FinalVotersList
தமிழகம் முழுவதும் இன்று திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் பொன்னையா வெளியிட்டார். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 18 ஆயிரத்து 695 வாக்காளர்கள் உள்ளனர்.
குறைந்தப்பட்சமாக செய்யூர் தொகுதியில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 963 வாக்காளர்கள் உள்ளனர்.
தொகுதி ஆண்கள் பெண்கள் இதர மொத்தம்
சோழிங்கநல்லூர் 311102 307518 75 618695
ஆலந்தூர் 177216 179296 10 356522
ஸ்ரீபெரும்புதூர் (தனி)155959 163451 47 319457
பல்லாவரம் 200225 201420 29 401674
தாம்பரம் 187273 188022 36 375331
செங்கல்பட்டு 191480 197261 41 388782
திருப்போரூர் 130726 134417 23 265166
செய்யூர் 105942 107994 27 213963
மதுராந்தகம் 106872 109397 41 216310
உத்திரமேரூர் 118826 125857 19 244702
காஞ்சிபுரம் 140993 149390 12 290395
மொத்தம் 1826614 1864023 360 3690997
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க 1.1.2019 தகுதியேற் படுத்தும் நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் முதலியவற்றுக்கான படிவங்கள் 1.9.2018 முதல் 31.10.2018 வரை பெறப்பட்டன.
முன்பு அறிவித்த, நீட்டித்த கால அட்டவணையின்படி, இறுதி வாக்காளர் பட்டியல்கள் 21.1.2019 அன்று வெளியிடப்பட்டிருக்க வேண்டும். பிழைகளற்ற வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சேர்த்தல், நீக்கல் குறித்த தகவல்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளுவதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் 2 கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இதன் தொடர் நடவடிக்கையாக வாக்காளர் பட்டியல்களில் காணப்படும் தவறுகள், ஒன்று போலுள்ள பதிவுகள் ஆகியவற்றைக் கண்டறிந்து உரிய களவிசாரணை மேற்கொண்டு இரட்டைப்பதிவுகளை நீக்கி, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இ.ஆர்.ஓ. நெட் மென்பொருள் மூலம் அச்சிடும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தப் பணிகளுக்கு மேலும் சிறிது கால அவகாசம் தேவைப்படுவதால், இறுதி வாக்காளர் பட்டியல்களை வருகிற 31-ந் தேதி வெளியிட இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் வருகிற 31-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படும்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் வீரராகவராவ், தெரிவித்துள்ளார்.
1.1.19-ஐ தகுதிபெறும் தேதியாக கொண்டு புதுவையில் உள்ள சட்டசபை தொகுதிகளில் புகைப்பட வாக்காளர் பட்டியல் சுருக்கு முறை திருத்த பணிகள் நடந்தது.
இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 4-ந்தேதி வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. பல்வேறு படிவங்களை சேர்த்தல், நீக்கல், இடம்பெயர்தல் ஆகியவற்றை ஆய்வு செய்து இறுதி செய்வதற்கான காலக்கெடுவை இந்திய தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.
மேலும் இறுதி வாக்காளர் பட்டியலை ஜனவரி 21-ந்தேதி வெளியிட ஒப்புதலும் அளித்துள்ளது. இதன்படி வருகிற 21-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு 27-ந்தேதி வரை அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் வாக்காளர் பதிவு அதிகாரிகள், உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள், அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். தேர்தல்துறையின் இணைய தளத்திலும் இதை பொது மக்கள் பார்வையிடலாம்.
இத்தகவலை புதுவை தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு தெரிவித்துள்ளார். #VotersList
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்