என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "fingerprint"
- வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முதியோர்கள் வங்கிக்கு சென்று சலான் நிரப்பி எடுப்பது சிரமம்.
- புதுச்சேரியைச் சேர்ந்த 62 நபர்களின் வங்கி கணக்கில் இருந்து இந்த கருவி மூலம் பணம் திருடி உள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் முதியோர் உதவித்தொகை, விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு உதவித்தொகைகள் வங்கிகள் மூலம் வழங்கப் படுகிறது.
வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முதியோர்கள் வங்கிக்கு சென்று சலான் நிரப்பி எடுப்பது சிரமம்.
இதனால் வங்கிகளில் ஆதார் செயல்படுத்தப்பட்ட பணம் எடுக்கும் முறை உள்ளது. இந்த முறையில் பணம் எடுக்க ஏ.டி. எம்., கார்டு, வங்கி புத்தகம், ஆதார் எண், ஓ.டி.பி. தேவையில்லை. சிறிய ரேடியோ போன்ற வடிவில் கருவி இருக்கும்.
இந்த கருவியில் கைரேகையை பதிவு செய்தால், அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம்.
கிராமப்புறங்களில் இன்றும் இந்த முறையில் முதியோர், விதவை உள்ளிட்டோருக்கு வங்கியில் இருந்து பணம் எடுத்து தரப்படுகிறது.
தற்போது இணைய வழி மோசடி கும்பல் கடந்த 4 நாட்களில், புதுச்சேரியைச் சேர்ந்த 62 நபர்களின் வங்கி கணக்கில் இருந்து இந்த கருவி மூலம் பணம் திருடி உள்ளனர்.
பொதுமக்கள் சிம்கார்டு வாங்கும் போது ஆதார் கார்டை புதுப்பிக்கும் போது, சொத்து வாங்க, விற்கும்போது பத்திர பதிவு அலுவலகத்தில் கைரேகை பதிவுகளை பயன்படுத்துவர். அந்த கைரேகை பதிவுகளை, அதே போன்ற கைரேகையை சிலிக்கான் பதிவு மூலம் பிரதி எடுத்து, ஒ.டி.பி., இன்றி வங்கி கணக்கில் இருந்து மோசடி கும்பல் பணத்தை எடுக்கின்றனர்.
இந்த முறையில் பணம் எடுக்கும் மோசடியை தடுக்கும் முறையை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
- வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக ரூ.9 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.
- கைரேகை ஏதும் பெறப்படவில்லை. ஆனால், கணக்கில் இருந்த பணம் எடுக்கப்பட்டுள்ளது
கடலூர்:
தமிழகத்தில் பிரதம மந்திரி தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கழிவறை கட்டும் பணி நடந்துவருகிறது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக ரூ.9 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. அதன்படி கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் கீழ்மாம்பட்டு ஊராட்சியில் 19 பேர் கழி வறை கட்டியுள்ளனர். இதில் ரத்தினாம்பாள், ஜெக தாம்பாள், கலியமூர்த்தி ஆகிய 3 பேருக்கு மானியத் தொகை வழங்கப்பட்டது. பல்லவன் கிராமப்புற வங்கியில் இருந்த பயனாளி களின் வங்கி கணக்கில் மானியத் தொகை செலுத் தப்பட்டது. இதில் ஜெகதாம் பாள், கலியமூர்த்தி ஆகியோ ரின் வீட்டிற்கு சென்ற வங்கி ஊழியர்கள், பயோ மெட்ரிக் எந்திரத்தில் கைரேகை பெற்றுள்ளனர். சிறிது நேரத்தில் வந்து பணம் தருவதாக கூறிச் சென்றுள்ளனர். பின்னர் யாரும் வந்து தரவில்லை.
அதேசமயம் ரத்தினாம் பாளிடம் கைரேகை ஏதும் பெறப்படவில்லை. ஆனால், கணக்கில் இருந்த பணம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 3 பேரும் பல்லவன் கிராம வங்கிக்கு சென்று, நடந்த சம்பவத்தை மேனேஜரிடம் கூறியுள்ளனர். இது தொடர் பாக விசாரிப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், இது தொடர் பாக பாதிக்கப்பட்ட நபர்கள் கடலூர் கலெக்ட ருக்கும் புகார் மனு அனுப்பி யுள்ளனர். இந்த சம்பவம் பண்ருட்டி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களி டையே காட்டுத் தீ போல பரவியது. இதனால் தங்கள் வங்கி கணக்கில் பணம் உள்ளதா என்பதை உறுதி செய்ய பொதுமக்கள் வங்கிக்கு செல்கின்றனர். இதனால் பண்ருட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- அவினாசி, தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில், மடத்துக்குளம், பல்லடம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.
- முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கைரேகை பதிவு ஆகாமல் ரேஷன் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் கைரேகை பயன்படுத்தி ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கைரேகை பதிவு ஆகாமல் ரேஷன் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் நன்மைக்காக நாளை 9-நதேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆதார் பதிவில் கைரேகை புதுப்பித்தல் சிறப்பு முகாம் தாசில்தார் அலுவலகங்களில் நடக்கிறது.
அதன்படி அவினாசி தாலுகாவில் தாசில்தார் அலுவலகத்திலும், தாராபுரம் தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும், காங்கயம் தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், வெள்ளகோவில் நகராட்சி அலுவலகம், மடத்துக்குளம் தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், பல்லடம் தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.
திருப்பூர் வடக்கு தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், தொட்டிப்பாளையம் மண்டல அலுவலகம், திருப்பூர் தெற்கு தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், கலெக்டர் அலுவலகம், நல்லூர் மண்டல அலுவலகம், மாநகராட்சி மைய அலுவலகம், உடுமலை தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், உடுமலை நகராட்சி அலுவலகம், ஊத்துக்குளி தாலுகாவில் தாசில்தார் அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் பங்கேற்று ஆதார் கார்டில் கைரேகை பதிவை புதுப்பித்து, சிரமம் இல்லாமல் பொருட்களை வாங்கி பயன்பெறலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி பாராளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.
இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்ய தர்மபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆலோசனைப்படி தர்மபுரி மாவட்ட ஓட்டல்களில் நாளை வாக்களித்து விட்டு ஓட்டல்களுக்கு செல்பவர்கள் வாக்களித்த கைவிரல் மையை காண்பித்தால் சாப்பிட்ட உணவுக்கான கட்டணதொகை மற்றும் பார்சல் கட்டணதொகையில் 10 சதவீத தள்ளுபடி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் மத்தியில் வாக்குப்பதிவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சியை மேற்கொள்வதாக தர்மபுரி மாவட்ட ஓட்டல் சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் சரியான முறையில் பொதுமக்களுக்கு சென்றடைய பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
தற்போது 1 கோடியே 95 லட்சம் ரேஷன் கார்டுகளும் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டு உள்ளதால் பெருமளவு முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் ஸ்மார்ட் கார்டை அடுத்தவர்களிடம் கொடுத்து ரேஷன் பொருட்களை சிலர் வாங்கி வருகின்றனர்.
வசதி படைத்தவர்கள் தங்கள் வீடுகளில் வேலை பார்ப்பவர்களிடம் கார்டை கொடுத்து பொருட்களை வாங்கிக் கொள்ள அனுமதிக்கின்றனர். இதனால் அரசின் மானியம் வீணாகிறது.
இதை தடுப்பதற்காக ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டுடன் கைவிரல் ரேகையையும் பதிவு செய்தால்தான் பொருட்கள் வாங்க முடியும் என்ற புதிய நடைமுறையை அரசு நடைமுறைப்படுத்த உள்ளது.
இதுகுறித்து உணவு வழங்கல் துறை கமிஷனர் மதுமதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
இதன் அடுத்த கட்டமாக குடும்ப உறுப்பினர்கள் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகையை பதிவு செய்தால்தான் பொருட்கள் வாங்க முடியும் என்ற நிலையை கொண்டு வர உள்ளோம்.
ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டை பதிவு செய்யும் மிஷினுடன் கைவிரல் ரேகையை பதிவு செய்வதற்கான மிஷினும் கூடுதலாக வைக்கப்பட உள்ளது.
அதில் குடும்ப தலைவர் அல்லது கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர் கைரேகையை பதிவு செய்தால் தான் பொருட்கள் கிடைக்கும். ஒவ்வொரு முறை பொருட்கள் வாங்கும் போதும் கைரேகை வைக்க வேண்டும்.
இந்த நடைமுறை இன்னும் 3 மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். இதற்காக கைவிரல் ரேகையை பதிவு செய்யும் மிஷின் ரேஷன் கடைகளில் வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #RationCard #SmartCard
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்