search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fire Extinguisher"

    • புகையை கண்ட சக பயணிகள் ரெயிலில் தீ பிடித்ததாக நினைத்து அதிர்ச்சி அடைந்தனர்.
    • ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    உத்தரபிரதேச மாநிலம் பில்பூர் அருகே ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியதை அடுத்து, பீதியில் ஓடும் ரெயிலில் இருந்து பயணிகள் வெளியே குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மொராதாபாத் கோட்டத்தின் கீழ் வரும் பில்பூர் நிலையத்திற்கு அருகே ஹவுரா- அமிர்தசரஸ் மெயிலின் பொதுப் பெட்டியில் இன்று சிலர் தீயை அணைக்கும் கருவியை இயக்கியுள்ளனர்.

    இதனால், அந்த பெட்டி முழுவதும் புகை கிளம்பியுள்ளது. புகையை கண்ட சக பயணிகள் ரெயிலில் தீ பிடித்ததாக நினைத்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து, பயணிகள் சிலர் பீதியில் ஓடும் ரெயிலில் இருந்து குதித்துள்ளனர். இதில், 12 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக வடக்கு ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

    பயணிகள் அவசரகால நிறுத்தத்திற்கான சங்கிலியை இழுத்துவிட்டு குதித்ததால், ரெயில் மெதுவாக செல்லும்போது பயணிகள் பீதியில் ரெயிலில் இருந்து குதித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×