என் மலர்
நீங்கள் தேடியது "Fire in a"
- திடீரென வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் தீப்பிடிக்க தொடங்கியது.
- தீயினால் ஏற்பட்ட புகையால் குழந்தைகள் முதியவர்கள் அவதி அடைந்தனர்.
ஈரோடு:
ஈரோடு வெண்டி பாளையத்தில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு மக்கும், மக்காத குப்பை மலைபோல் பல டன் அளவுக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் திடீரென வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் தீப்பிடிக்க தொடங்கியது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவியது.
தீயால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். தீயினால் ஏற்பட்ட புகையால் குழந்தைகள் முதியவர்கள் அவதி அடைந்தனர்.
இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீ வேகமாக இருந்ததால் தீயை அணைப்பதில் பெரும் சவால் இருந்தது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். யாரோ வீசி சென்ற பீடியால் தீ விபத்து ஏற்பட்டு இருக்க லாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.