என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fireless cooking"

    • மாணவர்கள் கலந்து கொண்டு கழிவு பொருட்களை வைத்து கலை நயத்துடன் பலவித உபயோகமுள்ள பொருட்கள் செய்தனர்.
    • விதவிதமான சத்தான பானங்கள் மற்றும் பலகாரங்கள் செய்தும் அசத்தினர்

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கவின் கலை மன்றம் மற்றும் நாட்டுப்புறக் கலை மன்றம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண் 44, 48 ஆகியவை இணைந்து கழிவுகளில் இருந்து கலை மற்றும் நெருப்பில்லா சமையல் போட்டிகள் நடந்தது. இப்போட்டியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கழிவு பொருட்களை வைத்து கலை நயத்துடன் பலவித உபயோகமுள்ள பொருட்கள் செய்தனர். மேலும் நெருப்பை உபயோகிக்காமல் விதவிதமான சத்தான பானங்கள் மற்றும் பலகாரங்கள் செய்தும் அசத்தினர். சிறப்பாக செய்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இப்போட்டிகளை கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், முதல்வர் மகேந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். நடுவர்களாக விலங்கியல் துறை தலைவர் சுந்தரவடிவேலு, கணிணிப்பொறியியல் துறை தலைவர் வேலாயுதம், ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி, கணிதவியல் துறை தலைவர் பசுங்கிளி பாண்டியன், நூலக கண்காணிப்பாளர் முத்துகிருஷ்ணன், பொருளியல் துறை பேராசிரியர் முத்துக்குமார், வணிக நிர்வாகவியல் துறை தலைவர் அந்தோணி சகாய சித்ரா, விலங்கியல் துறை பேராசிரியை வசுமதி, ஆரோக்கிய மேரி பெர்ணான்டோ மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியை ஷோலா பெர்ணான்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கவின் கலை மன்றம், நாட்டு நலப்பணித் திட்டம் அணி 48-ன் திட்ட அலுவலர் கவிதா, நாட்டுப்புறக் கலை மன்றம், நாட்டு நலப்பணித் திட்டம் அணி 44-ன் திட்ட அலுவலர் சத்தியலெட்சுமி மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்

    ×