search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fireworks factory owner dies"

    வெம்பக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானதில் பட்டாசு ஆலை அதிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி (வயது 47). இவர் நெல்லை மாவட்டம், வரகனூரில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார்.

    கடந்த மாதம் இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு பெண் உள்பட 7 பேர் உடல் கருகி பலியானார்கள். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அய்யாச்சாமியை கைது செய்தனர்.

    சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அய்யாச்சாமி ஜாமீன் பெற்று சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்தார்.

    இந்த நிலையில் அய்யாச்சாமி, வெம்பக்கோட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது பட்டாசு ஆலைக்கு புறப்பட்டார்.

    குகன்பாறை என்ற இடத்தில் சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இதில் அய்யாச்சாமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ஆபத்தான நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அய்யாச்சாமி இன்று காலை பரிதாபமாக இறந்தார். வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×