search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fisherman Family"

    • மீன்பிடி விசைப்படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதில் மலைச்சாமி என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
    • விசைப்படகில் சென்ற இரண்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அழைத்துச் சென்றதாகத் தெரிய வருகிறது.

    இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த ராமநாதபுரம் மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மூக்கையா (வயது 54), முத்துமுனியாண்டி (வயது 57), மலைச்சாமி (வயது 59) மற்றும் ராமச்சந்திரன் (வயது 64) ஆகிய நால்வரும் இன்று (01.08.2024) அதிகாலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில், மீன்பிடி விசைப்படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதில் மலைச்சாமி (வயது 59) என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும், அந்த விசைப்படகில் சென்ற இரண்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அழைத்துச் சென்றதாகத் தெரிய வருகிறது. மேலும், மற்றொரு மீனவர் தேடப்பட்டு வருகிறார். தமிழ்நாடு அரசு தொடர்ந்து பலமுறை கடிதம் மூலமாகவும், நேரிலும் ஒன்றிய அரசை வலியுறுத்தியும் உரிய தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும் இதுபோன்ற விலைமதிப்பில்லா உயிரிழப்புகளும் நேர்கின்றது.

    இச்சம்பவத்தை மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு தக்க முறையில் எடுத்துச் செல்லும். இச்சம்பவத்தில் உயிரிழந்த மலைச்சாமி அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவருடைய குடும்பத்தினருக்கு பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கடலில் காணாமல் போன மீனவர் குடும்பத்திற்கு உதவித்தொகையை கலெக்டர் வழங்கினார்.
    • தமிழ்நாடு மீனவர் நலத்துறை ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலு வலக கூட்டரங்கில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை யின் சார்பில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடை பெற்றது.

    இதில் மாவட்ட கலெக்டர் மீனவர்களிடம் கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெற்றுக் கொண்டு கடந்த மாதம் மீனவர்களிடம் கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட மனுக்களு க்கான தீர்வுகளை துறை அலுவலர்கள் மூலமாக தெரிவித்தார்.

    பின்னர் அவர் பேசிய தாவது:-

    மீனவர்கள் தொழில் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றன. ரோச்மா நகர் மீனவர்கள் கிராமத்தில் கடலில் கல் நிரப்பும் பணி ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கான பணி விரைவில் நிறைவடையும். மீனவர்களுக்கான மீன்பிடி அடையாள அட்டை வழங்கு வதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க இனி அந்தந்த பகுதி உதவி இயக்கு னர்கள் மூலம் வழங்கிட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதே போல் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை புதிய பயனாளிகளுக்கு அவர்க ளுடைய வங்கி கணக்கில் தமிழ்நாடு மீனவர் நலத்துறை ஆணையத்தின் மூலம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மகாத்மா என்ற கார்த்திக் என்ற மீனவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மீன்பிடிக்க சென்றபோது காணாமல் போய்விட்டார். அவரது தாயார் கலைய ரசிக்கு தமிழ்நாடு மீனவர் நல வாரியம் மூலம் வழங்க ப்பட்ட ரூ.1 லட்சத்திற்கான நிவாரண உதவித் தொகைக் கான ஆணை யினை வழங்கி னார்.

    இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மீன்வளத் துறை துணை இயக்குநர் காத்தவராயன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×