search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fishermen Rescue"

    • மீனவர்கள் கடலில் தவிப்பதை பார்த்த கடற்படை வீரர்கள் 3 படகுகளுடன் 36 மீனவர்களையும் மீட்டனர்.
    • மீனவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கிய கடற்படையினர் அவர்களை சென்னை துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.

    சென்னை:

    நாகை மாவட்டத்தை சேர்ந்த 36 மீனவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் மீன் பிடிக்க சென்றனர். தமிழக கடற்கரையில் இருந்து 130 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன் பிடித்தபோது வானிலை மாற்றம் காரணமாக அவர்களால் கரை திரும்ப முடியவில்லை.

    மேலும் அவர்களது படகில் என்ஜின் கோளாறும் ஏற்பட்டதால் நடுக்கடலிலேயே அவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த வழியாக இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ்.கஞ்சர் ரோந்து சென்றது. மீனவர்கள் கடலில் தவிப்பதை பார்த்த கடற்படை வீரர்கள் 3 படகுகளுடன் 36 மீனவர்களையும் மீட்டனர். மீனவர்கள் 36 பேரும் 2 நாட்களாக கடலில் உணவு, தண்ணீர் கிடைக்காமல் தவித்தனர். அவர்களுக்கு போதிய உணவு, தண்ணீர் வழங்கிய கடற்படையினர் அவர்களை சென்னை துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை நாகை மாவட்டத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இதுபற்றி கடற்படை செய்தித்தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில், மீனவர்கள் 3 மீன்பிடி கப்பல்களில் இருந்தனர். சவாலான சூழ்நிலையில் 30 மணி நேரத்திற்கும் மேலாக தவித்தனர். 2 நாட்களுக்கும் மேலாக கடலில் தவித்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்கள் என்றார்.

    • கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களது விசைப்படகு, திடீரென பழுதாகி கடலில் மூழ்கத் தொடங்கியது.
    • சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான மீன்பிடி விசைப்படகு மற்றும் 2 லட்சம் மதிப்பிலான மீன்கள் கடலில் மூழ்கியது.

    காரைக்கால்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பவருக்கு சொந்த மான மீன்பிடி விசைப்படகில், கடந்த 27-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த ரத்தினவேலு, அறிவரசன், சுரேஷ், விஜய் உள்ளிட்ட 7 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை, கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களது விசைப்படகு, திடீரென பழுதாகி கடலில் மூழ்கத் தொடங்கியது. இதனால் பதற்றம் அடைந்த மீனவர்கள் அருகில் இருந்த காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வரும் வரை படகில் இருந்த கேன்களை பிடித்துக்கொண்டு நடுக்கடலில் 7 மீனவர்களும் தத்தளித்தனர்.

    பின்னர் படகுகளில் விரைந்து வந்த, காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், கேன்கள் உதவியோடு நடுக்கடலில் தத்தரித்த 7 மீனவர்களையும் 2 மணி நேரம் போராடி மீட்டனர். பின்னர் அவர்களை காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். ஆனால் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான மீன்பிடி விசைப்படகு மற்றும் 2 லட்சம் மதிப்பிலான மீன்கள் கடலில் மூழ்கியது.

    காரைக்கால் அழைத்து வரப்பட்ட கீச்சாங்குப்பம் மீனவர்களை நாகை மீன்வளத்துறை அதிகாரிகள், கீச்சாங்குப்பம் மீனவ பஞ்சாயத்தார்கள், த.மு.க. மாநில மீனவர் அணி துணை செயலாளர் மனோகரன் ஆகியோர் வரவேற்று நாகப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக 7 மீனவர்களையும் மீட்ட காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவர்களை அவர்கள் பாராட்டினர்.

    • படகில் சென்ற ஆறுமுகம், மைக்கேல் சந்தோஷ், கண்ணன் ஆகிய 4 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர்.
    • மீனவர்கள் அனைவரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் அடுத்த அக்கரைப்பேட்டையில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து தடைக்காலம் முடிவு பெற்றதால் ஏராளமான மீனவர்கள் நேற்று நள்ளிரவுகடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

    இதில் கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த அஞ்சப்பனுக்கு என்பவரும் சொந்தமான படகில் 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

    நாகையில் இருந்து 5 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகில் கடல்நீர் உட்புகுந்து கடலில் படகு மூழ்கியது.

    இதனால் படகில் சென்ற ஆறுமுகம், மைக்கேல் சந்தோஷ், கண்ணன் ஆகிய 4 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். இதனை தொடர்ந்து மற்றொரு படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் அவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் நாகை மாவட்டம் நாகராஜன் என்பவரும் சொந்தமான படகும் கடலில் மீன் பிடிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியது. படகில் சென்ற ரெத்தினம், குஞ்சாலு, சிவக்குமார் ஆகிய 3 பேரும் சக மீனவர்களால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்குச்சென்ற முதல் நாளே இரண்டு படகுகள் கவிழ்ந்து கடலில் தத்தளித்த 7 மீனவர்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காரைக்காலை அடுத்த காரைக்கால் மேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் வழக்கம்போல் பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
    • கடைசியாக மீனவர்கள் 7 பேரும் கோடியக்கரை அருகே மீன் பிடித்து கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு மீனவர்களின் இருப்பிடம் மற்றும் செல்போன் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்த போது, படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த காரைக்கால் மேடு மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர்.காரைக்காலை அடுத்த காரைக்கால் மேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது40). இவருக்கு சொந்தமான பைபர் படகில், கடந்த 18ந் தேதி கிருஷ்ணமூர்த்தி, அதே கிராமத்தை சேர்ந்த பாலாஜி (36), முருகானந்தம்(40), வேலுச்சாமி (55), செந்தில் (38) மற்றும் கீழக்கசாக்குடி மேட்டை சேர்ந்த ராமசாமி (52), ராஜ்குமார் (30) ஆகிய ஏழு மீனவர்கள் வழக்கம்போல், காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீனவர்கள் அனைவரும் மீன்பிடித்து விட்டு 21-ந்தேதி மாலைக்குள் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் நேற்று முன்தினம் மாலை 6 மணிவரை மீனவர்கள் கரை திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், கடைசியாக மீனவர்கள் 7 பேரும் கோடியக்கரை அருகே மீன் பிடித்து கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு மீனவர்களின் இருப்பிடம் மற்றும் செல்போன் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காரைக்கால் மேடு மீனவ பஞ்சாயத்தார்கள் காரைக்கால் கடலோர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து இந்திய கடலோர காவல் படை சென்னை தலைமையகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்திய கடலோர காவல் படையினர் மாயமான ஏழு மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    மேலும் காரைக்கால் மேடு சக மீனவர்கள் ஐந்துக்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் பைபர் படகுகளில் மாயமான மீனவர்கள் மற்றும் மீனவர்களின் படகுகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று (23 -8-22) காலை கோடியக்கரை அருகே மாயமான ஏழு மீனவர்களின் பைபர் படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததை, கடலில் தேடி சென்ற சக மீனவர்கள் பார்த்து, உடனடியாக ஏழு மீனவர்களையும் மீட்டு தங்கள் விசைப்படகுகளில் ஏற்றினர். தொடர்ந்து இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் இருந்த அவர்களுக்கு, முதல் கட்டமாக தண்ணீர் மற்றும் உணவு வழங்கினர். இவர்களுக்கு நாகை மீனவர்கள் சிலரும் உதவி செய்துள்ளனர். மீட்கப்பட்ட மீனவர்கள் காரைக்காலுக்கு பத்திரமாக நேற்று இரவு திரும்பினர்.

    ×