என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "flag poles"
- சிலர் கொடிக்கம்பங்களை பிடுங்கி எறிந்தும், கீழே சாய்த்தும் சேதப்படுத்தியுள்ளனர்.
- அரசியல் கட்சி நிர்வாகிகள் பல்லடம் போலீசில் புகார் அளித்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி காலனி பகுதியில், அரசியல் கட்சி கொடி கம்பங்கள் உள்ளது. இதனை சம்பவத்தன்று சிலர் கொடிக்கம்பங்களை பிடுங்கி எறிந்தும், கீழே சாய்த்தும் சேதப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து கொடிக்கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க பணிக்கம்பட்டி செயலாளர் ஈஸ்வரன், அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ், பா.ஜ.க. மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ் குமார், உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் பல்லடம் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சவுமியா,உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.விசாரணையில் கடந்த தீபாவளியன்று இரவு பணிக்கம்பட்டியை சேர்ந்த மதன் (21),லோகநாதன் (20) ,சூர்யா (21) ,ராஜேஷ் (22), சஞ்சீவ் (19) ஆகிய 5 பேரும் குடிபோதையில் அங்கிருந்த அரசியல் கட்சி கொடி கம்பங்களின் மீது ஏறி சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த 5 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- சிலர் கொடிக்கம்பங்களை பிடுங்கி எறிந்தும், கீழே சாய்த்தும் சேதப்படுத்தி யுள்ளனர்.
- பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி காலனி பகுதியில், அரசியல் கட்சி கொடி கம்பங்கள் உள்ளது. இதனை சம்பவத்தன்று சிலர் கொடிக்கம்பங்களை பிடுங்கி எறிந்தும், கீழே சாய்த்தும் சேதப்படுத்தி யுள்ளனர்.
இதையடுத்து கொடிக்கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ் தலைமையில் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.இதேபோல பா.ஜ.க. சார்பில் மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் நிர்வாகிகள் புகார் அளித்தனர். இதேபோல பணிக்கம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தலைவர் ரோஜா மணி ஈஸ்வரன் சார்பில் கொடிக்கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
- திருவிழா நடைபெற்ற போது முன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- கிருஷ்ணமூர்த்தி, முருகன், சிவராமன் ஆகியோர் பாஸ்கரை தாக்கியதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே சூ.பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டு. இவரது மகன் பாஸ்கர் (வயது 35). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (45) என்பவருக்கும் கடந்த ஆண்டு மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்ற போது முன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்றுபாஸ்கர் தனதுஅண்ணன் சக்கரவர்த்தியுடன் சூ. பள்ளிப்பட்டியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது சிலர் தே.மு.தி.க. கொடி கம்பம் அமைக்கப்பட்ட சிமெண்ட் கட்டையை உடைத்ததாக கூறப்படுகிறது.
அப்போது பாஸ்கர் ஏன் உடைக்கிறீர்கள்? என கேட்டதற்கு அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, முருகன், சிவராமன் ஆகியோர் பாஸ்கரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாஸ்கர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதே போல் முருகன் என்பவர் கொடுத்துள்ள புகாரில் பாஸ்கர் மற்றும் இளங்கோவன் ஆகியோர் தி.மு.க. கொடி கம்பம் அமைந்துள்ள சிமெண்ட் கட்டையை இடித்து சேதப்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். இரு பிரிவினரும் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வள்ளியூர் பகுதிகளில் கோட்டையடி, சமத்துவபுரம் , அண்ணா நகர்உள்ளிட்ட கிராமங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கொடி கம்பங்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வைக்கப்பட்டுள்ளது.
- சம்பவ இடத்திற்கு வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஸ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
வள்ளியூர் பகுதிகளில் கோட்டையடி, சமத்துவபுரம் , அண்ணா நகர்உள்ளிட்ட கிராமங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கொடி கம்பங்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முறையாக அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து 4 இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தை வள்ளியூர் போலீசார் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர் தயாசங்கர் தலைமையில் வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுடனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஸ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்