என் மலர்
நீங்கள் தேடியது "Flat"
- அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வேண்டி எராளமான பொதுமக்கள் மனு செய்து வீடுகள் பெற்றுள்ளனர்.
- வீடு கிடைக்கப்பெறாத மக்களின் மனுக்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., க.செல்வராஜ் திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாநகர பகுதிகளில் அமைந்துள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டுவாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வேண்டி எராளமான பொதுமக்கள்மனு செய்து வீடுகள் பெற்றுள்ளனர். அரசுக்கும் பொது மக்களிடையே நல்லவரவேற்பு கிடைத்துள்ளது.
வீடு கிடைக்கப்பெறாத மக்களின் மனுக்கள்காத்திருப்போர் பட்டியலில் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில்என்னிடம் வரப்பெற்ற மனுக்களை தங்களுக்கு பரிந்துரைத்தேன். அதற்குதாங்களும் ஒப்புதல் அளித்து குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்துள்ளீர்கள். அதில்ஒரு சிலர் உள்வாடகை மற்றும் போக்கியத்துக்கு விட்டு தகுதியானவர்களுக்குவீடு கிடைக்காத நிலையை ஏற்படுத்தி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகின்றனர் என்று தெரிய வருகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் அவர்களை கண்டறிந்து அப்புறப்படுத்தி காத்திருப்போர் பட்டியலில் உள்ள தகுதியான பயனாளிகளுக்கு அந்த குடியிருப்பு கிடைத்திட தாங்கள் நடவடிக்கை எடுத்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
- சாகர் மகாராஷ்டிர அரசில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
- சக பணியாளருடன் சேர்ந்து ரூ.21 கோடிக்கு அரசு நிதியை இவர் மோசடி செய்துள்ளார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்ரபதி சம்பாஜி நகரில் விளையாட்டு வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் அரசின் சார்பில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றுபவர் ஹர்ஷ் குமார் ஷீர்சாகர். இவர் அந்த அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணிபுரிந்துள்ளார். அவருக்கு மாதம் 13,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
திடீரென ஹர்ஷ் குமார் பி.எம்.டபிள்யூ. காரில் வலம் வர தொடங்கினார். அவர் தனது காதலிக்கு 4 படுக்கை அறை கொண்ட வீடு ஒன்றையும் பரிசாக அளித்திருக்கிறார். இதைப் பார்த்த சக பணியாளர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இவ்வளவு பணம் திடீரென இவருக்கு எப்படி வந்தது என தெரியாமல் திகைத்தனர்.
பி.எம்.டபிள்யூ. கார், பி.எம்.டபிள்யூ. பைக், விமான நிலையத்திற்கு எதிரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 4 படுக்கை அறை கொண்ட வீடு, வைரங்கள் பதிக்கப்பட்ட கண்ணாடி என சாகர் வசதியை பெருக்கிக் கொண்டார்.
சாகருடன் கூட்டாக சேர்ந்து கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்ட சக பணியாளரின் கணவர் ரூ.35 லட்சம் மதிப்பிலான சொகுசு ரக கார் ஒன்றை சமீபத்தில் வாங்கினார். இதனால் சந்தேகம் அடைந்த சக பணியாளர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், சக பணியாளருடன் சேர்ந்து ரூ.21 கோடி அளவுக்கு அரசு நிதியை மோசடி செய்தது, அதில் கிடைத்த தொகையை வைத்து சாகர் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்தது தெரிய வந்தது.
விளையாட்டு வளாகம் பெயரில் வங்கிக்கணக்கை தொடங்கி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, துணை இயக்குநரின் போலி கையெழுத்துகளைப் போட்டு காசோலைகளைத் தயாரித்து, மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.