என் மலர்
நீங்கள் தேடியது "flight cancellation"
- இரவு 8 மணிக்கு புறப்படவிருந்த லண்டன்-அமிர்தசரஸ் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- அவற்றில் 66 விமானங்கள் போயிங் 787 ரக விமானங்கள் ஆகும்.
இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் ஏர் இந்தியா விமான நிறுவனம் 5 விமானங்களை ரத்து செய்தது.
ஏர் இந்தியாவின் AI143 டெல்லி-பாரிஸ் விமானம் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக ரத்து செய்யப்பட்டது. விமானப் பயணத்திற்கு முந்தைய ஆய்வின் போது சில சிக்கல்கள் கண்டறியப்பட்டன, அவை பின்னர் தீர்க்கப்பட்டன. இருப்பினும், பாரிஸ் விமான நிலையத்தில் இரவு நேர கட்டுப்பாடுகள் காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டது.
முன்னதாக, அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குப் புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம் AI 159 ரத்து செய்யப்பட்டது. வான்வெளி கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை சோதனைகள் காரணமாக விமானம் கிடைக்காததால் விமானம் ரத்து செய்யப்பட்டது.
அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு இது முதல் சேவையாகும். விமானத்தில் எந்த தொழில்நுட்பக் கோளாறும் இல்லை என்று ஏர் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. கூடுதலாக, பாரிஸிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியாவின் AI 142 விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்கு புறப்படவிருந்த லண்டன்-அமிர்தசரஸ் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கொல்கத்தா வழியாக மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இன்று காலை, கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது, இடது எஞ்சினில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் பயணிகள் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டு விமானம் பரிசோதிக்கப்பட்டது.
ஏர் இந்தியா விமானம் AI 180 சான் பிரான்சிஸ்கோவிலிருந்து ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டு, சரியான நேரத்தில் கொல்கத்தாவை வந்தடைந்தது. நள்ளிரவு 12.45 மணிக்கு கொல்கத்தாவில் தரையிறங்கிய பிறகு வழக்கமான சோதனையின் போது தொழில்நுட்பக் கோளாறு இருப்பதைக் கண்டறிந்த பின்னர், முழுமையான ஆய்வு நடத்த விமான நிறுவனம் முடிவு செய்தது. பயணிகள் நான்கு மணி நேரம் கழித்து விமானத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
விமானத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கேப்டன் பயணிகளிடம் தெரிவித்தார். பயணிகளை மும்பைக்கு அழைத்துச் செல்ல ஏர் இந்தியா சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் தரவுகளின்படி, ஜூன் 12 முதல் 17 வரையில் (6 நாட்களில்) மொத்தம் 83 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அவற்றில் 66 விமானங்கள் போயிங் 787 ரக விமானங்கள் ஆகும்.
- விமான பயணிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டியவை குறித்த வழிகாட்டு.
- மாற்று விமானத்திற்காக காத்திருக்கும் போது பயணிகளுக்கு உணவு மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
கடும் குளிர் காரணமாக டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் குறிப்பிட்ட விமானங்கள் காலதாமதமாக சென்றன. மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. புத்தாண்டு பண்டிகையையொட்டி ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு செல்ல இருந்தனர். அதனைத்தொடர்ந்து விமானம் ரத்து செய்யப்பட்டதால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நியாயம் வழங்குமாறு விமான நிறுவனங்கள் மற்றும் ஆபரேட்டர்களுக்கு விமான போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி அறிவுறுத்தினார்.
இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறும் போது, "இயற்கை சீற்றம் மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டால் பயணிகள் செலுத்திய பணத்தை உடனடியாக திரும்ப செலுத்துவதை பின்பற்ற வேண்டும்" என கூறினார்.

விமானம் ரத்து செய்யப்பட்டிருந்தாலோ அல்லது கால தாமதம் ஆனாலும், விமான பயணிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டியவை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த டிசம்பர் மாதம் அரசு வெளியிட்டிருந்தது.
அதில், இயற்கை இடர்பாடுகள் அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டால், மாற்று விமானம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது முழு பணத்தை திரும்ப செலுத்துவதோடு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும் மாற்று விமானத்திற்காக காத்திருக்கும் போது பயணிகளுக்கு உணவு மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து விமான போக்குவரத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும்" என வலியுறுத்தினார்.
- பத்து நாட்களுக்கு சுமார் 120 விமானங்கள் ரத்து.
- பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் டெல்லி ஐதராபாத், சீரடி, கோவா, அந்தமான் உட்பட பல்வேறு நகரங்களுக்கு விமானம் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முதல் வருகிற 10-ந் தேதி வரை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அனைத்து நகரங்களுக்கும் செல்லும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது. இன்று காலை சீரடி, அந்தமான் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ஏற்கனவே முன்புதிவு செய்து இருந்தவர்கள் பயணம் செய்ய வந்தனர். அவர்களை பாதுகாப்பு வீரர்கள் அனுமதிக்கவில்லை. 10-ந் தேதி வரை ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஒரு நாளைக்கு அந்த நிறுவனத்தின் 12 விமானங்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகிறது.
பத்து நாட்களுக்கு சுமார் 120 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட விமான நிர்வாகம், நிர்வாக சீர்திருத்தம் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
- டெல்லி விமான நிலையத்தில் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
- சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி.
மீனம்பாக்கம்:
டெல்லியில் கடந்த 2 நாட்களாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.

டெல்லி விமான நிலையத்தில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சென்னை-டெல்லி இடையே தினமும் இண்டிகோ ஏர்லைன்ஸ் 22 விமானங்கள் இயக்கப்படும். இதில் 2 வருகை மற்றும் 2 புறப்பாடு என 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய 9 விமானங்களும், டெல்லியில் இருந்து சென்னை வரக்கூடிய 9 விமானங்களும் சுமார் 30 நிமிடங்களில் இருந்து 2 மணி நேரம் வரை தாமதமாக சென்று வந்தன.
ஆனால் டெல்லி விமானங்கள் குறித்த விவரங்கள் பயணிகளுக்கு முன் கூட்டியே தெரிவிக்காததால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். சென்னை-டெல்லி இடையே செல்லக்கூடிய மற்ற விமான நிறுவன விமானங்கள் பாதிப்பின்றி இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் தீ விபத்து.
- 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தின் டெர்மினல் 8-ல் உள்ள எஸ்கலேட்டரில் தீப்பிடித்தது. இதனால் பயணிகள் அலறியடித்து ஓடினர்.

உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 9 பேர் காயம் அடைந்தனர். 900-க்கும் மேற்பட்ட பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் 3 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. தீ விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
ஜப்பான் நாட்டை ‘ஜாங்டரி’ (வானம்பாடி) என்று பெயரிடப்பட்டு உள்ள புயல் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நேரத்தில் இது தாக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. இந்த புயல் காரணமாக டோக்கியோவிலும், ஹோன்சு தீவு பகுதியிலும் மிகப் பலத்த மழை பெய்யும். 15 அங்குல அளவுக்கு இந்த மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டோக்கியோவிலும், பிற விமான நிலையங்களில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய 107 விமான சேவைகளை ரத்து செய்து உள்ளதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் கூறுகிறது.
நேற்று இரவு டோக்கியோவில் நடைபெறவிருந்த வாணவேடிக்கை திருவிழா புயல், மழையினால் ஒத்தி போடப்பட்டு உள்ளது.
ஜப்பானுக்கு ஜூலை மாதம், இயற்கை பேரிடர் மாதமாக மாறி விட்டது. ஏற்கனவே கடந்த சில தினங்களாக கடுமையான அனல் காற்று வீசி அங்கு 80-க்கும் மேற்பட்டோர் பலியானதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.
இப்போது இந்த புயல், மழையினால் என்ன சேதம் ஏற்படப்போகிறதோ என ஜப்பான் மக்கள் கவலையில் ஆழ்ந்து உள்ளனர். #JongdariCyclone #Japan #Tamilnews