search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flight service affected"

    • நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
    • விமானத்தில் பயணித்த பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

    டெல்லி:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் நகருக்கு இண்டிகோ விமானம் நேற்று இரவு புறப்பட்டது.

    இந்நிலையில் டெல்லி அருகே நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

    இதையடுத்து, விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசர அவரசமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதேவேளை, விமானத்தில் பயணித்த பயணிகள் எண்ணிக்கை குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

    • டெல்லியில் காற்று மாசின் அளவு 432 ஆக பதிவானது.
    • ரெயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.

    டெல்லியில் காற்று மாசு அளவு தொடர்ந்து அபாயகர நிலையிலேயே உள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி டெல்லியில் காற்று மாசின் அளவு 432 ஆக பதிவானது. இது நேற்றிரவு 11 மணிக்கு பதிவான 452-வை விட குறைவு தான் என்பது ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது.

    காற்று மாசுடன் பனிமூட்டமும் சேர்ந்து கொண்டதால் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை இயக்க முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக 283 விமானங்கள் தாமதமாகி இருக்கின்றன. மேலும் ரெயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.

    பல விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. விமானம் மற்றும் ரெயில் சேவை பாதிப்பு காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துவதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் திடீரென இண்டிகோ விமான சேவை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால், பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தொழில்நுட்ப கோளாறால் விமான நிலையங்களில் Check-in செய்ய தாமதமாவதால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இண்டிகோ இணையதளத்தில் விமான டிக்கெட் முன்பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்தால், பாதிப்பு சரி செய்யப்பட்டு விரைவில் விமான சேவை இயக்கு நிலைக்கு திரும்பும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மேலும், பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துவதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூர் திரும்பிச் சென்றது.
    • இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் சென்னையில் தரை இறங்க முடியாமல், பெங்களூர் திரும்பிச் சென்றது.

    ஆலந்தூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை இடி மின்னல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

    டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 154 பயணிகளுடன் நேற்று நள்ளிரவு 11:35 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரை இறங்க வந்தது. அந்த நேரத்தில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது கொண்டிருந்ததால், விமானம் தரை இறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

    அதை போல் ஜெர்மன் நாட்டின் பிராங்க்பார்ட் நகரில் இருந்து 268 பயணிகளுடன், நள்ளிரவு 12:05 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூர் திரும்பிச் சென்றது.

    அதைப்போல் இன்று அதிகாலை 1:15 மணிக்கு, கொல்கத்தாவில் இருந்து, 167 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்க வந்த, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் சென்னையில் தரை இறங்க முடியாமல், பெங்களூர் திரும்பிச் சென்றது.

    மேலும் பாரிஸ் நகரில் இருந்து சென்னை வந்த ஏர் பிரான்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஐதராபாத்தில் இருந்து வந்த, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டம் அடித்து விட்டு, தாமதமாக தரையிறங்கின.

    அதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களான பாங்காக், பிராங்க்பார்ட், பாரிஸ் ஆகிய 3 விமானங்கள், தாமதமாக புறப்பட்டு சென்றன.

    சென்னையில் நேற்று நள்ளிரவில் இருந்து, இன்று அதிகாலை வரை காற்று, இடி மின்னலுடன் கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் வருகை, புறப்பாடு 8 விமானங்கள், தாமதம் ஆகி, பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    ×