search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flood relief supplies"

    வெள்ளம் பாதித்த கேரள மக்களுக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சுமார் 4 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
    கோவை:

    கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவை மாநகரம் மேற்கு மாவட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சுமார் 4 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

    நிவாரண பொருட்களை கொண்டு சென்ற வாகனத்தை மேற்கு மாநகர தலைவர் சுபாஷ், மாநகர செயலாளர் சங்கனூர் பிரேம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவை மேற்கு மாநகர இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், துணை செயலாளர் கேபிள் சீனு, பகுதி செயலாளர் சீனிவாசன், இளைஞரணி செயலாளர் வேலு கவுண்டர், வர்த்தக அணி துணை செயலாளர் கோவிந்தராஜ், நல்லாம்பாளையம் மனோகர், சுந்தர் ஆகியோர் செய்து இருந்தனர்.
    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு திண்டுக்கல் வர்த்தகர் சங்கம் சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் வர்த்தகர் சங்கம், ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மாவட்ட கலெக்டர் வினய், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது.

    வர்த்தகர் சங்க தலைவர் குப்புசாமி, செயலாளர் பாலன், பொருளாளர் லியோபிரதீப், துணைத்தலைவர்கள் ஜி.சுந்தரராஜன், கே.ஏ.ஆர். மைதீன், நிர்வாகிகள் வெங்கடேசன், ஸ்ரீதர் ஆகியோர் வழங்கினர்.

    பொருட்களை பெற்றுக் கொண்டு அமைச்சர் சீனிவாசன் பேசுகையில், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதில் திண்டுக்கல் மாவட்டம் முன்னோடியாக உள்ளது. இதுவரை இம்மாவட்டத்தின் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனது சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண உதவியை மாவட்ட கலெக்டரிடம் வழங்கி உள்ளேன். நிவாரண பொருட்கள் வழங்க உள்ளவர்கள் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரை (பொது) தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து நிலக்கடலை வர்த்தகர் சங்கம் சார்பில் ரூ.1.25 லட்சத்திற்கான காசோலையும், திண்டுக்கல் சாகர் மெடிக்கல் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ பொருட்களும் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டு கேரளாவிற்கு அனுப்பப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் உதயகுமார் எம்.பி., மாவட்ட செயலாளர் மருதராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×