search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flower prices hike"

    • ஆவணிமாத முகூர்த்த நாட்களால் பூக்கள் விலை கிடுகிடு உயர்வால் மல்லிகை விலை ரூ.900க்கு விற்கப்பட்டது.
    • நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப் படுவதாலும் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பூமார்க்கெட்டுக்கு சின்னாளபட்டி, செம்பட்டி, கன்னிவாடி, தாடிக்கொம்பு, வெள்ளோடு, வடமதுரை, அய்யலூா உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் கொண்டுவரப்படுகிறது. இங்கிருந்து ஏராளமான வியாபாரிகள் பூக்களை வாங்கிச் செல்கின்றனர். திண்டுக்கல் மட்டுமின்றி வெளியூர்களுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    கடந்த மாதம் வரை கோவில் விழாக்கள் மட்டுமே நடந்த நிலையில் திருமணம் உள்ளிட்ட எந்தவித விசேச நாட்களும் இல்லை. தற்போது ஆவணி மாதம் வளர்பிறை முகூர்த்தம் தொடங்கி உள்ளதாலும் நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப் படுவதாலும் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

    இதனால் அனைத்து பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. ரூ.400 க்கு விற்கப்பட்ட மல்லிகை இன்று ரூ.900க்கு விற்கப்பட்டது. இேதபோல முல்லை ரூ.550, கனகாம்பரம் ரூ.600, ஜாதிப்பூ ரூ.300, செவ்வந்தி ரூ.150 முதல் ரூ.200 வரை, சம்பங்கி ரூ.120, அரளி ரூ.150, கோழிக்கொண்டை ரூ.50, செண்டுமல்லி ரூ.50, ரோஜா ரூ.120 என விற்பனை ஆனது.

    பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துளனர். நாளை மேலும் பூக்களின் விலை அதிகரிக்க கூடும் என்பதால் பெரும்பாலான வியாபாரிகள் இன்றே பூக்களை வாங்கிச் சென்றனர். இதனால் மார்க்கெட்டில் வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது.

    ×