என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flower Show"

    கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு நாளை நடைபெறும் மலர் கண்காட்சியை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். #TNCM #EdappadiPalanisamy
    திண்டுக்கல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 57-வது மலர் கண்காட்சி நாளை (19-ந் தேதி) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.

    நாளை காலை 11 மணிக்கு பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

    மலர் கண்காட்சியை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் பல்வேறு வகையான மலர்கள் தொட்டிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் பூங்கா முழுவதும் பல வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

    மலர் கண்காட்சியை தொடர்ந்து நடைபெறும் கோடை விழாவில் வாத்து பிடிக்கும் போட்டி, படகு போட்டி, நாய்கள் கண்காட்சி, படகு அலங்கார அணிவகுப்பு ஆகியவை நடைபெறுகிறது.

    கொடைக்கானலில் கடந்த 56 ஆண்டுகளாக கோடை விழா நடைபெற்று வருகிறது. இதுவரை அமைச்சர்கள் மட்டுமே பங்கேற்று வந்துள்ளனர். இந்த ஆண்டில்தான் தமிழக முதல்வர் மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

    முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    கொடைக்கானலில் ரூ.10 கோடி செலவில் 10 ஏக்கரில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ரோஜா தோட்டத்தையும் முதல்வர் திறந்து வைக்கிறார். இந்த ரோஜா தோட்டத்தில் 2 ஆயிரம் வகையான 15 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

    கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை காண தற்போதே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கி உள்ளனர். #TNCM #EdappadiPalanisamy
    ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டவர்கள் கானல் நீராகி போய்விடுவார்கள் என்று தினகரனை குறிப்பிடாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கி பேசினார். #TNCM #EdappadiPalanisamy
    ஊட்டி:

    ஊட்டியில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தும், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது-

    மறைந்த முதல்-அமைச்சர் புரட்சித்தலைவி அம்மா நீலகிரி மாவட்டத்தை தனது சொந்த மாவட்டமாக கருதினார். எனவே இந்த மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினார். அவரது வழியில் வந்த இந்த அரசும் நீலகிரி மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியிருப்பதற்கு இங்குள்ள மின்திட்டங்கள் உதவியாக இருக்கிறது. இன்று கூட குந்தா புனல்மின் திட்டத்துக்கு 1850 கோடியில் திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் உங்களை கேட்டுகொள்வதெல்லாம், பொதுமக்கள் மின்சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு யூனிட் மின்சாரமும், நாட்டுக்கு உதவியாக இருக்கும்.


    அம்மாவால் ஓரங்கட்டப்பட்டவர்கள் தங்களை சர்வ வல்லமை படைத்தவர்களாக காட்டிக் கொண்டு மக்களுக்கு சேவை செய்கிறோம் என்று கூறி, ஊர், ஊராக சுற்றுகிறார்கள்.

    அவர்களது எண்ணம் கானல் நீராக மாறிவிடும். காவிரி பிரச்சனையை பொறுத்தவரை 1986-ம் ஆண்டு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கடிதம் எழுதினார். அதன்தொடர்ச்சியாக நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. சட்ட போராட்டங்களின் மூலம் அம்மா, அரசிதழில் வெளியிட செய்தார். மேலும் இந்த பிரச்சனைக்கு தீர்வுக்கான உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். 32 ஆண்டுகளாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் முக்கிய பிரச்சனையாக விளங்கும் காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் இன்று மதியம் இறுதி தீர்ப்பு வழங்குவதாக கூறியுள்ளது. இன்று கிடைக்காவிட்டாலும், 22-ந் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் நிச்சயம் நல்ல தீர்ப்பை வழங்கும்.

    ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பின் அடிப்படையிலேயே இந்த தீர்ப்பு இருக்கும். அம்மா அவர்கள் என்ன நினைத்தாரோ, அதை நடைமுறைபடுத்தும் விதமாக இந்த தீர்ப்பு இருக்கும். இதற்காக இந்த அரசு தொடர்ந்து பாடுபடும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNCM #EdappadiPalanisamy
    ஊட்டியில் 122-வது மலர் கண்காட்சி அரசு தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது. மலர் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார். #OotyFlowerShow #FlowerShow #TNCM #EdappadiPalanisamy
    ஊட்டி:

    ஊட்டியில் மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் கோடை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோடை கால சீசனையொட்டி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியும், கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சியும், ஊட்டியில் ரோஜா கண்காட்சியும் நடைபெற்று உள்ளது.

    முக்கிய நிகழ்ச்சியான 122-வது மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது.

    மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதனை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ரூ.1,850 கோடி மதிப்பிலான குந்தா நீரேற்று புனல் மின் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

    பின்னர் ரூ. 7.49 கோடி மதிப்பில் முடிவுற்ற 7 திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.10.85 கோடியில் 5 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 1,577 பயனாளிகளுக்கு ரூ. 11.25 கோடியில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விழாவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, துரைக்கண்ணு, செல்லூர் ராஜூ, சரோஜா, வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, எரி சக்தி துறை முதன்மை செயலாளர் விக்ரம் கபூர், தோட்டக் கலை இயக்குனர் சுப்பையன்,சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் அமர் குஷ்வாஹா, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, எம்.பி.க்கள் கே.ஆர். அர்ஜூனன், கோபால கிருஷ்ணன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் இணையம் தலைவர் மில்லர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


    மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 10 இடங்களில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டு உள்ளது. மலர் மாடத்தில் பூக்களால் ஆன பூப்பந்தல் போடப்பட்டு உள்ளது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் 15 ஆயிரம் மலர் தொட்டிகளும், புதுப் பூங்காவில் 25 ஆயிரம் மலர் தொட்டிகள் என 40 ஆயிரம் மலர் தொட்டிகள் கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ளது.

    பெங்களூர், ஓசூரில் இருந்து கொண்டு வரப்பட்ட 1 லட்சம் காரனே‌ஷன் மலர்களால் மேட்டூர் அணை மாதிரி உருவம் அமைக்கப்பட்டு உள்ளது. 60 அடி அகலம், 20 அடி உயரத்தில் இவைஅமைக்கப்பட்டு உள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

    10 ஆயிரம் காரனே‌ஷன் மலர்களை கொண்டு செல்பி ஸ்பாட்டும், 3,500 ஆர்கிட் மற்றும் காரனே‌ஷன் மலர்களை கொண்டு பார்பி பொம்மை உருவம் அமைக்கப்பட்டு இருக்கிறது.


    ஆலந்து நாட்டில் இருந்து பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட துலிப் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உழவன் செயலி அமைக்கப்பட்டு உள்ளது.

    பல்வேறு வகை பூக்களால் மலர் பந்தல் போடப்பட்டு இருந்தது. வனத்துறை, தோட்டக்கலைத்துறை, வெலிங்டன் ராணுவ கல்லூரி, ராஜ் பவன், செய்தி மக்கள் தொடர்பு துறை உள்ளிட்ட 15 துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி ஊட்டியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. வருகிற 22-ந் தேதி வரை 5 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.

    கண்காட்சியை பார்வையிட வருகை தரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. #OotyFlowerShow #FlowerShow #TNCM #EdappadiPalanisamy
    ×